ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி Democratic People's Liberation Front | |
---|---|
செயலாளர் | எஸ். சதானந்தன் |
தொடக்கம் | 1988 |
தலைமையகம் | 16 ஏக் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு 4 |
கூட்டணி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் | 1 / 225 |
தேர்தல் சின்னம் | |
நங்கூரம் | |
இலங்கை அரசியல் |
சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (Democratic People's Liberation Front, DPLF) என்பது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும். இது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவாகும். இக்கட்சி 1988 இல் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராக தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளார்.
சனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னி மாவட்டத்தில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 3 இடங்களைக் கைப்பற்றியது.[1] 2000 தேர்தலில் இக்கட்சி எந்த இடத்தையும் பெறவில்லை.[2] 2001 தேர்தலில் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மட்டுமே வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] 2004,[4][5] 2010[6] தேர்தல்களில் எவரும் வெற்றி பெறவில்லை.