சதா கௌர் | |
---|---|
இராணி | |
ஒரு போரில் சதா கௌர் | |
பிறப்பு | 1762கள் இராக் காலன், தெல்லேவாலியா சிற்றரசு சீக்கிய சிற்றரசுகள் (தற்போது பஞ்சாப், இந்தியா) |
இறப்பு | 1832 (அகவை 69–70) லாகூர், பஞ்சாப் பகுதி, சீக்கியப் பேரரசு (தற்போது பஞ்சாப், பாக்கித்தான்) |
துணைவர் | குர்பக்சு கன்கையா |
குழந்தைகளின் பெயர்கள் | மெல்தாப் கௌர் |
தந்தை | தசுவந்த் சிங் தாலிவால் |
மதம் | சீக்கியம் |
இராணி சதா கௌர் (Sada Kaur; சுமார் 1762 - 1832) 1789 முதல் 1821 வரை கன்கையா சிற்றரசின் தலைவராக இருந்தார். இவர், செய்சிங் கன்கையாவின் மகனான குர்பக்சு சிங் கன்கையாவின் மனைவியாவார். இவர், சில சமயங்களில் சர்தார்னி சதா கௌர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.[1]
1785இல் தனது கணவரின் இறப்புக்கும் பின்னரும், 1789இல் இவரது மாமனார் இறந்த பிறகும், இவர் கன்கையா அரசின் தலைவரானார்.[2] ஒரு புத்திசாலியான லட்சிய பெண்மணியான இவர், ( சீக்கிய பேரரசை நிறுவிய ரஞ்சித் சிங்கின் மாமியார் ஆவார். மேலும், பஞ்சாபில் அவர் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சதா கௌர், 1762இல் சர்தார் தசுவந்தா சிங் தாலிவாலுக்கு தாலிவால் ஜாட் சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.[3] கன்கையா சிற்றரசின் சந்து ஜாட் ஆட்சியாளரான செய் சிங்கின் மூத்த மகனும் வாரிசுமான 7 வயது குர்பக்சு சிங்கை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் 1768இல் நடைபெற்றது. இவர்களுக்கு 1782இல் மெக்தாப் கௌர் என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது.[4] [5]
இவரது கணவர் குர்பக்ச் சிங், சுகர்சாகியா, ராம்கர்கியா, சன்சார் சந்த் கடோச் ஆகிய அரசுகளுக்கு எதிராக படாலா போரில் சண்டையிட்டு இறந்தார். 1785ஆம் ஆண்டில், தனது மகள் மெக்தப் கௌரை சுகர்சாகியா சிற்றரசின் தலைவரின் மகனான ரஞ்சித் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்தார். அவர்கள் திருமணம் 1786 இல் நடைபெற்றது.[6] இருப்பினும் திருமணம் தோல்வியில் முடிந்தது. தன்னுடைய தந்தையை ரஞ்சித்தின் தந்தை கொலை செய்தார் என்பதை மெகதப் கவுர் கடைசிவரை மன்னிக்கவே இல்லை. திருமணத்திற்குப் பின்னரும் அவர் தன்னுடைய தாயாருடனேதான் வாழ்ந்தார். இதானால் 1798 இல் நாகை சிற்றரசைச் சேர்ந்த ராச் கவுர் என்பவரை ரஞ்சித் சிங் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் [7]. மெகதப் கவுர் 1813 ஆம் ஆண்டில் இறந்தார்
1789இல், இவரது மாமனார், செய்சிங் கன்கையாவும் இறந்தார்.[6] இவர் பின்னர் கன்கையா ஆட்சியின் தலைமையையும் அதன் 8,000 குதிரைப்படை வீரர்களின் விசுவாசத்தையும் ஏற்றுக்கொண்டார்.[4] தனது தந்தை, மகாசிங் இறந்த பிறகு, 1792இல் ரஞ்சித் சிங் மகாசிங் சுக்கெர்சாக்கியா சிற்றரசின் தலைவராக நியமிக்கப்பட்டார். சதா கௌர் அவரது பிரதிநிதியானார்.[4] ரஞ்சித் சிங்கின் எழுச்சிக்கு இவர் உதவினார்.
பாங்கி சிற்றரசின் ஆட்சியிலிருந்த இலாகூர் மக்கள் இவரிடமும் ரஞ்சித் சிங்கிடமும் லாகூரை கைப்பற்றுமாறு கோரினர். 7 ஜூலை 1799இல் 5,000 துருப்புக்கள் அடங்கிய ரஞ்சித் சிங்கின் படை லாகூரைத் தாக்கியது. லாகூர் இவர் களிடம் வீழ்ந்தது. சதா கௌர் ரஞ்சித் சிங்கை 1801இல் இலாகூரின் அரசனாக்கினார்.
அமிருதசரசு, சினியோட், கசூர், அட்டோக், அசரா ஆகிய ஐந்து போர்களில் இவர் ரஞ்சித் சிங்குடன் இருந்தார். 1798இல் ரஞ்சித் சிங் மறுமணம் செய்து கொண்டார். இவர், அதை அங்கீகரிக்கவில்லை.[8]
இவர் இறுதியில் ரஞ்சித் சிங்குடனான உறவை முறித்துக் கொண்டார். பின்னர் தனது சொந்த மாநிலத்தை ஆள நினைத்தார். ஆனால் ரஞ்சித் சிங் இவரது இயக்கங்களை கட்டுப்படுத்தினார். 1820 வரை இவர் தனது பெரும்பான்மையான தோட்டங்களை கொண்டிருந்தார்.[4]