சந்திரமண்டோல் | |
---|---|
இளவரசி விசுத்கிரசாத் | |
பிறப்பு | பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து | 24 ஏப்ரல் 1855
இறப்பு | 14 மே 1863 பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து | (அகவை 8)
மரபு | சக்ரி வம்சம் |
தந்தை | மோங்குத் (நான்காம் ராமா) |
தாய் | தெப்சிரிந்திரா |
மதம் | பௌத்தம் |
'சந்திரமண்டோல் சோபோன் பாகியாவதி, [1] [2] (Chandrmondol Sobhon Bhagiawati) (24 ஏப்ரல் 1855 - 14 மே 1863) ) இளவரசி விசுத்கிரசாத் என்றும் இளவரசி பா-யிங் அல்லது சோம்தெட்ச் சோ பா-யிங் [3] என்றும் ("மாண்புமிகு இளவரசி") என்றும் அழைக்கப்படும் இவர் தாய்லாந்தின் இளவரசியும், மன்னர் மோங்குத் மற்றும் ராணி டெப்சிரிந்திராவின் மகளுமாவார்.
இளவரசி சந்தர்மண்டோல் என்ற பெயரில் 1855 ஏப்ரல் 24 அன்று பாங்காக்கில் உள்ள பெரிய அரண்மனையில், மோங்குத் மன்னருக்கும், டெப்சிரிந்திரா அரசிக்கும் ஒரே மகளாகப் பிறந்தார். இவருக்கு, இளவரசர் சுலாலாங்கார்ன் என்ற ஒரு மூத்த சகோதரும், இளவரசர் சதுரோன்ராஸ்மி, இளவரசர் பானுரங்சி சவாங்வோங்சே என்ற இரு இளைய சகோதரர்களும் இருந்தனர். [4] [5]
இவர் ஆரம்பத்தில் சந்தர்மண்டோல் என்று பெயரிடப்பட்டார். மேலும் 1862 ஆம் ஆண்டில் மன்னர் மோங்குத்தின் உத்தரவின் பேரில் சந்திரமண்டோல் சோபோன் பாகியாவதி என்று மாற்றப்பட்டார். இவரது தந்தை இவரை "நாங் நு" (தாய்: "சிறிய மகள்") என்றும் அழைத்தார். [6] மேலும், அரண்மனை அதிகாரிகள் அன்பாக இவரை "பா-யிங்" என்று அழைத்தனர். [7]
இவர் ஆங்கில மொழியிலும், மேற்கத்திய பழக்கவழக்கங்களிலும் அண்ணா லியோனோவன்ஸ் என்ற ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டார். [8]
இவர் 1863 மே 14 அன்று வாந்திபேதியால் இறந்தார். பேங்காக்கிலுள்ள சனம் லுாங்க் கல்லறையில் புதைக்கப்பட்டார். 1867 ஆம் ஆண்டில் இளவரசர் சுலலாங்கொர்ன் அரசராக முடிசூட்டிக் கொண்டபோது, இவருக்கு மரணத்திற்குப் பிறகு 3 மே 1884 அன்று இளவரசி விசுத்கிரசாத் ("தூய்மையான பெண்") என்று பெயரிட்டார்.
இவர் அன்னா அன்ட் த கிங் என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் "இளவரசி பா-யிங்" என்ற கதாபாத்திரமாக இருந்தார். மேலும், பேங்காக்கின் விசுத் கசாத் சாலைக்கு இவரது பெயரிடப்பட்டது. [9]