சந்தை விலைப்படுத்துதல்


சந்தை விலைப்படுத்துதல் அல்லது நியாய மதிப்பு கணக்கு வைப்பென்பது ஒரு நிதியியல் பத்திரத்திற்கு அல்லது அதைப் போன்ற பத்திரங்களுக்கு அதில் இருக்கும் ஒரு நிலைக்கு தற்போது நிலவிவரும் நியாயமான சந்தை விலையின் அடிப்படையில் ஒரு விலையை அளிக்கும் கணக்கு வைப்பு வரையறைகளாகும். 1990கள் முதல் நியாய மதிப்பு கணக்கு வைப்பானது அமெரிக்க பொதுவாக ஏற்கப்பட்ட கணக்கு வைப்புக் கோட்பாடுகளின் (ஜீ.ஏ.ஏ.பி) ஒரு அங்கமாக இருந்து வருகிறது. மேலும் முதலீடு செய்பவர்களும் ஒரு நிர்வாகம் அல்லது நிறுவனத்துடைய தற்போதைய நிதிநிலையைக் குறித்தான ஒரு நம்பகத்தன்மையான மதிப்பீட்டிற்காக சொத்துக்கள் மற்றும் கடப்பாடுகளை மதிப்பிடும்போது இந்த முறைமையை அதிமகதிகமாக ஆதரிக்கின்றனர். சந்தை விலைப்படுத்துதல் என்பது காலப்போக்கில் மாறக்கூடிய கணக்குகளான சொத்துகள் மற்றும் கடப்பாடுகள் போன்றவைகளின் நியாயமான மதிப்பளிக்கும் கணக்கு வைப்பாகும். ஓர் ஆவணம் முதலீட்டுத்தொகுப்பு (போர்ட்ஃபோலியோ) அல்லது கணக்கு (அகௌண்ட்) அதனுடைய ஏட்டு மதிப்பையல்லாமல் அதனுடைய தற்போதைய சந்தை மதிப்பை பிரதிபலிக்கும் வண்ணம் அவைகளில் விலை அல்லது மதிப்பை பதிவு செய்யும் வழக்கமே சந்தை விலைப்படுத்தல் ஆகும். உதாரணத்திற்கு பரஸ்பர நிதிகள் (மியூச்சுவல் ஃபண்டுகள்) தினசரி அடிப்படையில் சந்தை விலைப்படுத்தப்படுகின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு நிதியின் நிகர சொத்து மதிப்புக்கான (என்.ஏ.வி) ஓர் அனுமானம் கிட்டுகிறது.

வரலாறும் வளர்ச்சியும்

[தொகு]

சந்தை விலைப்படுத்துதல் ஒரு கணக்கு வைப்புக் கருவியாக 20வது நூற்றாண்டில் முன்பேர பரிமாற்றங்களில் வணிகர்கள் மூலமாக தொடங்கப்பட்டது. 1980கள் வரை பரிமாற்ற வணிகக் களங்களிலிருந்து இந்த வழக்கம் பெரிய வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் (கார்பொரேஷன்) பரவவில்லை. 1990களின் தொடக்கத்தில் சந்தை விலைப்படுத்துதலின் விளைவால் ஊழல்கள் எழும்ப ஆரம்பித்தன.

இதன் மூல பழக்கத்தைப் புரிந்துகொள்ள, ஒரு முன்பேர வணிகர் ஒரு நிலையை எடுக்கும்போது, “இடைவெளி” (மார்ஜின்) என்றழைக்கப்படும் பணத்தை பரிமாற்றகத்தில் வைப்புத்தொகையாக அளிக்கிறாரென்று வைத்துக்கொள்வோம். பரிமாற்றகம் நஷ்டம் சந்திக்காமல் பாதுகாக்கப்படுவதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு வணிக நாளின் முடிவிலும், ஒப்பந்தம் (காண்டிராக்ட்) அதன் தற்போதைய சந்தை விலைக்கு மதிப்பிடப்படுகிறது. வணிகர் ஒரு பேரத்தின் லாப பக்கத்திலிருந்தால், அவருடைய ஒப்பந்தம் அந்த நாளில் மதிப்புக் கூடியுள்ளது. பரிமாற்றகம் இந்த இலாபத்தை அவருடைய கணக்கில் செலுத்திவிடுகிறது. மறுபக்கம், அவருடைய ஒப்பந்தத்தின் சந்தை விலை சரிந்திருந்தால், அவர் செலுத்தியிருந்த இடைவெளி பணத்தில் பரிமாற்றகம் இதை எடுத்துக்கொள்கிறது. இந்த கணக்கின் இருப்புத்தொகை தன் நிலையைப் பாதுக்காக்கத் தேவையானதை விட குறைந்துவிட்டால், வணிகர் தன்னுடைய நிலையைப் பாதுகாத்துக்கொள்ள உடனே கூடுதல் இடைவெளியைக் கட்ட வேண்டும் (“மார்ஜின் கால்”). உதாரணத்திற்கு, சிகாகோ மெர்க்கெண்டைல் எக்ஸ்சேஞ்ச், இந்த முழு செயலையும் ஒரு படி மேலே கொண்டு சென்றது. இது ஒரு நாளுக்கு இரண்டு முறை காலை 10:00 மணிக்கும் மாலை 2:00 மணிக்கும் நிலைகளை சந்தை விலைப்படுத்துகிறது.[1]

மறுபக்கத்தில், தனிப்பட்ட (ஓ.டி.சி) சார்பேயங்கள் (ஓவர்-த-கௌண்ட்டர் டெரிவேடிவ்ஸ்) விற்பனையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையே சூத்திரங்களின் அடிப்படையில் நடக்கும் நிதி ஒப்பந்தங்களாகும். இவை பரிமாற்றகங்களில் வணிகம் செய்யப்படாததால், அவைகளின் சந்தை விலைகள் எந்த ஒரு செயல்படுகின்ற, கட்டுப்படுத்தும் சந்தை வணிகத்தாலும் நிறுவப்படுவதில்லை. ஆகவே, சந்தை மதிப்புகள், பாரபட்சமற்று நிர்ணயிக்கப்படுவதுமில்லை உடனடியாகக் கிடைக்கப் பெறுவதில்லை (சார்பேய ஒப்பந்தங்களை வாங்குபவர்கள் வழக்கபடி செயல்படுகின்ற சந்தைகள் மற்றும் அளிக்கப்படும் சூத்திரங்களின் அடிப்படையில் சந்தை மதிப்புகளை கணக்கிடும் கணினி நிரல்கள் அளிக்கப்படுகின்றனர்). இந்த ஆரம்பக்கட்ட வளர்ச்சியின்போது, வட்டி விகித சுவாப்கள் போன்ற ஓ.டி.சி சார்பேயங்கள் அவ்வபோது சந்தை விலைப்படுத்தவில்லை. பேரங்கள் காலாண்டு அல்லது வருடாந்தர அடிப்படையில் கண்கானிக்கப்பட்டன. அப்போது இலாபங்கள் அல்லது நட்டங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன அல்லது கட்டணங்கள் பரிமாறப்பட்டன.

