சமினா காயல் பெயிக் (ஆங்கிலம் : Samina Baig) ( உருது: ثمینہ خیال بیگ ) 1990 செப்டம்பர் 19 அன்று பிறந்த இவர் ஒரு பாக்கித்தானிய உயரமான மலைகளில் மலையேறுபவர் ஆவார். இவர் 2013 இல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். பின்னர் 2014 க்குள் அனைத்து ஏழு உயரமான சிகரங்களையும் ஏறியுள்ளார். எவரெஸ்ட்சிகரம் மற்றும் ஏழு மலையுச்சிகளை ஏறிய முதல் மற்றும் ஒரே பாக்கித்தான் பெண் இவர் ஆவார். 21 வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இளைய முஸ்லீம் பெண்மணியும் ஆவார்.
சமினா, 2010 ஆம் ஆண்டில் பாக்கித்தானின் சாஷ்கின் சார் (6,000 மீட்டருக்கு மேல்) என்ற சிகரத்தை முதன்முதலில் ஏறினார். பின்னர் அதற்கு சமினா சிகரம் என்று பெயரிடப்பட்டது. அவர் 2011 இல் 'கோ-இ-ப்ரோபார்' ('மலையின் சமத்துவம்') என்ற சிகரத்தை அடைந்தார். ஏழு கிலோமீட்டர் உயரமுள்ள ஸ்பான்டிக் சிகரத்தை ஏறும் பெயிக்கின் முயற்சி மோசமான வானிலை காரணமாக தோல்வியுற்றது.
பாகிஸ்தானின் கில்கிட்- பாக்கித்தானின் கில்கிட்-பால்தித்தானிலுள்ள அன்சா கோஜலில் உள்ள சிம்ஷால் கிராமத்தில் பிறந்த பெயிக், தனது சகோதரர் மிர்சா அலி என்பவரால் 15 வயதிலிருந்தே மலையேறுதலில் பயிற்சி பெற்றார். [1] [2] அவர் இளங்கலை பட்டம் பெற்ற மாணவி ஆவார். சமீனா தனக்கு நான்கு வயதாக இருக்கும்போதே மலையேறத் தொடங்கினார். [3] இமயமலையைத் தவிர, இந்து குஷ் மற்றும் காரகோரத்தின் சிகரங்களில் ஒரு மலை வழிகாட்டியாகவும், பயணத் தலைவராகவும் பெயிக் பணியாற்றி வருகிறார். பெயிக் 2009 முதல் ஒரு தொழில்முறை மலையேறுபவராக உள்ளார். ஆசாத் சம்மு-காசுமீர் மற்றும் கில்கிட் பால்த்திஸ்தானின் தொலைத் தொடர்பு இயக்ககமான சிறப்பு தகவல் தொடர்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) அவரை அதன் விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா ராவல்பிண்டியில் உள்ள சிறப்பு தகவல் தொடர்பு அமைப்பின் தலைமையகத்தின் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேஜர் ஜெனரல் அமீர் அஜீம் பஜ்வா மற்றும் சிறப்பு தகவல் தொடர்பு அமைப்பின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்
2013 மே19 அன்று எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்திய பெண்மணி மற்றும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை சமினா பெயிக் பெற்றார். எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதில் இந்திய இரட்டை சிறுமிகளான தாஷி மற்றும் நுங்ஷி மாலிக் ஆகியோரும் அவருடன் சேர்ந்து கொண்டனர். இந்தோ-பாக்கித்தான் நட்பு மற்றும் அமைதியின் செய்தியை பரப்புவதற்காக அவர்கள் ஒன்றாக இந்தியா மற்றும் பாக்கித்தானின் தேசியக் கொடிகளை உச்சத்தில் நட்டனர். மலையேறுவதற்கு முன்பு தனது சகோதரருடன் ஒரு நேர்காணலில்; இந்த பயணம் பாலின சமத்துவத்தின் நிரூபணம் என்றும் பெயிக் கூறினார். எவரெஸ்ட் சிகரம் சுமார் 248 மீட்டர் தொலைவே இருக்கும்போது சமினாவின் சகோதரர் மிர்சா அலி, பாக்கித்தானில் பெண் அதிகாரம் குறித்த செய்தியை அனைவருக்கும் முன்வைக்க, அவரது சகோதரி தனது ஆதரவின்றி தனியாக சிகரத்தை அடையட்டும் என்பதற்காக அவரை தனியே அனுப்பினார்.
எவரெஸ்ட் சிகரத்திற்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் பேரில் பியோண்ட் தி ஹைட்ஸ் என்ற ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டது.