சட்டவிரோதமாகக் கூடுதல் (Unlawful Assembly) என்பது பொது மக்களின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நோக்கில், பொது இடங்களில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் கலகம், கிளர்ச்சி அல்லது கலவரம் செய்வதைத் தூண்டும் நோக்கில் கூடுவதைக் குறிக்கும்.[1] இந்தியா, கனடா, வங்காள தேசம், ஹாங்காங் ஆகிய நாடுகளில் பொது மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம், 1973 பிரிவு 144 இன் படி, சட்டவிரோதக் கூடுதலை தடை செய்வதற்கு, நீதிமன்ற குற்றவியல் நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பிரிவு 144 அமல்படுத்தப்பட்டப் பகுதியில் சட்டவிரோதமாகக் கூடினால், இச்சட்டத்தின் பிரிவு 141 முதல் 149இன்படி, சட்டவிரோதமாகக் கூடியவர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது தண்டத்தொகை(அபராதம்) விதிக்கப்படும்.[2]
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இந்தியாவில், இந்திய விடுதலை இயக்க வீர்ரகளை ஒடுக்கும் வகையில் 1861 ஆம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டத்தில் இப்பிரிவு சேர்க்கப்பட்டது.