சபிர் ரகுமான் (Sabbir Rahman (பிறப்பு:நவம்பர் 22, 1991) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார், இவர் ராஜ்ஷாசி மாகாணம் சார்பாக விளையாடி வருகிறார். சகலத் துறையரான இவர் வலது கை மட்டையாளர் மற்றும் இடது கை கழல் திருப்பப் பந்துவீச்சாளர் ஆவார்.[1] இவர் 19 வயதிற்கு உட்பட்ட வங்காளதேச அணியின் தலைவராக இருந்துள்ளார்.
இவர் வங்காளதேசத்தில் உள்ள சர்வதேச அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பயின்றார்.[2]
நவம்பர் 21, 2014 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் வங்காளதேச அணி சார்பாக அறிமுகமானார்.[3] 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வங்காளதேச வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இந்தத் தொடரில் வங்காளதேச அணி, ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குச் சென்றது. இறுதிப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணியிடம் தோல்வியடைந்தது. இந்தத் தொடரில் மொத்தம் 174 ஓட்டங்களை 44.00 எனும் சராசரியோடு எடுத்தார். அவரின் ஸ்டிரைக் ரேட் 123.94 ஆகும். மேலும் தொடர்நாயகன் விருதினையும் வென்றார்.[4] இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டியில் இலங்கை அணியினை முதல் முறையாக வங்காளதேச அணி வென்று சாதனை படைத்தது.[5][6]
அக்டோபர் 20, 2016 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[7]
வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் இவர் 122 ஓட்டங்கள் அடித்தார். இதுவே ஒரு தனிப்பட்ட வீரர் எடுத்த அதிக பட்ச ஓட்டம் ஆகும். இந்தச் சாதனையை கிறிஸ் கெயில் 2017 ஆம் ஆண்டில் முறியடித்தார்.[8]
2018-2019 ஆம் ஆண்டிற்கான வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் இவர் செல்ஹெட் சிக்சர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.[9]
சபிர் ரகுமான் பல ஒழுங்கீன பிரச்சினைகளில் சிக்கியுள்ளார். வங்காளதேச பிரீமியர் லீக் தொடர்களில் ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபட்டதற்காக ரகுமான் மற்றும் அல் அமீன் உசைன் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் 30 மற்றும் 50 விழுக்காடு தண்டனத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் 20 இலட்சம் அபராதமாக விதிக்கப்படட்து.[10] மாகாண துடுப்பாட்ட போட்டியில் தாகா மெட்ரோபொலிஸ் அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது இவருக்கு உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் 6 மாதங்கள் தடை விதித்தது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் கூச்சலிட்டதனால் அவரை சபிர் தாக்கினார். இது குறித்து மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது நடுவர் சபிர் உடல்ரீதியாக முறையற்று நடந்ததாகத் தெரிவித்தார்.[11][12]
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேச அணி தோற்றது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரண்டு ரசிகர்களுக்கு முகநூலில் சபிர் பிரச்சினை செய்ததற்காக வங்காளதேசத் துடுப்பாட்ட வாரியம் சூலை 28 இல் விசாரணை அமைத்தது.
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)