சஞ்சி (Sanjhi) விழா என்பது திருமணம் ஆகாத ஊர்ப்பெண்களால் முதன்மையாகக் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். இது இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா போன்ற வட இந்திய மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விழாவானது தசரா விழாவுக்கு முன்னுள்ள நவராத்திரிகளின்போது கொண்டாடப்படுகிறது.[1]
சஞ்சி என்பது ஒரு தாய் கடவுள் வடிவத்தின் பெயராகும், இந்த சஞ்சி மாதாவின் வடிவம் மாட்டுச் சாணத்தில் ஒட்டப்படுகிறது. இதில் விண்மீன், நிலா, கதிரவன், இறைவியின் முகம் போன்ற பல்வேறு வடிவங்களைச் செய்து அவற்றுக்குப் பல்வேறு வண்ணங்கள் தீட்டி அமைக்கிறார்கள். உள்ளூர்க் குயவர்களால் உடலின் பல்வேறு பாகங்களான கைகள், கால்கள், முகம் போன்ற வடிவங்கள் செய்யப்படுகின்றன. அழகுசேர்ப்பதற்காகவும் பத்தியுணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நகைகள் அணிந்தவண்ணமும் ஆயதங்கள் ஏந்தியவண்ணமும் இவ்வடிவங்கள் செய்யப்படுகின்றன. இந்த வடிவங்களை அமைப்பதற்குச் செய்யப்படும் செலவானது குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொருத்து அமைகிறது.[2]
துருக்கை பூசை அல்லது நவராத்திரியின் முதல் நாளில் இந்த உருவம் வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வோரு நாளும் அக்கம்பக்கத்திலுள்ள பெண்களால் பாடல்கள் பாடப்பட்டு, இவ்வுருவத்திற்கு ஆரத்தி எடுக்கப்படுகின்றது. இளம்பெண்கள் அங்கு கூடி, சஞ்சி தாயை வழிபட்டால் பொருத்தமான கணவர் கிடைப்பார் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சங்கீதங்கள் அல்லது பஜனைகள் பாடப்படும். இதற்கு, வயதில் மூத்த பெண்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுவர். இது வழக்கமாக, பெண்கள் அனைவருக்குமான ஒரு நிகழ்வு ஆகும். தங்கள் விருப்பங்களும் ஆசைகளும் நிறைவேறவேண்டுமென விரும்பும் குடும்பங்களால் சுவர்களில் சாஞ்சி மாதா உருவம் அமைக்கப்படுகிறது. விழா முடிந்தபின் கடைசிநாளில் (தசரா அன்று) சாஞ்சி மாதா வடிவம் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கரைக்கப்படுகிறது.[3]
இவ்விழாவின்போது, பெண்கள், ஒவ்வொரு நாளும் இறைவியை வழிபட்டு, படையல் அளிப்பர்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)