சந்தோசு மாதவன்

சந்தோசு மாதவன்
Santosh Madhavan
பிறப்பு(1960-06-07)7 சூன் 1960
இறப்பு6 மார்ச்சு 2024(2024-03-06) (அகவை 63)
கொச்சி, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்அமிர்த சைத்தன்யா
பணிஆன்மீக குரு

சந்தோசு மாதவன் (Santosh Madhavan, 7 சூன் 1960[1] – 6 மார்ச் 2024)[2] 'அமிர்த சைதன்யா என்ற பெயரில் இயங்கிய ஓர் இந்திய ஆன்மீக குரு ஆவார். ஐக்கிய அரபு அமீரகத்தில் மோசடியில் ஈடுபட்டதற்காக சந்தோசு மாதவன் 2004 ஆம் ஆண்டு முதல் இன்டர்போல் என்ற காவல்துறை நிறுவனத்தால் தேடப்பட்டார். இவர் 2002 ஆம் ஆண்டில் 400,000 திர்காம் பண மோசடி செய்ததாக துபாயைச் சேர்ந்த இந்தியப் பெண் செராபின் எட்வின் குற்றம் சாட்டினார். சந்தோசு மாதவன் தனது பெற்றோரின் பெயரில் சாந்திதீராம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவியிருந்தார். பண மோசடி செய்ததற்காக இவர் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று கொச்சின் அருகே கைது செய்யப்பட்டார். [3] சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் கொண்ட ஒரு குற்றவாளி எனவும் நிருபிக்கப்பட்டார். சிறுமிகளை துன்புறுத்தி ஆபாச வீடியோக்களை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். [4][5] காவல்துறை காவலில் இருந்தபோது மார்பு வலி குறித்து புகார் அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். [6] 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 அன்று இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

[தொகு]