சபா மாநில சட்டமன்றம் Sabah State Legislative Assembly Dewan Undangan Negeri Sabah | |
---|---|
16-ஆவது சட்டப் பேரவை | |
![]() சபா மாநில சட்டமன்றத்தின் சின்னம் | |
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1950 சட்டமன்ற மன்றம் 25 செப்டம்பர் 1963 மாநில சட்டமன்றம் |
தலைமை | |
யாங் டி பெர்துவா சபா (Yang di-Pertua Negeri) | சுகார் மகிருடின் Juhar Mahiruddin 1 சனவரி 2011 முதல் |
காட்சிம் எம். யாகயா (Kadzim M. Yahya) 8 அக்டோபர் 2020 முதல் | |
துணைப் பேரவைத் தலைவர் | அகமது அப்துல் ரகுமான் (Ahmad Abdul Rahman) 7 சூன் 2018 முதல் |
துணைப் பேரவைத் தலைவர் | சார்ஜ் அந்தோனி கினிபன் (George Anthony Ginibun) 26 சூன் 2018 முதல் |
முதலமைச்சர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 73 + 6 |
![]() | |
அரசியல் குழுக்கள் | திகதி (10.12.2022) அரசாங்கம் (46)
பாரிசான் (17)
நம்பிக்கை மற்றும் வழங்கல் (14) கேடிஎம் (3) எதிர்க்கட்சிகள் (10) சபாநாயகர் (1): |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 26 செப்டம்பர் 2020 |
அடுத்த தேர்தல் | 9 டிசம்பர் 2025 |
கூடும் இடம் | |
![]() | |
Sabah State Legislative Assembly Building Likas, Kota Kinabalu சபா மாநில சட்டமன்ற கட்டடம், லிக்காசு, கோத்தா கினபாலு | |
வலைத்தளம் | |
www |
சபா மாநில சட்டமன்றம் அல்லது சபா சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Negeri Sabah; ஆங்கிலம்: Sabah State Legislative Assembly; சீனம்: 沙巴州议会; டூசுன்: Langga' Tinukuan Pogun Sabah; ஜாவி: ديوان اوندڠن نڬري سابه ) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.[1]
மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான சபா மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி சபா மாநிலச் சட்டமன்றம் 73 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
சபா மாநிலத்தின் சட்டமன்ற முறைமை ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறைமையை (Westminster Parliamentary System) பின்னணியாகக் கொண்டது. சபா, கோத்தா கினபாலு மாவட்டம், கோத்தா கினபாலு, லிக்காசு (Likas), சபா மாநிலத்தின் (Sabah State Legislative Assembly Building) சபா சட்டமன்ற வளாகத்தில் மாநிலப் பேரவை கூடுகிறது.
2020 செப்டம்பர் 29-ஆம் தேதி, பெரிக்காத்தான் நேசனல் (PN); பாரிசான் நேசனல் (BN); மற்றும் ஐக்கிய சபா கட்சி (PBS) ஆகியவற்றைக் கொண்ட சபா மக்கள் கூட்டணி (GRS); சபா மாநிலத்தில் அரசாங்கத்தை அமைத்தது.
சபா மாநிலம், மக்களாட்சியைக் கொண்டது. 21 வயதிற்கும் மேற்பட்டவர்கள் அனைவரும், வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர். மாநிலத்தின் தேர்தலை நிர்ணயம் செய்யும் உரிமை மாநில அரசிற்கு இல்லை. அந்த உரிமை மத்திய அரசாங்கத்திற்கு மட்டும்தான் உண்டு. மிக அண்மைய சட்டமன்றம் 26 செப்டம்பர் 2020 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. சபா மாநில அரசமைப்புச் சட்டம் அனுமதித்துள்ளபடி, சபா ஆளுநர் மேலும் 6 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாகச் சேர்க்கலாம்.[2]
சபா மாநில சட்டமன்றம் சபா மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்துகிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்கிறது.