நிறுவனங்களிலும் வங்கிகளிலும் சந்தை விலைப்படுத்தும் பழக்கம் பிரபலமானபோது அவர்களில் சிலர் இதில் கணக்கு வைப்பு மோசடி செய்ய மிகவும் எளிதான ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். இதேனென்றால், சந்தை விலை பாரபட்சமற்ற முறையில் நிர்ணயிக்க முடியாத போது (ஏனென்றால் உண்மை தினசரி சந்தை இல்லாத போது அல்லது கச்சா எண்ணெய் முன்பேரங்கள் போன்ற மற்ற வணிகம் செய்யப்பட்ட பொருட்களிலிருந்து சொத்தின் மதிப்புப் பெறப்படும்பொது), சொத்துகள் உத்தேசமாக அல்லது செயற்கையாக நிதியியல் மாதிரியமைத்தலிருந்து (ஃபினான்ஷியல் மாடலிங்க்) பெறப்பட்ட அணுமானிக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் ‘மாதிரிக்கு விலைப்படுத்தப்பட்டன’. மேலும் சில நேரங்களில் போலியான மதிப்பீடுகளை அடைய தில்லுமுல்லு செய்யப்படுகின்றன. என்ரான் மற்றும் என்ரான் மோசடியைப் பார்க்கவும்.

உள் வருவாய் குறியீடு பிரிவு 475, வரி விதிப்பிற்கான சந்தை விலைப்படுத்துதல் கணக்கு வைப்பு முறை விதியைக் கொண்டிருக்கிறது. பிரிவு 475ன்படி சந்தை விலைப்படுத்தும் முறை பயன்படுத்த தேர்ந்தெடுக்கும் தகுதிப்பெற்ற ஆவணங்கள் வர்த்தகர்கள் சொத்தானது நியாய சந்தை மதிப்பில் வருடத்தின் கடைசி வணிக தினத்தன்று விற்கப்பட்டதாக கருதி இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிட வேண்டும். மேலும் இலாபம் அல்லது நட்டம் அந்த வருட கணக்கில் உட்பட வேண்டும். மேலும் இந்தப் பிரிவில் பொருட்களின் வணிகர்களும் கூட வணிகம் செய்யப்படுகின்ற (அதாவது தரகர்கள்/வணிகர்களிடமிருந்து விலைப்புள்ளிகள் அல்லது அண்மையில் நடந்த நடவடிக்கைகளிலிருந்து உண்மையான விலைகளின் அடிப்படையில் நியாய சந்தை மதிப்பை நிர்ணயிக்கக்கூடிய ஒரு நிலையான நிதி சந்தையுள்ள ஒரு பொருள்) பொருட்களுக்கும் (அல்லது அவைகளின் சார்பேயங்களுக்கு) சந்தை விலைப்படுத்தும் முறையைக் கையாளலாமென்று கூறுகிறது.

எஃப்.ஏ.எஸ் 115

[தொகு]

கடன் மற்றும் சரி ஒப்பு (இக்விட்டி) ஆவணங்களில் செய்யப்படும் சில முதலீடுகளுக்கான கணக்கு வைப்பு (1993ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது)

இந்த அறிக்கை உடனடியாக நிர்ணயிக்கக்கூடிய நியாய விலைகள் உள்ள சரி ஒப்பு ஆவணங்களில் முதலீடுகள் மற்றும் கடன் ஆவணங்களில் செய்யப்பட்ட அனைத்து முதலீடுகளுக்குமான கணக்கு வைப்பு மற்றும் அறிக்கையிடுதலைக் குறித்து விவரிக்கிறது. இந்த முதலீடுகள் மூன்று பிரிவுகளாக தொகுக்கப்பட்டு பின்வருமாறு கணக்கு வைக்கப்பட வேண்டும்:

  • முதிர்வு வரை வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் ஆற்றலுடனும் கடன் ஆவணங்களைப் பெற்ற நிறுவனம் அவைகள் முதிர்வு-வரை-வைத்திருக்கும் ஆவணங்கள் என்று வகைப்படுத்தும். மேலும் இவைத் தீர்க்கப்படும் (அமார்டைஸ்) போது அவற்றின் விலையில் வலுக்குறைவு (இம்பேர்மெண்ட்) கழிக்கப்படுகிறது.
  • குறைந்த காலத்தில் விற்கும் நோக்கத்திற்காகவே வாங்கப்படும் கடன் மற்றும் சரி ஒப்பு ஆவணங்கள் வணிகப்படுத்தும் ஆவணங்களென்று வகைப்படுத்தப்படுகின்றன. இவை நியாய விலையில் அறிக்கை செய்யப்பட்டு, வருமானத்தில் கிடைக்கப்பெறாத இலாபங்களும் நட்டங்களும் சேர்க்கப்படுகின்றன.
  • முதிர்வு-வரை-வைத்திருப்பு ஆவணங்கள் அல்லது வணிகப்படுத்தும் ஆவணங்கள் என்று வகைப்படுத்தப்படாத கடன் மற்றும் சரி ஒப்பு ஆவணங்கள் விற்பனைக்கென்ற ஆவணங்களென்று வகைப்படுத்தப்படுகின்றன. இவை நியாய விலையில் அறிக்கையிடப்பட்டு, கிடைக்கப்பெறாத இலாபங்களும் நட்டங்களும் வருமானங்களிலிருந்து நீக்கப்பட்டு, பங்குதாரர்களுடைய சரி ஒப்பின் ஒரு தனி அம்சமாக அறிக்கையிடப்படுகின்றன (மற்ற முழுமையான வருமானம்).

எஃப்.ஏ.எஸ் 157

[தொகு]

நிதியியல் கணக்கு வைப்பு தரக்கட்டுப்பாடுகள் வாரியம் (எஃ.ஏ.எஸ்.பீ) செப்டம்பர் மாதம் 2006ஆம் ஆண்டு எஃப்.ஏ.எஸ் 157 என்று பொதுவாக அழைக்கப்பட்ட நிதியியல் கணக்கு வைப்பு தரக்கட்டுப்பாடுகளின் அறிக்கைகள் எண் 157, நியாய விலை மதிப்பீடுகள் என்ற ஒரு கணக்கு வைப்பு தரக்கட்டுப்பாட்டை வெளியிட்டது. இது 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு பிற்பாடு நிதியாண்டுகள் உள்ள தனி உருக்களுக்குப் (எண்டிட்டி) பொருந்தும்.[2][3]

எஃப்.ஏ.எஸ் அறிக்கை 157 பின்வருவனவற்றை உள்ளிடும்:

  • நியாய விலை என்ற வார்த்தையின் சொற்பொருள்விளக்கத்தில் தெளிவு.
  • நியாய விலை அளவுகளில் பயன்படுத்தப்படும் தகவல் மூலங்களில் ஒரு நியாய விலை நிலைமுறை (ஹைரார்க்கி) பயன்படுத்துதல் (அதாவது, சந்தையின் அடிப்படையில் அல்லது சந்தையல்லாத அடிப்படையில்).
  • நியாய விலையில் மதிப்பிடப்பட்ட சொத்துகள் மற்றும் கடப்பாடுகளுக்கான நீட்டிக்கப்பட்ட வெளியாக்கல் (டிஸ்க்ளோஷர்) தேவைகள்.
  • ஒரு சொத்து அல்லது கடப்பாட்டின் அளவுக் குறிப்பிட்ட-தேதியின் பரிவர்த்தனை (டிரான்சாக்ஷன்) விலை அதனுடைய அதே அளவு குறிப்பிட்ட-தேதியின் நியாய விலை யுடன் ஒன்றாக இருக்குமென்ற நெடுங்கால கணக்கு வைப்பு அனுமானிப்பை திருத்தியமைத்தல்.
  • மதிப்பீட்டில் கடன் அபாயத்தில் (எதிரிணைத் தரப்பினர் மற்றும் நிறுவனத்தின் சொந்த கடன் வரிசை இரண்டும்) ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சேர்க்கப்பட வேண்டுமென்ற தெளிவு.

