சந்தீபன் சந்தா Sandipan Chanda | |
---|---|
சந்தீபன் சந்தா, லெய்டன் 2008 | |
முழுப் பெயர் | சந்தீபன் சந்தா |
நாடு | இந்தியா |
பிறப்பு | 13 ஆகத்து 1983 கொல்கத்தா, இந்தியா |
பட்டம் | கிராண்டு மாசுட்டர் |
பிடே தரவுகோள் | 2485 (திசம்பர் 2021) (2013 ஏப்ரல் மாதத்திய பிடே உலகத் தரவரிசையில் எண். 145) |
உச்சத் தரவுகோள் | 2656(மே 2011) |
சந்தீபன் சந்தா (Sandipan Chanda) ஒர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தா நகரைச் சேர்ந்தவர் ஆவார். 1983 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 தேதி சந்தீபன் பிறந்தார். 2003 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டு மாசுட்டர் பட்டம் கிடைத்தது. குராகாவ் சதுரங்கத் திருவிழாவில் ஒன்பது புள்ளிகளுக்கு 7.5 புள்ளிகள் எடுத்தார். அலெக்சாண்டர் சாபலோவை விட அரை புள்ளிகள் அதிகம் எடுத்து போட்டியில் இவர் வெற்றி பெற்றார்.[1][2]
சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் 2004, 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சார்பாக சந்தீபன் பங்குபெற்றார்.[3]
2013 ஆம் ஆண்டு நடந்த உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் விசுவ நாதன் ஆனந்துக்கு போட்டி உதவியாளராக இருந்தார்.
நெதர்லாந்தில் நடைபெற்ற சதுரங்க சாம்பியன் போட்டிகளில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றார்.[4]