சமா தொலைக்காட்சி | |
---|---|
உரிமையாளர் | பார்க் வியூ லிமிடெட் (அலீம் கான்)[1] |
நாடு | பாக்கித்தான் |
மொழி | உருது |
தலைமையகம் | கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான் |
சமா தொலைக்காட்சி (Samaa TV; உருது: سماء) பாக்கித்தானிய உருது மொழி செய்தி தொலைக்காட்சி ஆகும்.[2] 7 சதவீத சந்தைப் பங்கைக் கொண்ட பாக்கித்தானின் நான்காவது பெரிய செய்திச் தொலைக்காட்சி ஆகும். [3] "சமா" ("سما") என்றால் உருது மொழியில் 'வானம்' அல்லது 'சொர்க்கம்' என்று பொருள். கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், குவெட்டா, பெசாவர் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படுகிறது.[4][5]
சமா தொலைக்காட்சி 2007 இல் சாக் புரோட்காசுட்டிங் சிசுடம்சு என்ற தனியார் நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது. [6] 2020 ஆம் ஆண்டில், முன்னாள் மாகாண அமைச்சர் அலீம் கான், அவரது துணை நிறுவனமான பார்க் வியூ லிமிடெட் மூலம் சாக் ஒலிபரப்பு ஒருங்கியம் நிறுவனத்திடமிருந்து சமா தொலைக்காட்சியை வாங்கினார். [7]
உண்மைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு செய்திகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதாகவும், உணர்ச்சி உணர்வு மிக்க செய்திகளை நாங்கள் எதிர்ப்பதாகவும் சாமா தொலைக்காட்சி கூறுகிறது. இந்த தொலைக்காட்சியின் முழக்கம் 'சன்சானி நஹின், சிர்ஃப் கப்ரைன்' என்றால் உருது மொழியில் "உணர்ச்சி உணர்வுகள் இல்லை, செய்திகள் மட்டுமே" என்று பொருள். [8]
2022 ஆம் ஆண்டு சாமா தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் அதர் மதின் வடக்கு நசிமாபாத் கராச்சியில் ஒரு கொள்ளையின் போது கொல்லப்பட்டார். [9]