தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | வெதகெதர சதீர ராசென் சமரவிக்கிரம | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 30 ஆகத்து 1995 கொழும்பு, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக்காப்பு, துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 143) | 6 அக்டோபர் 2017 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 2 டிசம்பர் 2017 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 185) | 20 அக்டோபர் 2017 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 30 செப்டம்பர் 2019 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 23 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 72) | 26 அக்டோபர் 2017 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 9 அக்டோபர் 2019 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கோல்ட்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 9 அக்டோபர் 2019 |
சதீர சமரவிக்கிரம (Sadeera Samarawickrama) என்பவர் இலங்கையை சேர்ந்த ஒரு வலதுகை துடுப்பாட்ட வீர்ராவார்[1].1995 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 அன்று இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் வெதகெதர சதீர ராசன் சமரவிக்கிரம என்பதாகும். இலங்கை தேசிய அணியின் அனைத்து வகையான துடுப்பாட்டப் போட்டி அணிகளிலும் உறுப்பினராக சமரவிக்கிரம இருந்துள்ளார். கொழும்பு நகரிலுள்ள புனித வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் இவரும் ஒருவராவார். 2014 ஆம் ஆண்டில் பட்டியல் அ வகைப் போட்டிகளிலும், 2015 ஆம் ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடி வந்த இவர் 2017 ஆம் ஆண்டில் பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமாகி விளையாடி வருகிறார். தற்போது வரை இவர் 45 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2671 ஓட்டங்களையும், 58 பட்டியல் அ வகை போட்டிகளில் விளையாடி 1649 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 138 ஒட்டங்களையும் 4 பன்னாட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 120 ஓட்டங்களையும் சமரவிக்கிரம எடுத்துள்ளார்.
2016–17 பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் அதிகமான ஓட்டங்களை சேகரித்துள்ளார். இப்போட்டித் தொடரில் 10 போட்டிகளின் 19 இன்னிங்சுகளில் இருந்து 1,016 ஓட்டங்களைப் பெற்றார்[2].
நவம்பர் 2017 இல் இலங்கை கிரிக்கெட்டின் ஆண்டு விருதுகளில் 2016–17 பருவத்திற்கான உள்நாட்டு துடுப்பாட்டப் போட்டியில் சிறந்த மட்டையாளராக தேர்வு செய்யப்பட்டார்[3]. மார்ச் 2018 இல், அவர் 2017–18 சிறந்த நான்கு மாகாண போட்டிகளுக்கான காலியின் அணியில் இடம் பெற்றார் [4][5]. அடுத்த மாதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த மாகாண ஒருநாள் போட்டிக்கான காலியின் அணியிலும் அவர் இடம் பெற்றார் [6] .
ஆகத்து 2018 இல் இவர் 2018 ஆம் ஆண்டுக்கான சிறீலங்கா துடுப்பாட்டம் டி 20 லீக் போட்டியின் தம்புல்லாவின் அணியில் இடம் பெற்றார் [7]. பிப்ரவரி 2019 இல், 2018–19 ஆம் ஆண்டுக்கான சிறீலங்கா துடுப்பாட்டம் டி 20 லீக் போட்டியின் இருபதுக்கு -20 போட்டியின் முதல் நாளில், காவல்துறை விளையாட்டு சங்கம் அணிக்கு எதிராக சமரவிக்ரமா ஆட்டமிழக்காத சதம் அடித்தார் [8]. மார்ச் 2019 இல், 2019 சிறப்பு மாகாண ஒருநாள் போட்டிக்கான கண்டி அணியில் இடம் பெற்றார் [9] .
ஏ.சி.சி வளர்ந்து வரும் அணிகள் ஆசியா கோப்பை 2017 போட்டியில் இலங்கை அணியின் ஓர் பகுதியாக சமரவிக்ரமா இருந்தார் [10]. இறுதிப் போட்டியில் 45 ரன்கள் எடுத்து பாக்கித்தானுக்கு எதிரான குறைந்த ஓட்டப் போட்டியில் இலங்கை வெற்றி பெற காரணமாக இருந்தார். இலங்கை போட்டியை வென்றது அதுவே முதல் முறையாகும் [11][12].
2017 ஆம் ஆண்டில் இவர் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.அக்டோபர் 16 இல் அபுதாபி துடுப்பாட்ட அரங்கத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணி சார்பாக பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் 9 இல் லாகூர் துடுப்பாட்ட அரங்கத்தில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.
செப்டம்பர் 2017 இல், ஐக்கிய அரபு எமிரேட்சில் பாக்கித்தானுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் அவர் இடம் பெற்றார் [13]. இலங்கையின் முதல் பகல்-இரவு துடுப்பாட்டப் போட்டியில் 6 அக்டோபர் 2017 அன்று பாக்கித்தானுக்கு எதிராக இலங்கைக்காக இவர் அறிமுகமானார் [14]. முதல் இன்னிங்சில், அவர் 38 ரன்கள் எடுத்தார், மேலும் அப்போட்டியில் சதம் அடித்த திமுத் கருணாரத்னவுடன் கூட்டாக 68 ரன்கள் எடுத்தார். இவரது ஆட்டம் இரு வகையில் மகேலா செயவர்தனாவின் ஆட்டத்தைப் போல இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்தனர் [15].
அக்டோபர் 2017 இல், ஐக்கிய அரபு எமிரேட்சில் பாக்கித்தானுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் இவர் இடம் பெற்றார் [16].இவர் அக்டோபர் 20, 2017 அன்று பாக்கித்தானுக்கு எதிராக இலங்கைக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் [17]. இரண்டு போட்டிகளிலும் அவர் ஓட்டமெடுக்காமல் ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோருடன் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓட்டமெடுக்காமல் ஆட்டமிழந்த மூன்றாவது மட்டையாளர் ஆனார்.
அதே மாதத்தின் பிற்பகுதியில், பாக்கித்தானுக்கு எதிரான தொடர்களுக்காக இலங்கையின் இருபது -20 சர்வதேச (டி 20 ஐ) அணியில் அவர் இடம் பெற்றார். [18] இந்த போட்டியில் குச்சி காப்பாளராக இப்போட்டியில் இவர் விளையாடினார் [19]. மே 2018 இல், 2018–19 பருவத்திற்கு முன்னதாக இலங்கை துடுப்பாட்ட தேசிய அணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 33 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இவரும் இருந்தார் [20][21].