சபா காகாசான் மக்கள் கட்சி Sabah People's Ideas Party Parti Gagasan Rakyat Sabah حزب أفكار شعب صباح 沙巴民意党 | |
---|---|
சுருக்கக்குறி | GAGASAN / PGRS |
தலைவர் | அஜிஜி நூர் (Hajiji Noor) |
செயலாளர் நாயகம் | ரசாலி ராசி |
நிறுவனர் | அத்தியோங் தித்தோ (Ationg Tituh)[1] |
தொடக்கம் | 28 ஆகஸ்டு 2013 |
பிரிவு | சபா மலேசிய ஐக்கிய பூர்வீகக் கட்சி (BERSATU Sabah) சபா அம்னோ (UMNO Sabah) சபா பாரம்பரிய கட்சி (WARISAN) |
தலைமையகம் | Ibu Pejabat Parti Gagasan Rakyat Sabah, Block G, Lor Plaza Permai 2, Alamesra, 88400 கோத்தா கினபாலு, சபா |
உறுப்பினர் (2023) | 579,940 |
கொள்கை | பிராந்தியவாதம் பல்லினவாதம் சபா பிராந்தியவாதம் சபா & சரவாக் ஐக்கியம் MA63 உரிமைகள் |
தேசியக் கூட்டணி | சபா மக்கள் கூட்டணி (2022 தொடக்கம்) |
நிறங்கள் | சிவப்பு & நீலம் |
மலேசிய மேலவை: | 2 / 70 |
மலேசிய மக்களவை: | 0 / 25 |
சபா மாநில சட்டமன்றம்: | 26 / 79 |
சபா முதலமைச்சர்கள் | 1 / 13 |
தேர்தல் சின்னம் | |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
gagasanrakyat |
சபா காகாசான் மக்கள் கட்சி (ஆங்கிலம்: Sabah People's Ideas Party; மலாய்: Parti Gagasan Rakyat Sabah) (GAGASAN / PGRS) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். ஆகஸ்டு 2013-இல் அத்தியோங் தித்தோ (Aiong Tituh) என்பவரால் நிறுவப்பட்ட இந்தக் கட்சி; 2023-இல் அஜிஜி நூர் (Hajiji Noor) என்பவரால் கைப்பற்றப்பட்டது.
தற்போது சபாவின் ஆளும் சபா மக்கள் கூட்டணி (GRS) எனும் கூட்டணி அமைப்பில் மிகப்பெரிய கட்சியாக உள்ளது.
சபா காகாசான் மக்கள் கட்சி 28 ஆகஸ்டு 2013-இல் அத்தியோங் தித்தோ என்பவரால் நிறுவப்பட்டது. ஆனால், நிதி மற்றும் ஆள் பற்றாக்குறை காரணமாக 2016-ஆம் ஆண்டு வரை செயலற்ற நிலையில் இருந்தது.[2]
2023-இல் அஜிஜி நூர் கட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு, இந்த சபா காகாசான் மக்கள் கட்சி, கடசான்-டூசுன் ருங்குஸ் இனக்குழுவின் ஆதிக்கத்தில் இருந்தது.[3][4]
9 திசம்பர் 2022-இல் அஜிஜி நூர் தலைமை தாங்கிய சபா மக்கள் கூட்டணியில் சபா காகாசான் மக்கள் கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 29 சனவரி 2023 அன்று கட்சியை எடுத்துக் கொள்வதாக சபா முதலமைச்சர் அஜிஜி நூர் அறிவித்தார்.
டிசம்பர் 2022-இல் அஜிஜி நூர் மற்றும் நான்கு மலேசிய மக்களவை உறுப்பினர்களும் சேர்ந்து, அவர்களின் முந்தைய மலேசிய சபா ஐக்கிய பூர்வீகக் கட்சியை (Malaysian United Indigenous Party of Sabah) விட்டு வெளியேறினர். இருப்பினும், மலேசியக் கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்டத்தின் (Federal Anti-party Hopping Law) காரணமாக அவர்கள் சபா காகாசான் மக்கள் கட்சியில் (Parti Gagasan Rakyat Sabah) (GAGASAN) சேர அனுமதிக்கப்படவில்லை.[5]
சபா அரசியல் நெருக்கடி 2023-இன் போது சபா காகாசான் மக்கள் கட்சி, சபா மாநில சட்டமன்றத்தில் 26 தொகுதிகளைக் கைப்பற்றியது.
# | பெயர் | பதவியில் | குறிப்பு | |
---|---|---|---|---|
1 | அத்தியோங் தித்தோ (Ationg Tituh) |
28 ஆகஸ்டு 2013 | 20 மே 2021 | [1] |
2 | இசுடீபன் ஜேக்கப் ஜிம்பாங்கான் (Stephen Jacob Jimbangan) |
21 மே 2021 | 29 சனவரி 2023 | [6] |
3 | அஜிஜி நூர் (Hajiji Noor) |
5 பிப்ரவரி 2023 | பதவியில் | [7] |