சமிக்கா கருணாரத்தின

சமிக்கா கருணாரத்தின
Chamika Karunaratne
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சமிக்கா கருணாரத்தின
பிறப்பு29 மே 1996 (1996-05-29) (அகவை 28)
கொழும்பு, இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 148)1 பெப்ரவரி 2019 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2014-2017தமிழ் யூனியன்
2017-இன்றுநொண்டெசுகிரிப்ட்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே மு.த ப.அ T20ப
ஆட்டங்கள் 1 30 20 10
ஓட்டங்கள் 22 1,020 126 63
மட்டையாட்ட சராசரி 11.00 24.28 18.00 15.75
100கள்/50கள் 0/0 1/- 0/0 -/-
அதியுயர் ஓட்டம் 22 100* 44 21*
வீசிய பந்துகள் 156 3,125 532 99
வீழ்த்தல்கள் 1 60 19 5
பந்துவீச்சு சராசரி 148.00 36.06 24.26 30.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/130 5/63 4/31 4/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 20/- 5/- 6/-
மூலம்: ESPNcricinfo, 5 பெப்ரவரி 2019

சமிக்கா கருணாரத்தின (Chamika Karunaratne, பிறப்பு: மே 29, 1996) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2015 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2015 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 31 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1041 ஓட்டங்களையும் , 37 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 273 ஓட்டங்களையும் , 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 22 ஓட்டங்களையும் 10 இருபது20 போட்டிகளில் விளையாடி 60 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

உள்ளூர் போட்டிகள்

[தொகு]

முதல் தரத் துடுப்பாட்டம்

[தொகு]

இவர் 2015 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டிசம்பர் 18 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் தமிழ்நாடு யூனியன் துடுப்பாட்ட சங்க அணிக்கு எதிரான போட்டியில் இவர் மூர்ச் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். [1]பின் 2019 ஆம் ஆண்டில் மே 25 இல் பேல்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் இந்திய அ துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இலங்கை அ துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். 2019 சூப்பர் மாகாண ஒரு நாள் போட்டியில் இவர் கொழும்பு அணியில் இடம் பெற்றார்.[2]

பட்டியல் அ

[தொகு]

2015 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். நவம்பர் 28 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் தமிழ்நாடு யூனியன் துடுப்பாட்ட சங்க துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் சராசென்ஸ் துடுப்பாட்ட சங்க அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2019 ஆம் ஆண்டில் நவம்பர் 18,இல் காக்ஸ் பசாரில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் ஆப்கானித்தான் லெவன் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் இலங்கை லெவன் அணி சார்பாக விளையாடினார்.

இருபது20

[தொகு]

2015 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டிசம்பர் 22 இல் கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் தமிழ்நாடு யூனியன் துடுப்பாட்ட சங்க அணிக்கு எதிரான போட்டியில் இவர் கொழும்பு துடுப்பாட்ட சங்க அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2018 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 25 இல் தம்புலா துடுப்பாட்ட அரங்கத்தில் காலி துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் கண்டி துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்

[தொகு]

2019 ஆம் ஆண்டில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். [3]பெப்ரவரி 1 இல் கான்பெராவில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இலங்கைத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் இவர் விளையாடினார்.[4][5]

குறிப்புகள்

[தொகு]
  1. "AIA Premier League Tournament, Group A: Tamil Union Cricket and Athletic Club v Moors Sports Club at Colombo (PSS), Dec 18-20, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
  2. "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament". The Papare. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  3. "Injured Chameera, Kumara to return home; Chamika Karunaratne named replacement". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 January 2019.
  4. "Chamika Karunaratne". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  5. "Chamika Karunaratne". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.