சபா மாநில சட்டமன்றம், சபா மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.[3]
மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.
நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். மாநில அரசு சாசனப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சபா சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
சபா மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் காட்சிம் எம். யாகயா (Kadzim M. Yahya). முதல்வரின் ஆலோசனையின் பேரில் சபா மாநில ஆளுநர் (Governor), சபாநாயகரை நியமிக்கிறார்.[4]
சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.[5][6]
சபாவின் மேற்குப் பகுதி மலைப் பிரதேசங்களால் சூழப்பட்டது. மலேசியாவின் மிக உயரமான மலைகளும் இங்குதான் உள்ளன. இதில் குரோக்கர் மலைத்தொடர் பிரதானமானது. இங்கே 1000 மீட்டர்களில் இருந்து 4000 மீட்டர்கள் வரையிலான பல மலைகள் உள்ளன. கினபாலு மலைதான் (Mount Kinabalu) மிகவும் உயரமான மலை. அதன் உயரம் 4095 மீட்டர்கள். சபா மாநிலத்தின் காடுகள், வெப்பமண்டல மழைக்காடுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மழைக்காடுகள், பலவகையான தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் புகலிடமாக அமைந்துள்ளன. இங்கே மாறுபாடான தாவரங்கள் காணப்படுகின்றன. வேறுபாடான நிலச்சுழல்களும் பரவி உள்ளன. அதனால், 2000ஆம் ஆண்டு, கினபாலு தேசிய பூங்கா (Kinabalu Park), உலக பாரம்பரியத் தளமாக (UNESCO World Heritage Site) வரையீடு செய்யப்பட்டது.[7]
கினபாலு மலைக்கு அருகில் தம்புயூகோன் மலை (Mount Tambuyukon) இருக்கிறது. இதன் உயரம் 2,579 மீட்டர்கள். இந்த மலை மலேசியாவில் மூன்றாவதாக உயரமானது. குரோக்கர் மலைத் தொடருக்கு அருகாமையில் துருஸ்மாடி மலை (Mount Trusmadi) இருக்கிறது. இது நாட்டின் இரண்டாவது உயரமான மலையாகும். இதன் உயரம் 2,642 மீட்டர்கள். இந்த மலைகளின் ஊடே பல ஆற்றுப் பள்ளத்தாக்குகளும், அடர்த்தியான காடுகளும் உள்ளன.
சபாவின் கிழக்கு பகுதி, பெரும்பாலும் சிறிய மலைத் தொடர்களைக் கொண்டவை. இந்தத் தொடர்களில்தான் கினபாத்தாங்கான் ஆறு (Kinabatangan River) உருவாகி, இறுதியில் சூலு கடலில் போய்க் கலக்கிறது. கினபாத்தாங்கான் ஆறு, மலேசியாவிலேயே இரண்டாவது நீளமான ஆறாகும். அதன் நீளம் 560 கி.மீ. ஆகும்.[8]
மலேசியா தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு இருந்து, 1966-ஆம் ஆண்டு வரை மலாயாவுடன் ஓர் எதிரான போக்கையே இந்தோனேசியா கடைபிடித்து வந்தது. தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில், பிரித்தானியர்களின் ஊடுருவல் விரிவடைந்து செல்வாக்கு அதிகரிப்பதாக இந்தோனேசியா அதிபர் சுகர்ணோ கருதினார். ஆகவே, போர்னியோ முழுமையும் இந்தோனேசியக் குடியரசின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்தார். ஆனால், அவருடைய வீயூகங்கள் வெற்றி பெறவில்லை.[9]
சபாவின் முதல் முதலமைச்சராக துன் புவாட் ஸ்டீபன்ஸ் (Tun Fuad Stephens) பதவி ஏற்றார். துன் முஸ்தாபா சபாவின் முதல் ஆளுநராகப் பொறுப்பேற்றார். 2020-ஆம் ஆண்டு வரை சபாவில் 16 மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.[10]
லபுவான் தீவும் அதைச் சுற்றி இருந்த ஆறு சின்னத் தீவுகளும் மலேசியக் கூட்டரசு அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டன. 1984 ஏப்ரல் 16-இல் லபுவான் தீவு, கூட்டரசு நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் கோத்தா கினபாலுவிற்கு மாநகர் தகுதி வழங்கப்பட்டது. மலேசியாவில் மாநகர் தகுதி பெற்ற நகரங்களில் கோத்தா கினபாலு ஆறாவது நகரம் ஆகும். சபா மாநிலத்தில் அதுவே முதல் மாநகரம் ஆகும்.
