சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா | |
---|---|
சுருக்கக்குறி | SSM |
தலைவர் | பல்பீர் சிங் ரஜ்வால்[1] |
நிறுவனர் | பல்பீர் சிங் ரஜ்வால் |
தொடக்கம் | 25 திசம்பர் 2021[2] |
தலைமையகம் | 92/C பக்வான்பூர் சாலை, சம்மர்லா, லூதியானா[3] |
கொள்கை | விவசாயம் |
நிறங்கள் | பச்சை |
கூட்டணி | சன்யுத் சங்கார்சு கட்சி |
இந்தியா அரசியல் |
சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா (Sanyukt Samaj Morcha) என்பது இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும்.
2020ஆம் ஆண்டில், இந்திய நாடாளுமன்றத்தால் மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, இதற்கு எதிராக பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த சட்டத்தினை இடைநிறுத்தும் வரை, 32 பஞ்சாப் விவசாயச் சங்கங்கள் அரசியலில் பங்கேற்பதில்லை என்று அறிவித்தன.[4]
மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்த பிறகு, 32 பஞ்சாப் விவசாயச் சங்கங்கள் நடைபெற இருக்கும் பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் பங்கேற்பதாக அறிவித்தன.
புதிய கட்சியின் முதல்வர் வேட்பாளராக பல்பீர் சிங் ராஜேவால் அறிவிக்கப்பட்டார். சம்யுக்த் கிசான் மோர்ச்சா புதிய கட்சியிலிருந்து விலகியது. இதற்கும் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவிற்கும் தொடர்பு இல்லை என்று கூறியது.[5]
நவன் பஞ்சாப் கட்சியின் தலைவர் தரம்வீர் காந்தி சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா தனது ஆதரவைத் தெரிவித்தார்.[6]
ஜனவரி 16, 2022 அன்று, அப்னா பஞ்சாப் கட்சி சன்யுக்த் சமாஜ் மோர்ச்சாவுடன் இணைந்தது.[7]
2022ஆம் ஆண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில், சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா சன்யுக்த் சங்கர்ஷ் கட்சியுடன் கூட்டணியை அறிவித்தது.[8]