சந்தியா ராகம்

சந்தியா ராகம்
Sandhya Raagam
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புபாலு மகேந்திரா
கதைஅகிலா மகேந்திரா
திரைக்கதை(வசனம்) பாலு மகேந்திரா
இசைஎல். வைத்தியநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புபாலு மகேந்திரா
விநியோகம்தூர்தர்ஷன்
ஓட்டம்84 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சந்தியா ராகம் (Sandhya Raagam) 1989 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திரா எழுதி, தயாரித்து, இயக்கிய இத்திரைப்படத்தில் சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா, ஓவியர் வீர சந்தானம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற 37ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் இத்திரைப்படம் சிறந்த குடும்பப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

திரைக்கதை

[தொகு]

80 வயது முதியவரான சொக்கலிங்கம், தன் மனைவியின் மறைவுக்குப் பின், தான் வாழ்ந்த கிராமத்தை விட்டு நீங்கி சென்னையில் தன் அண்ணன் மகனான வாசுவின் வீட்டில் தங்குவதற்கு வருகிறார். வாசு தன் குடும்பத்துடன் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கிறான். அவனால் தன் குடும்பத்தின் தேவைகளையே நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் சொக்கலிங்கத்தை ஒரு மேலதிக பாரமாக அவன் உணருகிறான். அவனது மனைவி சொக்கலிங்கம் மீது பாசமும் அனுதாபமும் கொண்டிருந்தாலும், குடும்ப நிலை காரணமாக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவர்கள் படும் கஷ்டம் காரணமாகச் சொக்கலிங்கம் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்கிறார். ஆயினும் பாசம் விடவில்லை. குடும்ப பாசம் எப்படி எப்படி வெளியாகிறது என்பதைச் சொல்வதே மீதிக் கதையாகும்.

நடிகர்கள்

[தொகு]

நடிகர் பட்டியல் திரைப்படத் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

  • கே. ஏ. சொக்கலிங்க பாகவதர் - சொக்கலிங்கம்
  • அர்ச்சனா - வாசுவின் மனைவி
  • ஓவியர் வீரசந்தானம் - வாசு
  • பேபி ராஜலட்சுமி - வாசுவின் குழந்தை
  • சீதா பாட்டி
  • சூரியகாந்தம்மா
  • தாதாஜி
  • பிரணயமூர்த்தி
  • சக்திவேல்
  • ஆட்டோ ராஜா
  • ரவி
  • டால்ரிக்ஸ்
  • மீனாகுமாரி
  • ரேவதி
  • நிர்மலா
  • குமாரி

கருப்பொருள்

[தொகு]

திரைப்படத்தின் மையக் கரு முதுமையின் அனுபவங்களைச் சுற்றி அமைந்துள்ளது[1]

தயாரிப்பு விபரம்

[தொகு]

திரைப்படம் மிகக் குறைந்த செலவுடன் தயாரிக்கப்பட்டது. தனது முந்தைய திரைப்படங்கள் போல பாலு மகேந்திராவே வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என பல துறைகளையும் கையாண்டார். ராமசாமி கலை அம்சத்தையும், வி. எஸ். மூர்த்தி, ஏ. எஸ். லட்சுமிநாராயணன் ஆகியோர் ஒலிப்பதிவையும் மேற்கொண்டார்கள்.[2] இத் திரைப்படத்தில் பாடல்கள் இடம் பெறவில்லை. பின்னணி இசையை எல். வைத்தியநாதன் அமைத்தார்.

வரவேற்பு

[தொகு]

சந்தியா ராகம் இதுவரை எந்தத் திரையரங்கிலும் வெளியிடப்படவில்லை. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.[3] 1990 ஆம் ஆண்டு சிறந்த குடும்பச் சித்திரத்துக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[2] ஒரு வருடம் கழித்து இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.[4] 2007 ஆம் ஆண்டு தி இந்து நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில், வீடு, சந்தியா ராகம் இரண்டு திரைப்படங்களுமே தான் அதிகம் தவறு செய்யாத, குறைந்த விட்டுக்கொடுப்புகளுடன் கூடிய திரைப்படங்கள் என பாலு மகேந்திரா குறிப்பிட்டுள்ளார்.[5]

இந்தத் திரைப்படத்தின் மூலப் பிரதி (நெகடிவ்) இப்போது இல்லை என 2011 ஆம் ஆண்டில் பாலு மகேந்திரா கூறினார்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Baskaran 2013, ப. 131.
  2. 2.0 2.1 "37th National Film Festival" (PDF). Directorate of Film Festivals. p. 22. Archived from the original (PDF) on 14 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2016.
  3. Prasanna, R. S. (13 February 2009). "The calling cards for box office success". The Times of India. http://www.newindianexpress.com/magazine/article36151.ece?service=print. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  4. "14th International Film Festival of India" (PDF). Directorate of Film Festivals. p. 124. Archived from the original (PDF) on 13 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "Tamil books reviewed at Landmark". The Hindu (Chennai, India). 10 ஜனவரி 2007 இம் மூலத்தில் இருந்து 2007-01-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070121161207/http://www.hindu.com/2007/01/10/stories/2007011020440200.htm. 
  6. N, Venkateswaran (14 February 2014). "Balu Mahendra, who made his visuals speak, dies at 74". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 22 டிசம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222000018/http://timesofindia.indiatimes.com/india/Balu-Mahendra-who-made-his-visuals-speak-dies-at-74/articleshow/30363139.cms. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 
  7. "The digital picture: from reel to HD". தி இந்து. 26 டிசம்பர் 2011 இம் மூலத்தில் இருந்து 2014-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140715090421/http://www.thehindu.com/todays-paper/tp-national/the-digital-picture-from-reel-to-hd/article2748344.ece. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016. 

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]