சஞ்சய் போய் Sanjay Bhoi | |
---|---|
இந்தியா நாடாளுமன்றம் ப்ர்கர் தொகுதி | |
பதவியில் 2009–2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பைக்மால், ஒடிசா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
முன்னாள் கல்லூரி | தில்லி பல்கலைக்கழகம் |
தொழில் | தகவல் தொழில்நுட்ப வல்லுநர் |
சஞ்சய் போய் (Sanjay Bhoi) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு, ஒடிசாவின் பார்கர் மக்களவை தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]
சம்பல்பூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கிருபாசிந்து போயின் மகனாக பராகரில் உள்ள பைக்மால் கிராமத்தில் சஞ்சய் பிறந்தார். ஒரு தகுதி வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட தயாரிப்பு நிபுணராக அறியப்படுகிறார். சஞ்சய் தில்லி பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்துள்ளார். ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்த இவர், தந்தையின் மறைவுக்குப் பிறகு ஒரிசாவுக்குத் திரும்பினார். அடிமட்ட தலைவராக மாவட்டத்தில் பல சமூக சேவை திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார். மேற்கு ஒரிசாவின் பின்தங்கிய பகுதியை முன்னிலைப்படுத்த கலாச்சார விழாக்களையும் ஏற்பாடு செய்கிறார். ஒரிசாவில் பட்டினி சாவுகளை தடுக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபடுகிறார்.[2]
2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பர்கார் தொகுதியில் போட்டியிடுவதற்காக சஞ்சய் காங்கிரசு கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் தனக்கு அடுத்து இருந்த பாரதிய சனதா கட்சியின் ராதாராணி பாண்டாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். [3] 2014 மக்களவை தேர்தலில் பார்கர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு 3 ஆவது இடம் பிடித்தார்.