லபுவான் தீவிற்கு அருகாமையில் இருந்த சிப்பாடான், லிகித்தான் தீவுகளின் மீது இந்தோனேசியா சொந்தம் (Ligitan and Sipadan dispute) கொண்டாடி வந்தது. அதனால், சில போர் நெருக்கடிகள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் அபாயமும் ஏற்பட்டது.[11]
இந்த வழக்கு அனைத்துலக நீதிமன்றத்திற்கு (International Court of Justice) (ICJ) கொண்டு செல்லப்பட்டது. 2002-ஆம் ஆண்டு, சிப்பாடான், லிகித்தான் தீவுகள் மலேசியாவிற்குச் சொந்தமானவை என்று அனைத்துலக நீதிமன்றம் அறிவித்தது.
மலேசியாவுடன் ஓர் எதிரான போக்கைக் கடைபிடித்து வந்த இந்தோனேசியாவைப் போன்று, வடக்கு போர்னியோவின் கிழக்குப் பகுதியான சபா மாநிலம், பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சொந்தமானது என அந்த நாடு உரிமை கொண்டாடியது. 1963-ஆம் ஆண்டு மலேசியக் கூட்டரசுடன் இணைவதற்கு முன்பு, சபா என்பது வடக்கு போர்னியோ என்று அழைக்கப்பட்டு வந்தது.
சூலு சுல்தானகத்தின் மூலமாக பிலிப்பைன்ஸிடம் இருந்து, பிரித்தானிய வட போர்னியோ நிறுவனத்திற்கு, சபா நிலப்பகுதி குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், அந்தக் குத்தகை காலாவதியாகிப் போய்விட்டது. ஆகவே, முறைப்படி சபா என்பது பிலிப்பைன்ஸிற்குச் சொந்தமானது என ஐக்கிய நாட்டுச் சபையில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் அதில் எந்தவித நியாயமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.[12]
இருப்பினும், மிண்டனாவோ தீவில் இருக்கும் மோரோ முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு மலேசியா மறைமுகமான ஆதரவுகளை வழங்கி வருவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டி வருகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மோரோ மக்கள் சபாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சபாவில் வாழும் மக்கள் மலேசியாவுடன் இணைவதையே விரும்பினர். அவர்கள் பிலிப்பைன்ஸுடனோ அல்லது சூலு சுல்தானகத்துடனோ இணைவதை விரும்பவில்லை. கோபால்டு ஆணையத்தின் (Cobbold Commission) வாக்கெடுப்பின் மூலமாக அந்த உண்மை அறியப்பட்டுள்ளது. ஆகவே, பிலிப்பைன்ஸ் கோரிக்கை செல்லுபடியாகாது என்று ஐக்கிய நாட்டுச் சபை அறிவித்தது.[13]
அரசியல் சாசனப் படி சபா மாநிலத்தை யாங் டி பெர்துவா சபா எனும் ஆளுநர் (Governor) எனும் சபா மாநிலத்தை ஆட்சி செய்கின்றார். யாங் டி பெர்துவா என்பவரை மாண்புமிகு (ஆங்கிலம்: His Excellency; மலாய்: Tuan Yang Terutama (TYT) எனும் மரியாதை அடைமொழியில் அழைப்பது வழக்கம்.
