பேராசிரியர் சண்முகம் செயக்குமார் Shunmugam Jayakumar | |
---|---|
![]() | |
மூத்த அமைச்சர் | |
பதவியில் 1 ஏப்ரல் 2009 – 21 மே 2011 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | எவருமில்லை |
தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2005 – 31 அக்டோபர் 2010 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | டோனி டேன் கெங் யம் |
பின்னவர் | வொங் கான் செங் |
சிங்கப்பூரின் துணைப் பிரதமர் | |
பதவியில் 12 ஆகத்து 2004 – 1 ஏப்ரல் 2009 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | லீ சியன் லூங் |
பின்னவர் | தியோ சீ ஹீன் |
வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 2 சனவரி 1994 – 12 ஆகத்து 2004 | |
பிரதமர் | கோ சொக் டொங் |
முன்னையவர் | வொங் கான் செங் |
பின்னவர் | ஜார்ஜ் யோ |
சட்ட அமைச்சர் | |
பதவியில் 12 செப்டம்பர் 1988 – 30 ஏப்ரல் 2008 | |
பிரதமர் | லீ குவான் யூ கோ சொக் டொங் லீ சியன் லூங் |
முன்னையவர் | எட்மண்ட் வில்லியம் பார்க்கர் |
பின்னவர் | பி. சுப்பிரமணி |
உட்துறை அமைச்சர் | |
பதவியில் 2 சனவரி 1985 – 1 சனவரி 1994 | |
பிரதமர் | லீ குவான் யூ கோ சொக் டொங் |
முன்னையவர் | சுவா சியான் சின் |
பின்னவர் | வொங் கான் செங் |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 23 டிசம்பர் 1980 – 7 மே 2011 | |
முன்னையவர் | சாரி பின் தாடின் |
பின்னவர் | லிம் சுவீ சேய் |
ஐநாவுக்கான நிரந்தரச் செயலர் | |
பதவியில் 1971–1974 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஆகத்து 1939 சிங்கப்பூர் |
தேசியம் | சிங்கப்பூரர் |
அரசியல் கட்சி | மக்கள் செயல் கட்சி |
துணைவர் | லலிதா ராஜாராம் |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் மாணவர் | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் |
தொழில் | வழக்கறிஞர், தூதுவர் |
பேராசிரியர் சண்முகம் ஜெயக்குமார் (Shunmugam Jayakumar, பிறப்பு: 12 ஆகத்து 1939), முன்னாள் சிங்கப்பூர் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தூதுவரும் ஆவார். இவர் இந்திய மரபுவழித் தமிழர் ஆவார். ஆளும் மக்கள் செயல் கட்சியின் முன்னாள் உறுப்பினரான இவர் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர், தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், துணைப் பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், உட்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் தொழிலமைச்சர் ஆகிய அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர். பெடோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2011 மே மாதத்தில் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.[1] தற்போது இவர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தின் ஆலோசனை சபைத் தலைவராகவும்,[2] அப்பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுச் சட்டப் பேரவையின் காப்பாளராகவும் பணியாற்றுகிறார்.[3]