சட் பால் மிட்டல் (Sat Paul Mittal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1931 ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலான ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார். பஞ்சாபைச் சேர்ந்த மாநகராட்சி சபை அங்கத்தினராக இருந்தார். 1964 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் சட்டமன்ற அவை உறுப்பினராகவும் பஞ்சாப் அரசாங்கத்தில் துணை அமைச்சராகவும் இருந்தார். 1976 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 1982 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையில் பதவி வகித்தார். சட் பால் மிட்டல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 1972 ஆம் ஆண்டில் பஞ்சாப் பிரதேச காங்கிரசு குழுவின் செயலாளராக பணியாற்றினார்.
இவரது மகன் சுனில் மிட்டல் பார்தி வணிக நிறுவனங்களின் தலைமை நிர்வாகியாக உள்ளார்.
1985 ஆம் மார்ச்சு மாதம் 17 ஆம் தேதியன்று புது தில்லியில் நடைபெற்ற இரண்டாவது தற்காலிக உலக நாடாளுமன்றத்தில் இவர் கலந்துகொண்டார் [1]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)