சபுரா சர்கர் | |
---|---|
பிறப்பு | 1993 (அகவை 31–32) கிஷ்த்வார் |
தேசியம் | இந்தியான் |
கல்வி | B.A, ஜீசஸ் மேரி கல்லூரி, டெல்லி பல்கலைகழகம் MA, M.Phil, ஜாமியா மில்லியா இஸ்லாமியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | டெல்லி பல்கலைகழகம் |
அறியப்படுவது | குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியதற்காக கைது செய்யப்பட்டார் |
சொந்த ஊர் | டெல்லி |
வாழ்க்கைத் துணை | சபூர் அகமத் சிர்வால் (தி. 2018) [1] |
சபுரா சர்கர் (பிறப்பு 1993) ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஓர் இந்திய மாணவர் தலைவர். இவர்குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டங்களில் கலந்துக் கொண்டதற்காக எல்லோரினாலும் அறியப்பட்டவர். இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் முதுதத்துவமாணி மாணவி ஆவார். மேலும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
டெல்லி கலவரத்தில் சதித்திட்டம் செய்தததாகவும், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று இவர் ஆற்றிய உரை சர்ச்சையனதும் என்று டெல்லி காவல்துறை இவரை கைது செய்தது. பின் இவர் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 முதல் ஜூன் 24 வரை திகார் சிறையில் காவலில் வைக்கபட்டிருதார்.[2][3] சபுரா கைது குறித்து கூறிய டெல்லி காவல்துறை "ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தகர்க்கும் நோக்கத்துடன்" சர்கார் ஒரு "மோசமான வடிவமைப்பில்" பேசியதற்காகவும், ஈடுப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது.[4]
டெல்லி உயர்நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று சபுரா சமர்பித்த நான்காவது ஜாமீன் விண்ணப்பத்தை ஏற்று ஜாமீன் வழங்கியது.[5] இவர் 2020 ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று விடுவிக்கப்பட்டார்.
சபுரா ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார்.[6] இவரது தந்தை ஓர் அரசு ஊழியர். இவரது தந்தை ஃபரிதாபாத்தில், பணி மாற்றம் செய்யப்பட்டதற்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் இவரது குடும்பத்தினர் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். அப்போது சபுராவுக்கு ஐந்து வயது.
டெல்லியில் உள்ள பள்ளியில் சபுரா சேர்ந்தபோது இவர் வகுப்பில் சபுரா தான் ஒரே ஒரு முஸ்லிம் மாணவர். 2018 ஆம் ஆண்டில் சர்கார் கூறியப்போது தான் ஐந்து வயதில் டெல்லி பள்ளியில் சேர்ந்தபோது சிலர் தன்னை "நீ ஒரு பயங்கரவாதி, மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்". என்றெல்லாம் கூறியுள்ளனர் என்றார்.
இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் இயேசு மற்றும் மேரி கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.[6][7] இவர் ஜாமியா மில்லியா இஸ்லாமியா (புது தில்லி) பல்கலைகழகத்தில் சமூகவியலில் எம்.ஏ. செய்தார். மேலும் 2019 ஆம் ஆண்டு முதுதத்துவமாணி தொடங்கினார்.[6]
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவரது தந்தை ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். மற்றும் இவரது தாயார் ஓர் இல்லத்தரசி ஆவார். இவருக்கு சமீயா என்ற சகோதரி உள்ளார்.[6][8]
சபுரா ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடகப் பிரிவில் உறுப்பினராக உள்ளார்.[9] டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, இவர் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். மேலும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் வாட்ஸ்அப் குழுவின் நிர்வாகியாகவும் இருந்தார் என்பதாகும்.[4] 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த CAA எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துக் கொண்டார். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 10, அன்று, இவர் காவல்துறை மற்றும் போராடிய மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது மயக்கம் அடைந்தார்.
சபுரா 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று டெல்லி காவல்துறையினரால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.[9] பிப்ரவரி 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தின் கீழ் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காகவும் மற்றும் சாலை மறியல் செய்தவர்களில் இவரும் ஒருவர் என்பதாக கூறி டெல்லி காவல்துறை இவரை கைது செய்தது. [a] ஏப்ரல் 11 ஆம் தேதி இவர் பெருநகர மாஜிஸ்திரேட் முன் கொண்டுவரப்பட்டு இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டார். ஏப்ரல் 13 அன்று இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் உடனடியாக மற்றொரு குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 20 அல்லது 21 அன்று இவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சேர்க்கபட்டது.
டெல்லி கலவரம் முன்பு திட்டமிட்ட கலவரமாகும் என்று டெல்லி காவல்துறை கூறியது. இது தொடர்பாக நடைபெற்ற அனைத்து கைதுகளும் அறிவியல் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன என்றும் டெல்லி காவல்துறை கூறியது. சபுரா மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மே மாதம் இவரிடம் நடத்திய பேட்டியின்படி: சபுரா காஷ்மீரி என்றாலும் காஷ்மீரியர்களுக்கு உண்டான அம்சங்களை இல்லாமல் வளர்க்கபட்டார். ஆரம்பகால வாழ்கையை பெரும்பாலும் டெல்லியில் கழித்ததால் இல்லாதது அல்லது டெல்லியில் பெரும்பாலும் வளர்க்கப்பட்டதால் காஷ்மீர் மொழியில் சரளமாக பேச முடியாது. இவர் இந்தியில் சரளமாக பேசுவர்.
"தன் காஷ்மீரி அடையாளத்தைப் பற்றி சபுரா பேசும் தருணத்தில் மக்கள் இவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். அல்லது இவரை வித்தியாசமாகப் பார்பார்கள்" என்பதால் இவர் பொதுவாக காஷ்மீரி என்பதை வெளிப்படுதுவதில்லை என்று கூறினார்.[6]
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று,[10] சபுரா கிஷ்த்வாரில் சபூர் அகமது சிர்வாலை மணந்தார். [b] இது இரு குடும்பத்தார்கள் ஏற்பாடு செய்த திருமணமாகும்[11] 2018 ஆம் ஆண்டு மே மாதம் அளித்த பேட்டியில், செப்டம்பரில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்திருந்ததாக கூறியிருந்தார்.
{{citation}}
: Check date values in: |archive-date=
(help)