சமத்தோர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இந்தியாவில் நாகலாந்து மாநிலத்தில் சமத்தோர் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°06′N 94°54′E / 26.1°N 94.9°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | நாகாலாந்து |
நிறுவப்பட்ட நாள் | 04 மார்ச் 2022 |
தோற்றுவித்தவர் | நாகாலாந்து அரசு |
தலைமையிடம் | சமத்தோர் |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | நாகாலாந்து |
• மக்களவை உறுப்பினர்[1] | தோக்கியோ யெப்தோமி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி |
• மாவட்ட ஆட்சியர் | துசுவிசி போஜி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 34,223 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 202 |
சமத்தோர் மாவட்டம் (Shamator District) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த நாகலாந்து மாநிலத்தின் 16-வது மாநிலமாக 04 மார்ச் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2][3]இதன் நிர்வாகத் தலைமையிடம் சமத்தோர் நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகர் கோகிமாவிற்கு வடகிழக்கே 296 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இம்மாவட்டம் கிபைர் மாவட்டம் மாவட்டத்தின் சமத்தோர் வருவாய் வட்டப் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சமத்தோர் மாவட்ட மக்கள் தொகை 34,223 ஆகும்.
இம்மாவட்டப் பகுதியில் திக்கிர் நாகா மக்கள், யிம்கியுங்க் நாகா பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் சாஸ்சிர், லசிக்கியுர், லியாங்கோங்கர், மூலேங்ககியூர், சாங்க்பூர், சமத்தோர், வாப்பூர் மற்றும் யாக்கோர் போன்ற சிற்றூர்கள் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 202 இம்மாவட்டம் வழியாகச் செல்கிறது.
சமத்தோர் மாவட்டத்தின் வடக்கில் நோக்லாக் மாவட்டம், கிழக்கில் மியான்மர் நாடு, தெற்கில் கிபைர் மாவட்டம், மேற்கில் சுனெபோட்டோ மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.