![]() | |
சன் நெட்வொர்க் தலைமையகம் | |
வகை | பொது |
---|---|
நிறுவுகை | 1992 |
நிறுவனர்(கள்) | கலாநிதி மாறன் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முதன்மை நபர்கள் | கலாநிதி மாறன் (Chairman) |
தொழில்துறை | மக்கள் ஊடகம் |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
பணியாளர் | 1,959 (2017)[1] |
தாய் நிறுவனம் | சன் குழுமம் |
இணையத்தளம் | www www |
சன் டிவி நெட்வொர்க் (சன் தொலைக்காட்சி வலையமைப்பு) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள மக்கள் ஊடக நிறுவனமாகும். சன் குழுமத்தின் பகுதியான இது ஆசியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி வலையமைப்பாக உள்ளது.[2][3] 14 ஏப்ரல் 1992 கலாநிதி மாறனால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு வகையான தொலைக்காட்சிகளையும் வானொலி அலைவரிசைகளையும் பல்வேறு மொழிகளில் நிர்வகித்து வருகிறது.
இதன் அடையாளத் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சி இந்தியாவின் முதல் தனியார் தமிழ் தொலைக்காட்சியாகும். சன் குழுமம் 2012 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் ஐதராபாத் நகரை அடிப்படையாகக் கொண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் என்ற அணியை நிர்வகித்து வருகிறது.[4][5]
சன் குழுமத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி போன்ற நான்கு மொழிகளில் 32 தொலைக்காட்சி அலைவரிசைகள் (24 நிலையான வரையறு தொலைக்காட்சி +8 உயர் வரையறு தொலைக்காட்சி) சொந்தமாகக் கொண்டு இயங்குகிறது. சன் குழுமம் 7 புதிய உயர் வரையறு தொலைக்காட்சி மற்றும் 3 புதிய எஸ்டி அலைவரிசைகளை துவங்கவுள்ளது. அதன் முதல்கட்டமாக வட இந்தியாவில் மராத்தி மொழியில் முதல் அலைவரிசையை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் பின்னர் சன் குழுமத்தில் மொத்தம் 42 அலைவரிசைகள் இருக்கும்.
உயர் வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகள் | ||||
---|---|---|---|---|
வகை | தமிழ் | தெலுங்கு | கன்னடம் | மலையாளம் |
பொழுதுபோக்கு | சன் தொலைக்காட்சி | ஜெமினி தொலைக்காட்சி | உதயா தொலைக்காட்சி | சூர்யா தொலைக்காட்சி |
இசை | சன் மியூசிக் | ஜெமினி மியூசிக் | ||
திரைப்படங்கள் | கே தொலைக்காட்சி | ஜெமினி மூவீஸ் |
நிலையான வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகள் | |||||
---|---|---|---|---|---|
வகை | தமிழ் | தெலுங்கு | கன்னடம் | மலையாளம் | வங்காளம் |
பொழுதுபோக்கு | சன் தொலைக்காட்சி | ஜெமினி தொலைக்காட்சி | உதயா தொலைக்காட்சி | சூர்யா தொலைக்காட்சி | சன் வங்காள |
இசை | சன் மியூசிக்கு | ஜெமினி மியூசிக் | உதயா மியூசிக் | சூர்யா மியூசிக் | |
திரைப்படங்கள் | கே தொலைக்காட்சி | ஜெமினி மூவீஸ் | உதயா மூவீஸ் | சூர்யா மூவீஸ் | |
நகைச்சுவை | ஆதித்யா தொலைக்காட்சி | ஜெமினி காமெடி | உதயா காமெடி | சூர்யா காமெடி | |
சிறுவர்கள் | சுட்டித் தொலைக்காட்சி | குஷி தொலைக்காட்சி | சிண்டூ தொலைக்காட்சி | கொச்சு தொலைக்காட்சி | |
செய்திகள் | சன் செய்திகள் | ||||
பழைய திரைப்படங்கள் & பொழுதுபோக்கு | சன் லைப் | ஜெமினி லைப் |
நிலையான வரையறு தொலைக்காட்சி அலைவரிசைகள் | |||||
---|---|---|---|---|---|
வகை | தமிழ் | தெலுங்கு | கன்னடம் | மலையாளம் | வங்காளம் |
செய்திகள் | ஜெமினி செய்திகள் (2004-2019) |
சன் குழுமத்தில் இரண்டு தினசரி செய்தித்தாள்கள் மற்றும் ஆறு பத்திரிகைகளை தமிழில் வைத்திருக்கிறது. 1977 ஆம் ஆண்டில் கே. பி. கந்தசாமியால் தினகரன் என்ற காலை செய்தித்தாள் நிறுவப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் சன் நெட்வொர்க்கால் கே. பி. கே. குமரனிடமிருந்து வாங்கப்பட்டது.[6][7] இது இந்தியாவில் தினத்தந்திக்குப் பிறகு இரண்டாவது பெரிய புழக்கத்தில் உள் செய்தித்தாள் ஆகும்.[8][9]
தமிழ்முரசு ஒரு மாலை செய்தித்தாள். இக்குழுவுக்கு குங்குமம், முத்தாரம் மற்றும் வண்ணத்திரை என்ற வார இதழும், குங்குமச் சிமிழ், குங்குமம் தோழி என்ற மாத இருமுறை இதழும் உண்டு.
இந்தக் குழு இந்தியா முழுவதும் 67 பண்பலை ஒலிபரப்பு வானொலி நிலையங்களை சூரியன் பண்பலை வானொலி, ரெட் பண்பலை வானொலி என்ற பெயரில் ஒலிபரப்புகிறது.