எஃப்.ஏ.எஸ் 157 “நியாய விலையை” பின்வருமாறு வரையறுக்கிறது: “அளவிடப்படும் தேதியில் சந்தைப் பங்கேற்பாளர்களுக்கிடையே ஒரு முறையான பரிவர்த்தனையில் ஒரு சொத்தை விற்க பெறப்படும் அல்லது ஒரு கடப்பாட்டை இடமாற்றம் செய்ய அளிக்கப்படும் விலை”.

மற்றொரு கணக்கு வைப்பு விதி அந்த பொருளுக்கு ஒரு நியாய விலையைக் கோரினால் அல்லது அனுமதித்தால் மட்டுமே எஃப்.ஏ.எஸ் 157 பொருந்தும். எஃப்.ஏ.எஸ் 157 தானே நியாய விலையின் பயன்பாட்டிற்கு எந்தவித புதிய தேவைகளையும் கொண்டு வருவதில்லை. எனினும் பொருள்விளக்கத்தில் வரையறுக்கப்பட்ட வண்ணம், குறிப்பிட்ட முக்கியமான வித்தியாசங்களை அறிமுகப்படுத்தத் தான் செய்கிறது.

முதலாவது, நிறுவனம் சொத்தை முதலீட்டுக்காக வைக்க விரும்பினாலும் பிற்பாடு மறுபடியும் விற்க நினைத்தாலும் எதுவாக இருந்தாலும், அது வெளியேறு (எக்சிட்) விலையின் அடிப்படையில் (ஒரு சொத்து விற்கப்படக்கூடிய விலை (பேர விலை)) இருக்கும். நுழைவு விலையில் (ஒரு சொத்து வாங்கப்படக் கூடிய விலை (கேட்கும் விலை) இருக்காது.

இரண்டாவது, நியாய விலையானது தனி உரு-சார்ந்ததாக இல்லாமல் சந்தையின் அடிப்படையில் இருக்குமென்று எஃப்.ஏ.எஸ் 157 வலியுறுத்துகிறது. ஆகவே, ஒரு சொத்து வாங்குபவரிடத்தில் காணப்படும் ஆர்வ நம்பிக்கை, விருப்பமற்ற அபாயம்-தவிர்க்கும் வாங்குபவரிடம் காணப்படும் ஐயப்பாட்டு உணர்வால் மாற்றிடம் செய்யப்பட வேண்டும்.

எஃப்.ஏ.எஸ் 157 உடைய நியாய விலை முறைநிலை தரநிலைகளின் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. முறைநிலையானது நியாய விலைகளை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் தகவலின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை வரிசைப்படுத்துகிறது. படி 1 உள்ளீடுகளை (இன்புட்ஸ்) மிகவும் நம்பகத்தன்மையுள்ளவைகளாகவும், படி 3 உள்ளீடுகளை மிகவும் குறைந்த நம்பகத்தன்மை உள்ளவைகளாகவும் வரிசைப்படுத்துகிறது. ஊகங்களின் அடிப்படையில் இல்லாமல், அதே சொத்துகள் மற்றும் கடப்பாடுகளின் பரிவர்த்தனைகள் (உ.ம். மேற்கோளிட்ட விலைகள்) நேரடியாக நடைபெறுவதைப் பார்ப்பதிலிருந்து பெறப்படும் தகவல் மேம்பட்ட நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், பார்க்க முடியாத தரவுகளின் அடிப்படையில் பெறப்படும் உள்ளீடுகள் அல்லது சந்தைப் பங்கேற்பாளர்கள் பயன்படுத்தக்கூடிய அனுமானங்களைப் பற்றி அறிக்கையிடும் நிறுவனத்தில் சொந்த அனுமானங்கள் மிகவும் குறைந்த நம்பகத்தன்மையுள்ளவைகளாகக் காணப்படுகின்றன. உத்தேசிக்கப்படுகின்ற பணப் பாய்வின் (கேஷ் ஃப்ளோ) அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் பங்குகள் பிந்தைய முறைக்கான ஒரு நல்ல உதாரணமாகும்.

சந்தை-அடிப்படையிலான அளவீடு சொத்தினுடைய உண்மையான மதிப்பை பிரதிபலிக்காத போது பிரச்சனைகள் எழலாம். நிதி நெருக்கடி போன்ற பிரதிகூலமான அல்லது அதிவேகமாக மாறுகின்ற சூழல்களில் ஒரு நிறுவனம் இந்த சொத்துகள் அல்லது கடப்பாடுகளின் மதிப்பைக் கணக்கிட வேண்டியிருக்கும்போது இது நேரிடலாம். உதாரணத்திற்கு, நீர்மை நிலை (லிக்விடிட்டி) குறைவாக அல்லது முதலீட்டாளர்கள் அச்சநிலையிலிருந்தால், ஒரு வங்கியுடைய சொத்துகளுடைய தற்போதைய விற்பனை விலை சாதாரண நீர்மை நிலைகளை விட மிகவும் குறைவாக இருக்கலாம். இதனால் பங்குதாரர்களுடைய சரி ஒப்பும் குறையும். இந்த பிரச்சனை 2008/09 உடைய நிதி நெருக்கடியின் போது காணப்பட்டது. வங்கிகளுடைய இருப்புநிலைக் குறிப்புகளில் வைக்கப்பட்ட பல ஆவணங்கள் திறம்பட மதிப்பிடப்பட முடியவில்லை. ஏனெனில் அவைகளுக்கான மதிப்பு சந்தையில் எண்ணமற்று போய்விட்டிருந்தது. 2009ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், நிதியியல் கணக்கு வைப்பு தரக்கட்டுபாடுகள் வாரியம் (எஃப்.ஏ.எஸ்.பீ) 2009ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கி, ஒரு கட்டாயக் கலைப்பு (ஃபோர்ஸ்ட் லிக்விடேஷன்) சூழலில் அல்லாமல் சாதாரண சந்தை நிலைகளில் இருக்கும் விலையின் அடிப்படையில் மதிப்பிடும்படி புதிய வரைமுறைகளுக்கு வாக்களித்து அங்கிகரிக்கவும் செய்தது.

