சதி லீலாவதி Sathi Leelavathi | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | கமல்ஹாசன் |
கதை | அனந்து |
திரைக்கதை | பாலு மகேந்திரன் |
வசனம் | கிரேசி மோகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரமேஷ் அரவிந்த் கல்பனா ஹீரா கமல்ஹாசன் கோவை சரளா |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | பாலு மகேந்திரா |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 15 சனவரி 1995 |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2.95 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹13 crore or US$1.6 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹8 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹36 crore or US$4.5 மில்லியன்) |
சதி லீலாவதி (Sathi Leelavathi) என்பது 1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாளன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா மற்றும் கமல்ஹாசன் நடித்திருந்தனர்.[2][3]
இத்திரைப்படம் 1999 ஆண்டு இந்தி மொழியில் 'பீவி நம்பர் 1' மற்றும் 2005 ஆண்டு கன்னடம் மொழியில் 'ராமா சாமா பாமா' எனும் பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ரமேஷ் அரவிந்த் மற்றும் கமல்ஹாசன் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தனர்.
இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[4][5]
எண் | பாடல் | பாடியவர்கள் |
---|---|---|
1 | "எத்தனை வகை எத்தனை வகை" | குழுவினர் |
2 | "மாருகோ மாருகோ" | கமல்ஹாசன், சித்ரா |
3 | "ஒரு தாரம் தலையில் வெச்சு" | பென் சுரேந்தர் |
4 | "மகராஜனோடு ராணி" | பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா |