சந்தீப் குமார் பாசு | |
---|---|
பிறப்பு | 1944 கொல்கத்தா, மேற்கு வங்காளம், India |
செயற்பாட்டுக் காலம் | 1975 முதல் |
விருதுகள் | பத்மசிறீ ரான்பாக்சி மருத்துவ அறிவியல் விருது இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் வாழ்க்கை அறிவியல் விருது பாசின் அறக்கட்டளை உயிரி தொழில்நுட்ப விருது இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் பி. ஆர். அம்பேத்கர் விருது சர்வதேச அறிவியல் காங்கிரசு சங்கங்களின் ஆர். கே. தத் நினைவு விருது கோயல் விருது |
சந்தீப் குமார் பாசு (Sandip Kumar Basu; பிறப்பு 1944) ஓர் இந்திய மூலக்கூறு உயிரியலாளரும் மற்றும் இந்தியாவின் தேசிய அறிவியல் கழகத்தின் ஜே. சி. போஸின் தலைவரான இவர், லெஷ்மேனியாசிஸ், காச நோய், தமனிக்கூழ்மைத் தடிப்பு, வைரஸ் தொற்றுகள், பல்வகை மருந்து எதிர்ப்பு புற்றுநோய் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளில் புதுமைகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.[1] 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டார்.[2]
சந்தீப் குமார் பாசு, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் பிறந்தார்.[1] இவர் 1962 இல் கொல்கத்தாவில் உள்ள மாநிலப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1964 இல் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1968 இல் “நுண்ணுயிர் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துதல்” என்ற தலைப்பில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்தார். பின்னர் முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆராய்ச்சிக்காக அமெரிக்கா சென்றார்.[1] 1975 ஆம் ஆண்டில், டெக்சாஸ் பல்கலைக்கழக தென்மேற்கு மருத்துவப் பள்ளியில் ஆசிரிய உறுப்பினராகச் சேர்ந்து தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். கொல்கத்தாவில் உள்ள இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனத்தில் சேர இந்தியா திரும்பும் வரை 1983 வரை அங்கேயே இருந்தார். 1986 இல் சண்டிகரில் உள்ள நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநராக சேர்ந்தார்.[1] 1991 ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரானார். 2010 ஆம் ஆண்டு வரை அந்த நிறுவனத்தின் பேராசிரியராக இருந்தார். பின்னர் தேசிய அறிவியல் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக சேர்ந்தார். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் வள நிறுவனம் ஆகியவற்றிலும் பணியாற்றினார்.[1]
பாசு மருந்துகளின் ஏற்பி அடிப்படையிலான ஊடுருவல் விநியோகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.[3][4][5][6] லெஷ்மேனியாசிஸ், காச நோய், வைரஸ் நோய்த்தொற்றுகள் மற்றும் பல மருந்து எதிர்ப்பு புற்றுநோய் ஆகியவற்றின் சிகிச்சையில் வழக்கமான வேதிச்சிகிச்சையை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்ட என்ற புதிய அணுகுமுறையை இவர் அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறது.[1] இவரது ஆராய்ச்சி புதிய மருந்து இலக்குகளை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது.[1] குறையடர்த்தி கொழுமியப்புரதம் ஏற்பிகளின் பாதையை நிறுவிய பெருமை இவருக்கு உண்டு.[7][8] 1985 நோபல் பரிசு வென்ற மைக்கேல் இசுடூவர்ட் பிரௌன் மற்றும் ஜோசப் எல். கோல்ட்ஸ்டீன் மற்றும் அவரது இணை ஆசிரியர்கள், அவர்களின் ஆராய்ச்சி மற்றும் கொழுப்பைக் குறைக்கும் மருந்தான ஸ்டேடின்களின் வளர்ச்சியில் பாசுவின் பணி உதவியது என்று கூறப்படுகிறது.[1][9][10]
சண்டிகரில் உள்ள நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரந்தர வளாகத்தை நிறுவினார்.[1] இந்திய அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரான இவர், [[இந்திய தேசிய அறிவியல் கழகம்|இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும், அதன் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[1]
சந்தீப் குமார் பாசு இந்திய தேசிய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கழகம், உலக அறிவியல் கழகம் மற்றும் இந்திய தேசிய அறிவியல் கல்விக்கழகம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார்.[11][12][13] 1995 ஆம் ஆண்டில் பேராசிரியர் எம். ஆர். என். பிரசாத் நினைவு விருதையும், 2002 ஆம் ஆண்டில் டாக்டர் எல்லப்பிரகதா சுப்பாராவ் நினைவு விருதையும், 2006 ஆம் ஆண்டில் பி. கே. பச்சாவத் விருதையும் பெற்றார். 1995 ஆம் ஆண்டில் ரான்பாக்சி மருத்துவ அறிவியல் விருதையும், 1996 ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் வாழ்க்கை அறிவியல் விருதையும் அடுத்த ஆண்டு பாசின் அறக்கட்டளை உயிரி தொழில்நுட்ப விருதையும் பெற்றார். 1999 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பி. ஆர். அம்பேத்கர் விருது மற்றும் சர்வதேச அறிவியல் காங்கிரசு சங்கங்களின் ஆர். கே. தத் நினைவு விருது என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது.[1] 2003 ஆம் ஆண்டில் கோயல் பரிசைப் பெற்ற பாசுவுக்கு 2001 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.