எஃப்.ஏ.எஸ் 157 எந்த புதிய வகை சொத்துகளுக்கும் நியாய விலையைக் கோராவிட்டாலும், மற்ற பொருந்துகின்ற விதிகளின்படி கொண்டு செல்லப்படும் சொத்துகளுக்கும் கடப்பாடுகளுக்கும் இது பொருந்தும். நியாய விலையில் கணிக்கப்படும் சொத்துகள் மற்றும் கடப்பாடுகளின் கணக்கு வைப்பு விதிகள் பலக்கியவைகளாக இருக்கின்றன. ஆவணங்களின் விதிமுறைகள் மற்றும் மற்ற கணக்கு வைப்பு வழிமுறைகளுக்கிணங்க பரஸ்பர நிதிகளும் ஆவணங்களை கையாளும் நிறுவனங்களும் பல்லாண்டுகளாக தங்கள் சொத்துகளையும் சில கடப்பாடுகளையும் நியாய விலையிலேயே கணித்துள்ளன. வர்த்தக வங்கிகளும் மற்ற நிதி சேவை நிறுவனங்களும் சார்பேயங்கள் மற்றும் சந்தைப்படுத்தக்கூடிய சரி ஒப்பு ஆவணங்கள் போன்று குறிப்பிட்ட சொத்து வகைகளை நியாய விலையில் கணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. கடன் பெறக்கூடியவைகள் மற்றும் கடன் ஆவணங்கள் போன்ற மற்ற வகை சொத்துகள், அவை வணிகத்திற்கு (விற்க அல்லது வாங்க) வைக்கப்பட்டிருக்கின்றனவா அல்லது முதலீட்டிற்கு வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. வணிகத்திற்குரிய அனைத்து சொத்துகளும் நியாய விலையில் கணிக்கப்படுகின்றன. முதலீட்டிற்காக அல்லது முதிர்ச்சிக்காக வைக்கப்பட்டிருக்கிற கடன்களும் கடன் ஆவணங்களும், அவை வலுக்குறைந்திருந்தாலொழிய (இந்நிலையில், ஒரு நட்டம் கணக்கில் சேர்க்கப்படுகின்றது) அது தீர்வடையும் மதிப்பில் கணக்கிடப்படுகின்றன. எனினும், அவை விற்பனைக்குக் கிடைக்கப் பெற்றால் அல்லது விற்பனைக்காக வைக்கப்பட்டால், அவை நியாய விலை அல்லது உண்மை விலை முறையே எது குறைவாக இருக்கிறதோ அதில் மதிப்பிடப்பட வேண்டும். (எஃப்.ஏ.எஸ் 65 மற்றும் எஃப்.ஏ.எஸ் 114 கடன்களுக்கான கணக்கு வைப்பைப் பற்றி கூறுகிறது, எஃப்.ஏ.எஸ் 115 ஆவணங்களுக்கான கணக்கு வைப்பைப் பற்றி கூறுகிறது.) மேற்கூறியவைகளைப் பொருட்டில் கொள்ளாமல், நிறுவனங்கள் பாரம்பரியமாக செய்து வரும் அடக்கவிலை கணக்கியலுக்கு பதிலாக எந்தவித நிதியியல் பத்திரத்தையும் நியாய விலையில் கணக்கிட அனுமதிக்கப்படுகின்றனர் (எஃப்.ஏ.எஸ் 159 “நியாய விலை விருப்பத் தேர்வு” பார்க்கவும்).

ஆக, எஃப்.ஏ.எஸ் 157 ஆனது ஒரு நிறுவனம் ஒரு சொத்தை அல்லது கடப்பாட்டை சட்டத்தின்படி கோரப்பட்டோ அல்லது தானே விருப்பப்பட்டோ நியாய விலையில் மதிப்பிடும் போது பொருந்தும்.

இந்த விதியின்படி ஒரு கணினியின் மூலமாக கணக்கிடப்படுகிற ஓர் ஏட்டு விலையாக இல்லாமல் (இந்த அமைப்பு அடிக்கடி “போலி சந்தை விலைப்படுத்துதல்” என்று விமர்சிக்கப்படுகின்றது) உண்மையாகவே ‘சந்தைக்கேற்ற’ விலையாக நிர்ணயிக்கப்பட வேண்டும். (அவ்வபோது குறிப்பிட்ட சில வகை சொத்துகளுக்கு விதியானது ஒரு மாதிரியைப் பயன்படுத்த அனுமதிக்கிறது).

சில நேரங்களில், அதுவும் ஒரு பொருளாதார நெருக்கடியின் போது, சொத்துகளுக்கான விற்பனை மெலிந்துவிடுகிறது. இப்படிப்பட்ட நேரங்களில், இப்படிப்பட்ட பொருட்களுக்கு மிகக் குறைந்த அல்லது எவ்வித வாங்குபவர்களும் அகப்படுவதில்லை. இது விலைப்படுத்தும் செயலை மேலும் சிக்கலாக்குகிறது. சந்தையைப் பற்றிய தகவல் இல்லாத போது, ஒரு தனி உரு தன்னுடைய சொந்த ஊகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. என்றாலும் நோக்கம் ஒன்று தான்: ஒரு ஆர்வமுள்ள வாங்குபவருக்கு விற்பனையில் தற்போதுள்ள மதிப்பு என்னவாயிருக்குமென்பதே. தன்னுடைய சொந்த ஊகங்களை தனு உரு தோற்றுவிக்கும்போது, வட்டி விகிதங்கள், தவறுகை (டிஃபால்ட்) விகிதங்கள், முன்பணம்செலுத்தும் துரிதங்கள் போன்ற கிடைக்கப்பெறும் சந்தைத் தரவை நிராகரிக்க முடியாது.

எஃப்.ஏ.எஸ் 157 பணமீட்டாத சொத்துகளுக்கும் பணமீட்டுகின்ற சொத்துகளுக்கும் எவ்வித வித்தியாசமும் காண்பதில்லை. எவரும் சந்தையில் வாங்கத் தயாராக இல்லாததினால் ஏட்டில் பூஜ்ஜியம் என்ற மதிப்பை உடைய உடைந்த உபகரணம் பணமீட்டாத சொத்துக்கு ஒரு உதாரணமாகும். சொத்துகள் ஏதோ ஒரு வகையில் பணம் சம்பாதிக்கும் வரையில், ஆவணங்கள் போன்றவை பணமீட்டும் சொத்துகளுக்கு உதாரணங்களாக அமையும். பணமீட்டும் சொத்துகள் முடிவில்லாமல் சந்தைவிலையிலிருந்து விலைக்குறைக்கப்பட்டுக்கொண்டே போக முடியாது. அவை மதிப்புக் குறைக்கப்பட்ட விலைகளில் நிறுவனத்துள்ளிருப்பவர்கள் வாங்கிக்கொள்ள ஊக்குவிப்புகளை உருவாக்கலாம். காலப்போக்கில், உள்ளிருப்பவர்களே அப்படிப்பட்ட ஆவணங்களுக்கான கடன் தகுதியை நிர்ணயிப்பதற்கான சிறந்த நபர்களாவர். அறிமுறையாகக் காணப்போனால், இந்த விலை அழுத்தமானது ஒரு குறிப்பிட்ட சொத்தின் ‘நியாயமான விலையை’ சந்தை விலைகள் துள்ளியமாக பிரதிபலிக்க உதவும். அவல (டிஸ்டிரஸ்ட்) சொத்துகளை வாங்குபவர்கள் குறைவாக மதிக்கப்பட்டுள்ள ஆவணங்களை வாங்க முன் வர வேண்டும். இப்படி செய்வதனால் விலைகள் உயர்ந்து, இதைப் போன்ற உடைமைகளையுடைய (ஹோல்டிங்க்ஸ்) நிறுவனங்கள் அதன் மதிப்புகளை உயர்த்த முடியும்.

