நிறுவன கண்ணொட்டம் | |
---|---|
உருவாக்கம் | 2015 |
தலைமையிடம் | தோக்கியோ, யப்பான் |
Employees | சுமார் 370 |
Annual budget | 126.6 பில்லியன் யென் (2018 ஆம் ஆண்டில்) |
President | முனைவர் மகோடோ சுமேட்சு . |
Parent Agency | சப்பானிய அமைச்சரவை செயலகத்தின் சுகாதாரக் கொள்கை அலுவலகம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலன் மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் போன்ற துறைகள். |
Website | https://www.amed.go.jp/ |
சப்பான் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Japan Agency for Medical Research and Development) 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உருவாக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி பெற்ற சப்பானிய மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும்.[1] சப்பானிய அமைச்சரவை செயலகத்தின் சுகாதாரக் கொள்கை அலுவலகம், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலன் மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் போன்ற துறைகளால் இந்நிறுவனம் மேற்பார்வையிடப்படுகிறது.
சப்பான் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டோக்கியோவின் சியோடா நகர மாவட்டத்தில் ஒரு தலைமையகத்தையும் இலண்டன், சிங்கப்பூர் மற்றும் வாசிங்டன் டி.சி ஆகிய நகரங்களில் பன்னாட்டு அலுவலகங்களையும் கொண்டுள்ளது.[2][3]