சத்திய நாராயண சாசுத்திரிSatya Narayana Shastri | |
---|---|
பிறப்பு | உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி | மருத்துவர், அறிஞர், கல்வியாளர் |
அறியப்படுவது | ஆயுர்வேதா |
விருதுகள் | பத்ம பூசண் |
சத்ய நாராயண சாசுத்திரி (Satya Narayana Shastri) ஓர் இந்திய ஆயுர்வேத மருத்துவர் மற்றும் சமசுகிருத அறிஞர் ஆவார். [1] 1887 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராசேந்திர பிரசாத்திற்கு முதல் கௌரவ மருத்துவர் ஆக இருந்தார். சரக சம்கிதை என்ற மருத்துவ நூலை எழுதினார், இந்நூல் 1962 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது [2] [3] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத கல்லூரி மற்றும் சம்பூர்ணானந்த் சமசுகிருத விசுவவித்யாலயாவின் அரசு ஆயுர்வேத கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார். இந்திய அரசு இவருக்கு 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது [4]