மேலும் எஃப்.ஏ.எஸ் 157ல் செயற்படாத (நான்-பெர்ஃபார்மன்ஸ்) அபாயம் என்பது மற்றொரு புதிய கருத்தாகும். எஃப்.ஏ.எஸ் 157ன்படி ஒரு கடப்பாட்டை மதிப்பிடும்போது, ஒரு நிறுவனம் செயற்படாத அபாயத்தைக் கருத்திற்கொள்ள வேண்டுமென்று விதிக்கிறது. எஃப்.ஏ.எஸ் 157ன்படி நியாய விலை ஒரு வெளியேறு விலையாக மட்டும் பதிவு செய்வது போதுமென்றால், செயற்படாத அபாயமானது வெளியேறுவதால் அழிக்கப்பட்டுவிடும். எனினும், எஃப்.ஏ.எஸ் 157ன்படி நியாய விலையென்பது ஒரு கடப்பாடு இடமாற்றம் செய்யப்படும் விலையைக் குறிக்கிறது. மறுமொழியில் சொல்லப் போனால், மதிப்பிடப் போகும் செயற்படாமையானது ஒரு தற்போதைய ஒப்பந்தத்தின் சரியான தள்ளுபடி (டிஸ்கௌண்ட்) விகிதத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும். கூறப்பட்டுள்ள வட்டி விகிதத்திற்கு மேலாக கடன் அபாயத்திற்கு அதிக தள்ளுபடி விகிதத்தை எதிர்காலப் பணப்பாய்வுக்கு அளிப்பது ஓர் உதாரணமாக இருக்கும். முடிவுகளுக்கான முகாந்தரங்கள் பிரிவில் செயற்படாமை அபாயத்தைக் குறித்து முதலில் எந்த நோக்கத்தில் அறிக்கை வெளியிடப்பட்டதென்பது விவரிக்கப்பட்டிருக்கிறது (பத்திகள் சி40–சி49).

2007 – 2008 ஆண்டின் நிதி நெருக்கடியின் அதிவேக முன்னேற்றங்களுக்கு பதிலாக, எஃப்.ஏ.எஸ்.பீ தீர்மானிக்கப்பட்ட எஃப்.ஏ.எஸ் 157-டியின் வெளியீட்டை துரிதப்படுத்துகிறது. அதன் தலைப்பு, செயல்பாடற்ற ஒரு சந்தையில் ஒரு நிதியியல் சொத்தின் நியாய விலையை நிர்ணயிப்பதாகும்.[4]

எளிமையான உதாரணம்

[தொகு]

உதாரணம்: ஒரு முதலீட்டாளர் ஒரு ஸ்டாக்கில் 10 பங்குகளை ஒரு பங்கு $4 வீதம் வாங்கி, இப்போது அந்த ஸ்டாக் $6 என்று வணிகம் செய்யப்பட்டால், இந்த பங்குகளின் “சந்தை விலைப்படுத்துதல்” $60 ($6 x 10 பங்குகள்) ஆகும். ஆனால் ஏட்டு மதிப்பு வெறும் $40 மட்டுமே (பயன்படுத்தப்படும் கணக்கு வைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில்) காட்டும்.

அதே போல, பங்குகள் $3க்கு சரியும்போது, சந்தை விலைப்படுத்துதல் $30 ஆக இருந்து, முதலீட்டாளர் தன்னுடைய மூல முதலீட்டில் $10ஐ இழந்துள்ளார். இந்த பங்குகள் ஓர் இடைவெளியில் வாங்கப்பட்டிருந்தால், இதனால் ஒரு மார்ஜின் கால் எழலாம். இதனால் முதலீட்டாளர் தன்னுடைய கணக்கிற்கு இடைவெளி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் ஒரு ரொக்கத்தை அளிக்க வேண்டியிருக்கும்.

ஒரு சார்பேய நிலையை சந்தை விலைப்படுத்துதல்

[தொகு]

ஒரு சார்பேய நிலையை சந்தை விலைப்படுத்தும்போது, ஒவ்வொரு முன் – நிர்ணயிக்கப்ப்ட்ட இடைவெளிகளிலும், ஒவ்வொரு எதிர்த்தரப்பினரும் தங்களுடைய நிலைக்குச் சந்தை மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களை பணமாக பறிமாறி கொள்கின்றனர். ஓ.டி.சி சார்பேயங்களுக்கு, ஒரு எதிர்த்தரப்பினர் தவறும்போது, இதைத் தொடரும் நிகழ்வுகள் ஓர் ஐ.எஸ்.டி.ஏ ஒப்பந்தத்தால் ஆளப்படுகின்றன. நடந்துகொண்டிருக்கும் வெளியாக்கலை கணக்கிட மாதிரிகளைப் பயன்படுத்தும்போது, எஃப்.ஏ.எஸ் 157ன்படி தனி உருவானது தவறுகை அபாயத்தை (“செயற்படாமை அபாயம்”) கருத்தில் கொண்டு அதன் கணக்கிடுதல்களில் தேவையான சீர்திருத்தங்களை செய்யக் கோருகிறது.

பரிமாற்றகத்தில் வணிகம் செய்யப்படும் சார்பேயங்களுக்கு, ஓர் எதிர்த்தரப்பினர் இந்த முறையான பரிமாற்றத்தில் தவறினால், அந்த எதிர்த்தரப்பினருடைய நிலையை பரிமாற்றகம் உடனே மூடிவிட்டு, அந்த எதிர்த்தரப்பினருடைய நிலையை தீர்வகம் (க்ளியரிங்க் ஹவுஸ்) எடுத்துக்கொள்கிறது. சந்தை விலைப்படுத்துதல் கிட்டத்திட்ட கடன் அபாயத்தை அறவே எடுத்துப் போடுகிறது. ஆனால் பொதுவாக பெரிய நிறுவனங்களால் மட்டுமே இயலக்கூடிய கண்காணிப்பு அமைப்புகளின் உபயோகம் தேவைப்படுகிறது.[5]

தரகர்களின் பயன்பாடு

[தொகு]

பங்கு தரகர்கள் இடைவெளி கணக்குகள் மூலமாக தங்களுடைய வாடிக்கையாளர்கள் கடனை அணுக அனுமதிக்கிறார்கள். இந்த கணக்குகள் மூலமாக வாடிக்கையாளர்கள் ஆவணங்கள் வாங்க நிதிகளைக் கடனாக பெற அனுமதியுண்டு. எனவே, கிடைக்கப்பெறும் நிதிகளின் அளவு பணத்தின் (அல்லது அதற்கு சமமானது) மதிப்பைவிட அதிகமாயிருக்கிறது. வங்கிகள் கடன் வழங்குவது போலவே கடனானது ஒரு வட்டி விகிதத்தின் பேரில் அளிக்கப்படுகிறது. ஆவணங்களின் (பங்குகள் அல்லது சூதங்கள் போன்ற மற்ற நிதியியல் பத்திரங்கள்) மதிப்பு சந்தையில் மேல் கீழிறங்கினாலும், கணக்குகளின் மதிப்பு தொடர்ந்துக் கணக்கிடப்படுவதில்லை. சந்தை விலைப்படுத்துதல் பொதுவாக ஒரு வணிக தினத்தின் இறுதியில் செய்யப்படுகிறது. கணக்கு மதிப்பு ஒரு குறிப்பிட்ட மட்டத்தை (பொதுவாக தரகர் மூலமாக முன் – நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகிதம்) விட கீழிறங்கினால், தரகர் ஒரு மார்ஜின் காலை வெளியிடுகிறார். அப்போது வாடிக்கையாளர் மேலும் பணத்தைப் போட வேண்டும் அல்லது தன்னுடைய கணக்கைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

சப்-பிரைம் நெருக்கடி மற்றும் அவசரப் பொருளாதார சீர்த்திருத்த சட்டம் 2008ன் மீதான தாக்கம்

[தொகு]

