இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சஞ்சய் சவுகான் | |
---|---|
பிறப்பு | 1962 போபால், மத்தியப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | (அகவை 62) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
பணி | திரைக்கதை எழுத்தாளர் |
சஞ்சய் சவுகான் (Sanjay Chauhan) (1962 - 12 ஜனவரி 2023) இந்தி சினிமாவில் ஓர் இந்திய திரைக்கதை எழுத்தாளர் ஆவார், அவர் சிறந்த கதைக்கான பிலிம்பேர் விருதை வென்ற ஐ ஆம் கலாம் (2011) திரைப்படத்திற்காக மிகவும் பிரபலமானவர். இவர் திக்மான்சு துலியாவுடன் இணைந்து எழுதிய பான் சிங் தோமர் (2012) படைப்பும் புகழ் பெற்றதாகும்.
இவர் போபாலில் பிறந்து வளர்ந்தார், அங்கு இவரது தந்தை இந்திய ரயில்வேயில் பணிபுரிந்தார், இவரது தாயார் பள்ளி ஆசிரியராக இருந்தபோது, சௌஹான் டெல்லியில் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் மும்பைக்குச் செல்வதற்கு முன்பு, 1990களில் சோனி டிவியில் பன்வார் என்ற குற்றத் தொலைக்காட்சி தொடரை எழுதினார்.[1]
சௌஹான் கல்லீரல் நோயால் 2023 ஜனவரி 12 அன்று இறந்தார்.[2]