சஞ்சய் சுப்பிரமணியம் (பிறப்பு: மே 21, 1961) ஒரு இந்தியவியலாளர், வரலாற்றாளர். இந்தியாவை சேர்ந்த இவர், அமெரிக்காவின் தேசிய நூலகத்தில் உள்ள ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தந்தை கிருஷ்ணசாமி சுப்பிரமணியன் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக பணியாற்றிவர். இவரது அண்ணன் சுப்பிரமணியம் செயசங்கர் நரேந்திர மோடியின் இரண்டாம் அமைச்சவரையில் இந்திய வெளியுறவு அமைச்சராக உள்ளார்.
படிப்பு மற்றும் பணிகள்
[தொகு]
- இளங்கலை (பொருளாதாரம்) மற்றும் முதுநிலை (பொருளாதாரம்) படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். 1987 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
- பொருளாதார வரலாறு பிரிவில் பேராசிரியராக 1993-1995 ஆம் ஆண்டு வரை டெல்லி பல்கலைகழகத்தில் பணி புரிந்தார்.
- பொருளாதார மற்றும் சமூக வரலாறு துறையின் இயக்குநராக பிரெஞ்சு நாட்டில் 1995 -2002 ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார்.
- 2002 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாறு மற்றும் கலாச்சார துறையின் இயக்குநராக பணிபுரிந்தார்
- பின்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தெற்காசியவியல் இயக்குநராக பணி புரிந்துள்ளார்.
- 2012 ஆம் ஆண்டிற்கான இன்போசிஸ் விருது பெற்றுள்ளார்.