முன்னால் எஃப்.டீ.ஐ.சி தலைவரான வில்லியம் ஐசக் சப்-பிரைம் அடமான நெருக்கடிக்கான பெரும்பாலான பழி ஆவணங்கள் மற்றும் பரிமாற்ற ஆணையத்தின் மீதும் அதன் நியாய-விலை கணக்கு வைப்பு விதிகளையும் சாரும் என்றார். அதிலும், வங்கிகள் தங்களுடைய சொத்துகளை சந்தை விலைப்படுத்த வேண்டும், குறிப்பாக அடமானம்-சார்ந்த ஆவணங்கள் என்ற விதி மேலும் பழி சுமக்கும் என்றார்.[6] இது உண்மையா இல்லையா என்பது தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது.[7][8]

இந்த கணக்கு வைப்பு விதியின்படி நிறுவனங்கள் சந்தைப்படுத்தக்கூடிய ஆவணங்களை (நெருக்கடிக்கு மையக் காரணமாக விளங்கும் அடமானம்-சார்ந்த ஆவணங்கள் (எம்.பீ.எஸ்) போல) அவைகளுடைய சந்தை விலைக்கு மதிப்பிட வேண்டுமென்று கோருவதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தரக்கட்டுப்பாட்டுக்கான காரணம், முதலீட்டாளர்கள் சொத்துகளுடைய வரலாற்று வாங்குவிலை மட்டுமல்லாமல், எந்த ஒரு நேரத்திலும் அவைகளுடைய தற்போதைய மதிப்பையும் புரிந்திருக்க வேண்டுமென்பதே. இவ்வகை சொத்துகளுக்கான சந்தை இன்னலில் இருப்பதால், பல எம்.பீ.எஸ் களை இவ்வகை சந்தை அழுத்தங்களை பிரதிபலிக்காத (அல்லது பிரதிபலிக்கும்) விலைகளில் அவைகளை விற்பது கடினமாகும். இது அந்த எம்.பீ.எஸ் உடன் தொடர்புள்ள அடமான பணப்பாய்வுக்கு ஏற்ற மதிப்பை விட குறைவானதாக இருக்கலாம். ஆரம்பத்தில் நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்கள் அளித்த சொல் பொருள் விளக்கத்தின்படி, பணப்பாய்வு மதிப்பையல்லாமல் பொதுவாக குறைவான விற்பனை விலை சந்தை விலையாக பயன்படுத்தப்பட்டது. பல பெரிய நிதி நிறுவனங்கள் எம்.பீ.எஸ் சொத்து விலைகளை சந்தை மதிப்பிற்கு கொண்டு வந்ததால் 2007ஆம் ஆண்டிலும் 2008ஆம் ஆண்டிலும் குறிப்பிடத்தக்க நட்டங்களை சந்தித்தன.

சில நிறுவனங்கள் இதனால் ஒரு மார்ஜின் கால் கட்ட வேண்டியதாயிற்று. எம்.பீ.எஸ்களை துணை ஈடாக (கொலாட்டிரல்) பெற்று கடன் வழங்கியவர்கள் தங்கள் பணத்தைப் பெற ஒப்பந்தத்தின்படி உரிமை பெற்றிருந்தனர்.[9] இதன் விளைவால் எம்.பீ.எஸ் கட்டாயத்தின்படி விற்கப்படும்படி மேலும் அழுத்தம் ஏற்பட்டு மார்ஜின் காலை கட்டித் தீர்க்கும்படி பணம் பெற (நீர்மை) அவசர நடவடிக்கைகள் செய்யப்பட்டன. விலைக் குறைப்புகள் வங்கியின் கட்டுப்பாட்டு முதலின் மதிப்பையும் குறைக்கலாம். இதனால் கூடுதல் முதலீட்ட வேண்டியதாகி வங்கியின் ஆரோக்கியத்தைக் குறித்த ஒரு நிலையில்லாமையை உண்டாக்குகிறது.[10]

அதிகப்படியான நிதியியல் நெம்புக்கோல்கள் (அதாவது, முதலீடு செய்ய கடன் வாங்குதல், ஒரு பொருளாதார வீழ்ச்சியின்போது மிகக் குறுகிய வாசலை விட்டு வைப்பது) பயன்படுத்துவது, மார்ஜின் கால்கள் மற்றும் வெகு பலுவான நட்டங்கள் அறிவிக்கப்பட்டது ஆகியவை இணைந்து நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கலாம்.[11] விற்பனை மதிப்பையல்லாமல், பணப்பாய்விலிருந்து பெறப்பட்ட மதிப்பு (இது தவறுகை அபாயத்தைக் கருத்தில் கொள்ளும் சந்தைத் திருத்தியமைப்பை கருத்தில் கொள்வதில்லை. ஆனால் சந்தை போதுமான அளவு இன்னலில் இருந்தால், இது ‘உண்மையான’ விலையை மேலும் துள்ளியமாக பிரதிபலிக்கக் கூடும்) பயன்படுத்தப்பட்டால், கணக்கு வைப்பு தரக்கட்டுப்பாட்டின் கீழ் சந்தை-மதிப்பு திருத்தியமைப்புகளின் அளவு பொதுவாக குறைவாகவே இருக்கும். வங்கிகள் அல்லது ஜீ.எஸ்.ஈக்கள் (ஃபேனி மே மற்றும் ஃப்ரட்டி மேக்) ஏன் அதிக-ஆபத்தான, எம்.பீ.எஸ் போன்ற மதிப்பிட கடினமான சொத்துகளை அல்லது ஒத்திவைக்கப்பட்ட வரி சொத்துகள் ஆகியவற்றை தங்களுடைய கட்டுப்பாட்டு முதலீடாக வைத்திருக்கிறார்களென்ற கேள்வி எழலாம். கணக்கு வைப்பு தரக்கட்டுப்பாட்டில் மார்ஜின் கால் உட்படுகிறதா இல்லையா என்பதில்லை, ஆனால் அது கடன் வாங்குபவருக்கும் வழங்குபவருக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தங்களின் ஒரு பங்காகும்.

இப்படி நடந்திருக்கக் கூடுமென்ற வாதத்தை விமர்சகர்கள் பின்வருமாறு குறை கூறுகின்றனர். “சுருக்கமாக கூறப்போனால், மோசமான நிதியியல் பத்திரங்களை உண்டாக்கி அல்லது திருப்பியே செலுத்த முடியாத கடன்களை அளித்து வங்கிகள் பொறுப்பற்று நடந்துகொண்டன என்பது பிரச்சனையல்ல. யாரோ ஒருவர் அவைகளை தங்கள் குற்றங்களை அவைமுன் வைக்கக் கட்டாயப்படுத்துவதே ஆகும். சொத்துகள் அனைத்தும் விலையுயர்ந்தவை என்று வங்கிகள் பாவனை செய்தால், முழு அமைப்புமே பாதுகாப்பானதாக இருக்கும். அவ்வளவு தான்” என்று கூறுவது போல் இருக்கிறது என்றனர்.[12]

2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி எஸ்.ஈ.சியும் எஃப்.ஏ.எஸ்.பீயும் இணைந்து சந்தை ஒழுங்கற்று அல்லது செயலற்று இருக்கும்போது நியாய விலை கணக்கு வைப்பைக் குறித்த ஒரு தெளிவாக்கத்தை அளித்தார்கள். கட்டாயப்படுத்தப்பட்ட நீர்மைகள், ஒரு “முறையான” பரிவர்த்தனையாக இல்லாததால் அவை நியாய விலையை சுட்டிக் காட்டுவதில்லையென்று இந்த வழிமுறை தெளிவாக்கியது. மேலும், பத்திரங்களிலிருந்துப் பெறக்கூடிய பணப்பாய்வின் அடிப்படையில் ஊகங்கள் செய்யப்படலாமென்று அது தெளிவாக்கியது. எனினும் இந்த ஊகங்களில் தவறுகை மற்றும் நீர்மை அபாயங்கள் போன்று ஒரு ஆர்வமான வாங்குபவர் செய்ய விரும்பும் திருத்தியமைப்புகள் பிரதிபலிக்கப்பட்டிருக்க வேண்டும்.[13]

அவசரப் பொருளாதார சீர்த்திருத்த சட்டம் 2008ன் பிரிவு 132 “சந்தை விலைப்படுத்தும் கணக்கு வைப்பைத் தடை செய்வதற்கான அதிகாரம்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பொது நலத்திற்கும் முதலீட்டாளர்களை பாதுகாக்கவும் அவசியப்பட்டால் ஆவணங்கள் மற்றும் பரிமாற்று ஆணையம் எஃப்.ஏ.எஸ் 157ஐ தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரம் பெற்றுள்ளதென்று தெரிவிக்கிறது.

