சத்தர் மன்சில் | |
---|---|
![]() இலக்னோவில் அமைந்துள்ள சத்தர் மன்சில் | |
அமைவிடம் | இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூற்றுகள் | 26°51′31.29″N 80°55′56.62″E / 26.8586917°N 80.9323944°E |
கட்டிட முறை | முகலாயக் கட்டிடக்கலை |
சட்டர் மன்சில் (Chattar Manzil), அல்லது குடை அரண்மனை என்பது உத்தரப் பிரதேசத்தின் இலக்னோவில் அமைக்குள்ள ஒரு கட்டிடமாகும். இது அயோத்தி நவாபுகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கான அரண்மனையாகச் செயல்பட்டது.[1]
இது நவாப் காசி உதீன் ஐதரின் உத்தரவின் பேரில் கட்டப்பட்டது. பின்னா அவரது மரணத்திற்குப் பிறகு அவரது வாரிசான நவாப் நசீர் உதீன் ஐதரால் முடிக்கப்பட்டது.[2][3][4]
கோமதி ஆற்றின் கரையில் சத்தர் மன்சில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய கட்டடத்தையும் சிறிய கட்டடத்தையும் கொண்டிருந்தது. தற்போது பெரியது மட்டுமே உள்ளது. இந்த இரண்டு கட்டிடங்களும் இந்தோ-ஐரோப்பிய-நவாபி கட்டிடக்கலை பாணிக்கு எடுத்துக்காட்டுகளாக இருந்தன. பெரிய கட்டடம் பல ஆண்டுகளாக பல மாற்றங்களை சந்த்தித்து வந்துள்ளது கட்டிடங்களுக்கு மகுடம் சூட்டும் எண்கோணப் மண்டபங்களில் உள்ள சத்ரிகளின் (குடை வடிவ குவிமாடங்கள்) நினைவாக அரண்மனைக்குப் பெயரிடப்பட்டன.[5] கம்பீரமான கட்டிடத்தில் பெரிய நிலத்தடி அறைகள் மற்றும் குடை போன்ற ஒரு குவிமாடமும் உள்ளது.[1][2][3]
1780 ல் இதன் கட்டுமானம் தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த அரண்மனை பலவித மாற்றங்களுடன் அயோத்தி நவாப் களான சாதத் அலி கான் மற்றும் வாஜித் அலி ஷா மற்றும் ஆங்கிலேயர்கள் உட்பட பல உரிமையாளர்களிடம் இருந்துள்ளது.[6]
இது அவத் ஆட்சியாளர்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் அரண்மனையாக செயல்பட்டது. பின்னர் 1857இல் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சியின் போது இந்தக் கட்டிடம் இந்தியப் புரட்சியாளர்களின் கோட்டையாக மாறியது.[4]
இதன் ஒரு பகுதி சிப்பாய்க் கிளர்ச்சியின்போது ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது.[7] 1857 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஆங்கிலேய அரசாங்கம் ஒரு அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு கட்டிடத்தை ஒதுக்கியது. அந்நிறுவனம் இதை பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஒரு கேளிக்கை விடுதியாகப் பயன்படுத்தியது. 1947 வரை, சத்தர் மன்சில் ஐக்கிய சேவைகள் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டது.[2][4]
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தக் கட்டிடம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்திற்கு ஒதுக்கப்பட்டது. இது 1950 முதல் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனமாகப் பயன்படுத்தப்பட்டது.[2][4] ஆனால் தற்போது அந்நிறுவனம் இங்கு செயல்படவில்லை.[3]
உத்தரப் பிரதேச அரசு அரண்மனையை புதுப்பித்து, மாநில தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துவிட்ட பிறகு, இரண்டு அருங்காட்சியகங்கள் மற்றும் ஒரு நூலகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.[6]
1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் காலத்திலிருந்து, பெலீச்ச பியாத்தோ, சாமுவேல் போர்ன்,[5] தரோகா உப்பாஸ் அலி மற்றும் தாமஸ் ரஸ்ட் போன்ற நபர்களால் இது அடிக்கடி புகைப்படம் எடுக்கப்பட்டது.
அவுத்தின் நவாப்பிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டிசம்பர் 2013 இல், திரைப்படத் தயாரிப்பாளர் முசாபர் அலியின் ரூமி அறக்கட்டளையால் சத்தர் மன்சிலில் இரண்டு நாள் வாஜித் அலி ஷா விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.[8] ஜாலி எல்.எல்.பி 2 என்ற இந்தித் திரைப்படம் சத்தர் மன்சிலில் படமாக்கப்பட்டது.[9]
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)