சண்டக்கான் (P186) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Sandakan (P186) Federal Constituency in Sabah | |
சண்டக்கான் மக்களவைத் தொகுதி (P186 Sandakan) | |
மாவட்டம் | சண்டக்கான் மாவட்டம் சண்டக்கான் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 55,542 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | சண்டக்கான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | சண்டக்கான்; எலுபுரம் தஞ்சோங் பாப்பாட் |
பரப்பளவு | 26 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1966 |
கட்சி | சபா மக்கள் கூட்டணி |
மக்களவை உறுப்பினர் | விவியன் வோங் சிர் இயீ (Vivian Wong Shir Yee) |
மக்கள் தொகை | 121,672 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சண்டக்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sandakan; ஆங்கிலம்: Sandakan Federal Constituency; சீனம்: 山打根国会议席) என்பது மலேசியா, சபா, சண்டக்கான் பிரிவு; சண்டக்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P186) ஆகும்.[5]
சண்டக்கான் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து சண்டக்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
சண்டக்கான் பிரிவு என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள ஐந்து நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். சபா; சரவாக் மாநிலங்களில் மட்டுமே பிரிவு எனும் முறைமையைப் பயன்படுத்துகிறார்கள்.
சபா மாநிலத்தின் வடகிழக்கு கடற்கரையில் இருந்து மாநிலத்தின் மத்தியப் பகுதி வரை நெடுக்காக நீண்டுள்ளது. 28,205 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், சபா மாநிலத்தில் 38.3% நிலப் பகுதியைக் கொண்டு உள்ளது. மேலும் இந்தப் பிரிவு சபாவின் ஐந்து நிர்வாகப் பிரிவுகளில் மிகப் பெரிய பிரிவு ஆகும்.
சபாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 19.4% மக்களைக் கொண்டது. பெரும்பாலும் சீனர்கள், ஒராங் சுங்கை, கடசான் - டூசுன், சுலுக் மற்றும் பஜாவ் ஆகிய இனக் குழுவினரைக் கொண்டது.[7]
சண்டக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சண்டக்கான் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[9][10] | |||
3-ஆவது மக்களவை | P116 | 1971-1973 | பீட்டர் லோ சுய் இன் (Peter Lo Sui Yin) |
சபா சீனர் சங்கம் |
1973-1974 | பாரிசான் நேசனல் (சபா சீனர் சங்கம்) | |||
4-ஆவது மக்களவை | P123 | 1974-1978 | பீட்டர் லிம் புய் கோ (Peter Lim Pui Ho) | |
5-ஆவது மக்களவை | 1978-1982 | புங் கெட் விங் (Fung Ket Wing) |
ஜனநாயக செயல் கட்சி | |
6-ஆவது மக்களவை | 1982-1986 | |||
7-ஆவது மக்களவை | P140 | 1986-1990 | ||
8-ஆவது மக்களவை | 1990-1995 | லாய் லுன் சு (Lai Lun Tze) |
ஐக்கிய சபா கட்சி (PBS) | |
9-ஆவது மக்களவை | P161 | 1995-1999 | லாவ் நிகான் சியூ (Lau Ngan Siew |
பாரிசான் நேசனல் (சபா முற்போக்கு கட்சி) (LDP) |
10-ஆவது மக்களவை | 1999-2004 | |||
11-ஆவது மக்களவை | P186 | 2004-2008 | சோங் கோன் மின் (Chong Hon Min) |
சுயேச்சை |
12-ஆவது மக்களவை | 2008-2013 | லியூ ஊய் கியோங் (Liew Vui Keong) |
{{Font color|white| BN (சபா முற்போக்கு கட்சி) (LDP) | |
13-ஆவது மக்களவை | 2013-2018 | வோங் தியேன் பாட் (Wong Tien Fatt) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018-2019 | பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | ||
2019-2022 | விவியன் வோங் சிர் இயீ Yee (Vivian Wong Shir) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
விவியன் வோங் சிர் இயீ (Vivian Wong Shir Yee) | பாக்காத்தான் (PH) | 16,673 | 53.92 | 53.92 | |
அலெக்ஸ் தியன் சிங் கியாங் (Alex Thien Ching Qiang) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 5,642 | 18.25 | 18.25 | |
லாவ் சீ கியோங் (Lau Chee Keong) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 5,054 | 16.35 | 16.35 | |
பீட்டர் ஊ சாங் லிக் (Peter Hu Chang Lik) | சுயேச்சை (Independent) | 2,342 | 7.57 | 7.57 | |
சேக் லோக்மான் (Sheikh Lokeman) | சுயேச்சை (Independent) | 962 | 3.11 | 3.11 | |
லிதா தான் அப்துல்லா (Lita Tan Abdullah) | சுயேச்சை (Independent) | 246 | 0.80 | 0.80 | |
மொத்தம் | 30,919 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 30,919 | 98.05 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 614 | 1.95 | |||
மொத்த வாக்குகள் | 31,533 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 55,542 | 55.67 | 1.23 | ||
Majority | 11,031 | 35.67 | 17.68 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [11] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)