இந்த சட்டத்தின் பிரிவு 133 “சந்தை விலைப்படுத்துதல் குறித்தான ஆய்வு” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் ஃபெடரல் ரிசர்வ் போர்ட் மற்றும் நிதித்துறையுடன் சேர்ந்து எஸ்.ஈ.சி. எஃப்.ஏ.எஸ் 157ல் அளிக்கப்பட்டுள்ள சந்தை விலைப்படுத்தும் தரக்கட்டுப்பாடுகளைக் குறித்து ஒரு ஆய்வை நடத்த கோரியுள்ளது. இதில் சந்தை விலைப்படுத்துவதன் மூலமாக இருப்பு நிலைக்குறிப்பில் ஏற்படும் தாக்கங்கள், நிதித் தகவல் தரத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் மற்ற காரியங்கள் அடங்கும். மேலும் இந்த கண்டுபிடிப்புகள் பெற்ற 90 நாட்களுக்குள் காங்கிரஸுக்கு முன் சமர்ப்பிக்கவும் அது கோரினது.[14]

அவசரப் பொருளாதார சீர்திருத்த சட்டம் 2008 நிறைவேற்றப் பெற்று 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி ஒரு சட்டமாக கையொப்பமிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, அவசரப் பொருளாதார சீர்திருத்த சட்டம் 2008ன் பிரிவு 133ல் அங்கிகரித்துள்ளபடி, எஸ்.ஈ.சி ‘சந்தை விலைப்படுத்தலைக்” குறித்து ஒரு ஆய்வை நடத்த தொடங்கியது.[15]

2008ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி, எஃப்.ஏ.எஸ்.பீ ஒரு குறிப்பிட்ட சொத்திற்கான சந்தை அந்த அறிவிக்கப்படும் தேதியில் செயலற்று இருக்கும்போது அதற்கு எப்படி நியாய விலை கணக்கிட வேண்டுமென்பதைப் பற்றிய ஒரு உதாரணத்தை அளித்தது.[16]

2008ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி, எஸ்.ஈ.சி பிரிவு 133ன் கீழ் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்து, சந்தை-விலைப்படுத்துதல் கணக்கு வைப்பை நிறுத்தி வைக்க வேண்டாமென்று முடிவு செய்தது.[17]

2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஃபெடரல் ரிசர்வ் தலைவராகிய பென் பெர்னாங்க் வாஷிங்க்டன்னிலுள்ள வெளியுறவுத்துறை கவுன்சிலில் பேசும்போது, “நிதியியல் அமைப்பிலும் பொருளாதாரத்திலும் அதிகப்படியான ஊசல்களை தூண்டாத வகையில் நாம் கட்டுப்பாட்டு கொள்கைகளையும் கணக்கு வைப்பு விதிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்றார். சந்தை விலைப்படுத்துதல் என்ற கோட்பாட்டை முழுவதுமாக நீக்க வேண்டுமென்பதற்கு அவர் ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், அதை மேம்படுத்தி, இந்த கொள்கைகளினால் ஏற்படும் சுழல்முறை விளைவுகளைக் குறைக்க சொத்துகளை மதிப்பிடுவதில் நியாயமான வழிகளைப் பற்றி “வழிமுறைகள்” வழங்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.[18]

2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி, எஃப்.ஏ.எஸ்.பீ “சந்தை விலைப்படுத்துதல்” முறையின் கீழ் தங்கள் சொத்துகளை மதிப்பிடும் நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் வழங்க அனுமதிக்குமாறு முன்மொழிந்தது. இதன் மூலமாக பொருளாதார நெருக்கடியின் போது பல நிறுவனங்கள் அனுபவிப்பதாகக் கூறின இருப்பு நிலைக்குறிப்பு அழுத்தங்களிலிருந்து சற்று விடுதலைக் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி, 15-நாள் பொது விமர்சன காலத்திற்குப் பின், எஃப்.ஏ.எஸ்.பீ சந்தை விலைப்படுத்துதல் விதிகளை தளர்த்தியது. நிதி நிறுவனங்கள் இன்னமும் தங்கள் பரிவர்த்தனைகளை சந்தை விலைகளுக்கு மதிப்பிட வேண்டும், ஆனால் இது அதிகமாக சந்தை நிலையாக இருக்கும்போது கையாளப்பட வேண்டும். சந்தை செயலற்று இருக்கும் போது தேவையில்லை. இந்த விதிகளை முன்மொழிபவர்களுக்கும், இது தேவையற்ற “சாதகமான பின்னூட்ட வளையத்தை” கலைகிறது. இந்த வளையமானது ஒரு மிகவும் பலுகுறைந்த பொருளாதாரத்தில் விளைகிறது.[19]

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி, எஃப்.ஏ.எஸ்.பீ, எஃப்.ஏ.எஸ் 157க்கான[20] அதிகாரப்பூர்வமான புதுப்பிப்பை வெளியிட்டது. இது சந்தை நிலையற்று அல்லது செயலற்று இருக்கும்போது சந்தை விலைப்படுத்துதல் விதிகளை தளர்த்தியது. ஆரம்பப் பின்பற்றிகள் இந்த விதியை 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதியிலிருந்து அமுல்படுத்த அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் 2009ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் அமுல்படுத்த வேண்டியிருந்தது. இந்த மாற்றங்களினால் வங்கிகள் தங்கள் அறிக்கைகளில் வருவாய்களை குறிப்பிடத்தக்க முறையில் அதிகரிக்கவும் நட்டங்களை அறிக்கையிடுவதை தள்ளிவைக்கவும் உதவுமென்று எதிர்பார்க்கப்பட்டது.[21] இந்த மாற்றங்கள், அடமானம்-சார்ந்த ஆவணங்களை மட்டும் பாதிக்காமல் பரவலான சார்பேயங்களுக்கு பொருந்தும் கணக்கு வைப்பு தரக்கட்டுப்பாடுகளையும் பாதித்தன.

