சமதாத இராச்சியம் (Kingdom of Samatata) (or Samata) பண்டைய வங்காள இராச்சியங்களில் ஒன்றாகும். இந்தியாவின் பாரம்பரியக் காலத்தில், சமதாத இராச்சியம், பிரம்மபுத்திரா ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்துவாரப் பகுதியில் அமைந்திருந்தது.[1]சமதாத இராச்சியம், குப்தப் பேரரசில் பௌத்த மன்னர்கள் ஆண்ட சிற்றரசாக விளங்கியது.
பேரரசர் அசோகரின் மறைவுக்குப் பின்னர், மௌரியப் பேரரசின் வீழ்ச்சி காலத்தில் வங்காளத்தில் சமதாத இராச்சியம் நிறுவப்பட்டது. கிபி 335ல் சமுத்திரகுப்தர் ஆட்சியின் போது, சமதாத இராச்சியம் குப்தப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
சமதாத இராச்சியத்தை, கிபி எழாம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்த மன்னர்கள் ஆண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளது.
பண்டைய உரோமானிய புவியியல் அறிஞர் தாலமியின் கூற்றுப்படி, சமதாத இராச்சியத்தின் தலைநகராக, தற்கால டாக்கா அருகில் உள்ள சோனார்கோன் நகரம் விளங்கியது.[2]. கிபி ஏழாம் நூற்றாண்டின் சீன பௌத்த யாத்திரீகர் யுவான் சுவாங், சமதாத இராச்சியத்தின் தலைநகரமான சோனார்கோன் பிக்குகளின் மையமாக விளங்கியது எனக் கூறுகிறார்.