சஞ்சீவ் கபூர் | |
---|---|
பிறப்பு | 10 ஏப்ரல் 1964 அம்பாலா, பஞ்சாப், இந்தியா (தற்போதைய அரியானா, இந்தியா) |
கல்வி | புதுடெல்லி, பூசாவில் உள்ள உணவு & ஊட்டச்சத்து உணவக மேலாண்மை தொழில்நுட்பக் கழகம் |
பணி | வாலுவர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் & தொழில் முனைவு |
பாணி | இந்திய உணவுமுறை |
தொலைக்காட்சி | சிக்னேச்சர், கசானா, தி எல்லோ சில்லி, பின் யின் கஃபே, கோல்ட் லீஃப் பங்கெட்ஸ், சுரா வே |
வாழ்க்கைத் துணை | அல்யோனா கபூர் |
விருதுகள் | பத்மசிறீ (2017) |
வலைத்தளம் | |
Sanjeev Kapoor |
சஞ்சீவ் கபூர் (Sanjeev Kapoor) (பிறப்பு: 1964 ஏப்ரல் 10) இந்தியவைச் சேர்ந்த பிரபல சமையல்காரரும், தொழில்முனைவோரும், பிரபல தொலைக்காட்சி ஆளுமையுமாவார். இவர், ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கானா கசானா"வை தொகுத்து வழங்கினார். இது ஆசியாவில் 120 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 2010இல் 500 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.[1] 24 X 7 புட் அன்ட் லைப்ஸ்டைல் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் புட் புட் என்ற புதிய தொலைக்காட்சி நிறுவனத்தின் உலகின் முதல் சமையல்காரர் ஆவார். [2]
கபூர், ஏப்ரல் 1964 இல் இந்தியாவின் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாலாவில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தை பல வட இந்திய நகரங்களில் கழித்தார்.[3][4] புதுடெல்லியின் பூசாவில் உள்ள உணவு & ஊட்டச்சத்து உணவக மேலாண்மை தொழில்நுட்பக் கழகத்திலிருந்து உணவக மேலாண்மைச் சான்றிதழ் பட்டம் பெற்ற பின்னர் 1984ஆம் ஆண்டில் விருந்தோம்பல் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், அலியோனா என்பவரை மணந்தார். இவரது மனைவி டர்மெரிக் விஷன் பிரைவேட் லிமிடெட் என்ற இவரது வணிகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்.[5]
வாரணாசி, நியூசிலாந்து போன்ற பல்வேறு இடங்களில் பல உணவகங்களில் பணியாற்றிய பின்னர், 1992ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள சென்டார் விடுதியில் இளைய நிர்வாக சமையல்காரரானார். எச் அண்ட் எஃப்எஸ் வழங்கிய சிறந்த நிர்வாக சமையல்காரர் (செஃப்) விருது மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்திய சமையல் சங்கங்களின் கூட்டமைப்பு வழங்கிய மெர்குரி தங்க விருது ஆகியவற்றையும் பெற்றவர். சிங்கப்பூர் வான்வழி நிறுவனத்தின் சர்வதேச சமையல் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இவர் உள்ளார்.[6]