சடல்கேரி Satalkheri | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25°08′27″N 75°58′04″E / 25.1407°N 75.9679°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
மாவட்டம் | கோட்டா |
பரப்பளவு | |
• மொத்தம் | 4.89 km2 (1.89 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 14,965 |
• அடர்த்தி | 3,100/km2 (7,900/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | RJ-IN |
சடல்கேரி (Satalkheri) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஒரு நகரமாகும்.
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] சடல்கேரி நகரத்தில் மக்கள் தொகை 14965 பேர்கள் என்றிருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47% ஆக இருந்தனர். சடல்கேரியின் சராசரி கல்வியறிவு 49% ஆகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதம் என்பதை விட குறைவாகும். ஆண்களின் கல்வியறிவு 63% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 33% ஆகவும் இருந்தது. சடல்கேரியின் மக்கள் தொகையில் 21% மக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 வெளியிட்ட அறிக்கையின்படி,[2] சடல்கேரியின் மக்கள் தொகை 15617 ஆக உயர்ந்திருந்தது. மக்கள் தொகையில் ஆண்களீன் எண்ணிக்கை 8335 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 7282 ஆக இருந்தது. சடல்கேரியின் சராசரி கல்வியறிவு விகிதம் 62.6% ஆக உயர்ந்திருந்தது. இது தேசிய சராசரியான 76.6% என்பதை விட குறைவு. ஆண்களின் கல்வியறிவு 76.53 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 46.48 சதவீதமாகவும் இருந்தது. மக்கள் தொகையில் 115 சதவீதம் பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.