சபாஷ் நாயுடு

சபாஷ் நாயுடு
சபாஷ் குண்டு (இந்தி)
இயக்கம்கமல்ஹாசன்
தயாரிப்புகமல்ஹாசன்
சந்திரஹாசன்
ஏ. சுபாஸ்கரன்
கதைShashank Vennelakanti (Telugu)
Saurabh Shukla (Hindi)
திரைக்கதைகமல்ஹாசன்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
சுருதி ஹாசன்
பிரம்மானந்தம்
ரம்யா கிருஷ்ணன்
ஒளிப்பதிவுஜெய கிருஷ்ணா கம்மாடி
படத்தொகுப்புஜேம்ஸ் ஜோசப்
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
லைக்கா தயாரிப்பகம்
வெளியீடு2017
நாடு இந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு
இந்தி

சபாஷ் நாயுடு 2017 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்திய நகைச்சுவைத் திரைப்படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கில் சபாஷ் நாயுடு என்ற பெயரிலும், இந்தியில் சபாஷ் குண்டு என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார். இத்திரைப்படம் கமல்ஹாசன் ஏற்கனவே தசாவதாரம் திரைப்படத்தில் நடித்த வேடங்களில் ஒன்றான பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தினை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இதர முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு 2016 சூன் மாதத்தில் லாஸ் ஏஞ்சல்சில் தொடங்கியது.[4] இளையராஜா இசையமைப்பில், ஜெய கிருஷ்ணா கம்மாடி ஒளிப்பதிவில் உருவாகும் இத்திரைப்படம் 2017 ஆவது ஆண்டில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kamal Haasan’s next titled ‘Sabaash Naidu’". இந்தியன் எக்சுபிரசு. 2016-04-29. http://indianexpress.com/article/entertainment/regional/kamal-haasans-next-titled-sabaash-naidu-2775791/. பார்த்த நாள்: 2016-05-20. 
  2. "Kamal Haasan takes over as director"
  3. "Kamal Haasan launches 'sabaash Naidu' with fanfare". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-20.
  4. "Kamal Haasan starts shooting for Sabaash Naidu"

வெளியிணைப்புகள்

[தொகு]