சஞ்சய் நிருபம் | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 2009-2014 | |
முன்னையவர் | கோவிந்தா |
பின்னவர் | கோபால் சின்னைய செட்டி |
தொகுதி | வடக்கு மும்பை |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1996-2006 | |
தொகுதி | மகாராட்டிரம் |
மும்பை காங்கிரசு கட்சியின் தலைவர் | |
பதவியில் 15 ஜனவரி 2015 - 25 மார்ச் 2019 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 பெப்ரவரி 1965[1] ரோத்தாஸ், பீகார், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | சிவ சேனா |
வாழிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இணையத்தளம் | sanjaynirupam |
சஞ்சய் நிருபம் (Sanjay Nirupam) (பிறப்பு 6 பிப்ரவரி 1965) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினரும் மற்றும் மும்பை பிராந்திய காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். [2] நிருபம் மாநிலங்களவையில் முதலில் சிவ சேனா கட்சி சார்பிலும் பின்னர் காங்கிரசு கட்சியிலிருந்தும் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். [3] இவர் 2009 முதல் 2014 வரை வடக்கு மும்பை மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் [4]
சஞ்சய், பொதுக் கணக்குக் குழு மற்றும் நிதிக் குழு போன்ற நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்தில் காங்கிரசு கட்சிக்கான 2013-14 வரவு செலவு அறிக்கையின் விவாதத்தைத் தொடங்கி வைத்தார். கட்சியின் செயலாளராகவும், பீகார் மாநிலத்தின் செயலாளராகவும் இருந்தார். தொலைக்காட்சி நேரடி விவாதங்களில் பங்கு பெறும் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் சஞ்சய் நிருபம் தோல்வியடைந்தார். இவர் 2015 இல் மும்பை பிராந்திய காங்கிரசு கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2008ல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இருந்தார்.