சதீஷ் சர்தார் அல்லது சதீஷ் சந்திர சர்தார் (Satish Sardar or Satish Chandra Sardar ;1902 - 19 சூன் 1932) ஒரு வங்காளப் புரட்சியாளரும், வங்காளத்தில் உப்புச் சத்தியாகிரக இயக்கத்தின் தியாகியும் ஆவார்.
சதீஷ் சர்தார் பிரித்தானிய இந்தியாவில் தற்போது நதியா மாவட்டத்தின் தெகட்டா உட்பிரிவிலுள்ள சந்தர்காட் கிராமத்தில் பிரஜராஜ் சர்தார் என்பவருக்கு மகனாப் பிறந்தார்.[1] 1932 இல் சட்டவிரோத இயக்கத்தின் ஒரு பகுதியாக வரி கொடா இயக்கம் தொடங்கப்பட்டது. இது, முதன்முதலில் 1932 ஏப்ரல் 13 அன்று சந்தர்காட் கிராமத்தில் தொடங்கப்பட்டது. சர்தார் இந்த இயக்கத்தில் சேர்ந்தார்.[2]
19 சூன் 1932 அன்று, இந்திய தேசிய காங்கிரசின் மாவட்டக் குழு மாநாடு தெகட்டாவில் நடத்தப்பட்டது. இதன் காரண்மாக உள்ளூர் காவல்துறை இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனை எதிர்த்து சர்தார் காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடியை உயர்த்தி போராடினார். அப்போது இவர் மீது காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இவர் குண்டடிப் பட்டு இறந்தார். சந்தர்காட்டில், இவரது நினைவாக 1956இல் ஒரு தொடக்கப்பள்ளி நிறுவப்பட்டது.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)