சபா மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் சுகார் மகிருடின் (Juhar Mahiruddin). இவர் 2011 சனவரி 1-ஆம் தேதி பதவியேற்றார். சபா மாநிலத்தின் அரசியலமைப்பின் பிரிவு 1 (1)-இன் கீழ் (Article 1 (1) of the Constitution) யாங் டி பெர்துவா நெகிரி (ஆளுநர்) பதவி நிறுவப்பட்டது. சபா மாநிலத்தின் முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகு, மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் யாங் டி பெர்துவா சபா பதவிக்கான ஓர் ஆளுநர் நியமிக்கப் படுகிறார்.[14]
யாங் டி பெர்துவா சபா ஆளுநருக்கு துணை ஆளுநர்; அல்லது உதவியாளர் எவரும் இல்லை. இருப்பினும், நோய் அல்லது உடல்நலப் பாதிப்பு காரணமாக சபா மாநிலத்தை ஆட்சி செய்ய இயலாமல் போனால், அவரின் செயல்பாட்டைத் தொடர்வதற்கு, வேறு ஒரு நபரை நியமிக்கும் அதிகாரத்தை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் பெற்று உள்ளார்.
1965-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையிலான சபா மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[14][15] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)
நிலை | தோற்றம் | யாங் டி பெர்துவா | பதவி காலம் | ||
---|---|---|---|---|---|
பதவியேற்பு | முடிவு | சேவை செய்த காலம் | |||
1 | ![]() |
முசுதபா அருண் Mustapha Harun |
16 செப்டம்பர் 1963 | 16 செப்டம்பர் 1965 | 2 ஆண்டுகள், 0 நாட்கள் |
2 | ![]() |
பெங்கிரான் அகமது ரபி Pengiran Ahmad Raffae |
16 செப்டம்பர் 1965 | 16 செப்டம்பர் 1973 | 8 ஆண்டுகள், 0 நாட்கள் |
3 | ![]() |
புவாட் ஸ்டீபன்ஸ் Fuad Stephens |
16 செப்டம்பர் 1973 | 28 சூலை 1975 | 1 ஆண்டு, 315 நாட்கள் |
4 | ![]() |
முகமட் அம்டான் அப்துல்லா Mohd Hamdan Abdullah |
28 சூலை 1975 | 10 அக்டோபர் 1977 | 2 ஆண்டுகள், 74 நாட்கள் |
5 | ![]() |
அகமட் கோரோ Ahmad Koroh |
12 அக்டோபர் 1977 | 25 சூன் 1978 | 0 ஆண்டுகள், 256 நாட்கள் |
6 | ![]() |
முகமட் அட்னான் ரோபர்ட் Mohamad Adnan Robert |
25 சூன் 1978 | 31 திசம்பர் 1986 | 8 ஆண்டுகள், 189 நாட்கள் |
7 | ![]() |
முகமட் சாயிட் கெருவாக் Mohammad Said Keruak |
1 சனவரி 1987 | 31 திசம்பர் 1994 | 7 ஆண்டுகள், 364 நாட்கள் |
8 | ![]() |
சக்காரான் டாண்டாய் Sakaran Dandai |
1 சனவரி 1995 | 31 திசம்பர் 2002 | 7 ஆண்டுகள், 364 நாட்கள் |
9 | ![]() |
அகமட் சா அப்துல்லா Ahmadshah Abdullah |
1 சனவரி 2003 | 31 திசம்பர் 2010 | 7 ஆண்டுகள், 364 நாட்கள் |
10 | ![]() |
சுகார் மகிருடின் Juhar Mahiruddin |
1 சனவரி 2011 | இன்று வரையில் | தொடர்கிறது |
சபா மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) யாங் டி பெர்துவா சபா எனும் ஆளுநரைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாக குறைந்த பட்சம் 10 பேர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர். இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார்.
{{cite book}}
: Check date values in: |archivedate=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)