மேலைச் சாளுக்கியர் (பொ.ஊ. 973-1200) | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||
சத்தியாசிரயன் (Satyasraya ஆட்சிக்காலம் கி.பி.997-1008 ) சத்திகா, இரிவபெட்டங்கா என்பவை இவரது வேறு பெயர்கள். இவர் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவார். சத்தியாசிரயன் சோழர், பரமரா மன்னர்கள், மத்திய இந்தியாவின் செடி அரசு, குஜராத் சாளுக்கியர் (இந்தியாவின் தெற்குச் சாளுக்கியரைக் குழப்பிக் கொள்ளக் கூடாது ) ஆகியோரிடம் பல போர்களைப் புரிந்தார். இந்த போர்களின் முடிவுகள் வெற்றி தோல்விகளையுடைய கலவையாகும். [1] இவரது தந்தை இரண்டாம் தைலப்பன் ஆட்சியின் போது இளவரசனாக இருந்த சத்தியாசிரயன் தன்னை ஒரு சிறந்த வீரனாக நிலைநிறுத்திக்கொண்டான். [2] சத்தியாசிரயன் கன்னடப் புலவரான் ரண்ண என்பவரை ஆதரித்தார். இப்புலவர் சத்தியாசிரயனை வலிமையில் பாண்டவ இளவரசன் பீமனுடன் தனது காவியமான சாகசபீமவிஜய-வில் ஒப்பிட்டுள்ளார்.[3][4][5] இவர் அகலவர்சா, அகலன்கச்சாரிதா, சாகசபீமா போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தார். [6]