இக்கருத்துகளை எதிர்ப்பவர்கள், இப்படிப்பட்ட ஆவணங்களுக்குக் கீழே இருக்கும் சொத்துகளை மதிப்பிடுதல் பகுப்பாய்வு செய்ய எளிதாகாமல் முதலீட்டாளர்களுக்குக் கடினமாகும் என்று வாதிடுகின்றனர். ஒரு நிறுவனத்துடைய சொத்துக்கள் தகுந்த முறையில் விலைக்குறைக்க அனுமதிக்கப்படாவிட்டால், அதன் உண்மையான சொத்துக்கள், சரி ஒப்பு மற்றும் வருமானங்களை நிர்ணயிக்கும்போது அவைகளின் மதிப்பு கூடுதலாக காண்பிக்கப்படும்.[மேற்கோள் தேவை][22][23]

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம், யு.கேவின் நிதியியல் சேவைகள் அதிகாரத்தின் (ஃபினான்ஷியல் சர்வீசஸ் அதாரட்டி) தலைவர் அடேர் டர்னர், வங்கி ஊழியர்களின் உபரிச் சம்பளங்கள் பெருக்கமடைந்ததற்கு சந்தை விலைப்படுத்துதல் ஒரு காரணமாக விளங்கியதென்றார். இதேனென்றால் ஒரு சந்தை வளர்ச்சிப் பருவத்தில் அது ஒரு சுய-வலிமைப்படுத்தும் ஒரு சுழற்சியை உண்டாக்குகிறது. இது வங்கிகளுடைய இலாப அனுமானிப்புகளில் பங்கு வகிக்கிறது.[24]

மேலும் காண்க

[தொகு]
  • கணக்கு வைப்புத் தலைப்புகளின் பட்டியல்
  • நிதி தலைப்புகளின் பட்டியல்
  • நியாய விலை
  • பணமாக்குதல் (நிதியியல்)
  • மாதிரி விலைப்படுத்துதல்
  • என்ரான் ஊழல்

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "3/10/00ல் எஸ்.ஈ.சி இன்ஃபோ - சிக்காகோ மெர்கண்டைல் எக்ஸ்சேஞ் இங்க்- எஸ்-4/ஏ". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-05-15.
  2. நிதியியல் கணக்கு வைப்புத் தரக்கட்டுப்பாட்டு வாரியம் "அறிக்கை எண் 157ன் சுருக்கம் பரணிடப்பட்டது 2010-05-23 at the வந்தவழி இயந்திரம்" 2009ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி மீட்கப்பட்டது.
  3. டௌப் எஸ். (2007). எஃப்.ஏ.எஸ் 157 மிகப் பெரிய தள்ளுபடிகளை (ரைட் ஆஃப்) உண்டாக்கலாம். CFO.com.
  4. "எஃப்.ஏ.எஸ்.பீ செய்தி மையம்". Archived from the original on 2010-06-29. பார்க்கப்பட்ட நாள் 2010-05-15.
  5. *Crouhy, Michel (2001). Risk Management. McGraw-Hill. pp. 752 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-135731-9. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help) பக்கம் 445.
  6. "முன்னால் எஃப்.டீ.ஐ.சி தலைவர் பொருளாதார நெருக்கடிக்கு எஸ்.ஈ.சீ காரணம் என்கிறார்", சி.என்.பீ.சி, 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மீட்கப்பட்டது.
  7. நியாய விலை: நடைமுறைக்கேற்ற தீர்வு, ஃபார்ச்சூன் , 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி மீட்கப்பட்டது.
  8. ஃபோர்ப்ஸ், ஸ்டீவ். "புஷ்ஷுடைய மிகவும் மோசமான சந்தைத் தவறுகளை ஒபாமா மறுபடியும் செய்கிறார்" த வால் ஸ்டிரீட் ஜர்னல். 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி. 2009ஆம் தேதி ஜூன் மாதம் 13ஆம் தேதி மீட்கப்பட்டது.
  9. ஒரு மார்ஜின் காலுக்கான உதாரணம்
  10. காட்ஸ், இயன். "பிஹைண்டு ஸ்க்வார்ஸ்மான் ஸ்பாட் வித் வாசர்ஸ்டீன் லைஸ் ரூல் 115" ப்ளூம்பர்க் நியூஸ். 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி. 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி மீட்கப்பட்டது.
  11. வெஸ்ட்ப்ரூக், ஜெஸ்ஸி."நியாய விலை விதிகளை நிறுத்தி வைப்பதற்கான அழைப்புகளை எஸ்.ஈ.சி, எஃப்.ஏ.எஸ்.பீ எதிர்க்கின்றன” ப்ளூம்பர்க் நியூஸ். 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி. 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி மீட்கப்பட்டது.
  12. விதிமுறைகள் தான் பிரச்சனை என்று வங்கிகள் கூறுகின்றன. நியு யார்க் டைம்ஸ், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி.
  13. நியாய விலை கணக்கு வைப்பில் தெளிவுரைகள், எஸ்.ஈ.சீ, 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி மீட்கப்பட்டது.
  14. ""அவசரப் பொருளாதார சீர்திருத்த சட்டம் 2008"" (PDF). Archived from the original (PDF) on 2009-01-16. பார்க்கப்பட்ட நாள் 2010-05-15.
  15. காங்கிரஸ் பணித்திருக்கிற கணக்கு வைப்பு தரக்கட்டுப்பாடுகள் மீதான ஆய்வை எஸ்.ஈ.சி ஆரம்பிக்கிறது, எஸ்.ஈ.சி, 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி மீட்கப்பட்டது.
  16. "எஃப்.ஏ.எஸ்.பீ தெளிவுரைகள்" (PDF). Archived from the original (PDF) on 2010-12-14. பார்க்கப்பட்ட நாள் 2010-05-15.
  17. நியாய விலை கணக்கு வைப்பு தரக்கட்டுபாடுகளை மேம்படுத்தவும், நிறுத்தி வைக்க வேண்டாமென்றும், காங்கிரஸ்-பணித்த ஆய்வு கூறுகிறது, எஸ்.ஈ.சி. 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி மீட்கப்பட்டது.
  18. அபாயங்கள் அதிகரிப்பதைத் தடுக்க விதிமுறைகள் மேம்படுத்த வேண்டுமென்று பெர்னான்க் வலியுறுத்துகிறார்”. ப்ளூம்பர்க், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி மீட்கப்பட்டது.
  19. எஃப்.ஏ.எஸ்.பீ சந்தை விலைப்படுத்தல் விதிமுறைகளைத் தளர்த்துகிறது, டபுள்யு.எஸ்.ஜே, 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி மீட்கப்பட்டது.
  20. "எஃப்.ஏ.எஸ் 157-4 நிலை". Archived from the original on 2017-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-10-20.
  21. எஃப்.ஏ.எஸ்.பீ அமோதிக்குமென்பதால், சந்தை விலைப்படுத்துதல் வேண்டுமென்று கோருபவர்கள் வங்கி லாபங்களை 20% உயர்த்துகின்றனர். ப்ளூம்பர்க், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி மீட்கப்பட்டது.
  22. $1 டிரில்லியன் மணி குண்டு போலியான லாபத்தை வெளியிடுகிறது: ஜோனத்தன் வெயில், ப்ளூம்பர்க், 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி
  23. வழக்குத் தொடரும் வால் ஸ்டிரீட் வங்கிகள் இவ்வளவு ஐயத்திற்கிடமாக காணப்பட்டதில்லை: ஜோனத்தன் வெயில். ப்ளூம்பர்க், 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி.
  24. வங்கிகளுடைய உபரிச் சம்பளங்கள் நியாய விலையால் கொழுத்துவிட்டன்: லார்ட் டர்னர், அகௌண்டன்ஸி ஏஜ், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதி. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி மீட்கப்பட்டது.