சந்தானம் | |
---|---|
பிறப்பு | 21 சனவரி 1980[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | மேடைச் சிரிப்புரை, தொலைக்காட்சி நடிகர், நடிகர், நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | உஷா |
சந்தானம் (பிறப்பு - 21 சனவரி, 1980, சென்னை) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சந்தானம் என்றென்றும் புன்னகை படத்தில் பேசிய வசனம் சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டது.[2]