பெண்ணிய இயக்கம் மேற்கத்திய சமூகத்தில் பெண்களை அதிக அளவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தச் செய்தல்; ஆண்களுக்கு இணையான ஊதியம்; விவாகரத்து நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான உரிமை; கருத்தரித்தல் தொடர்பான தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் பெண்களின் உரிமை ( கருத்தடை மற்றும் கருக்கலைப்பு அணுகல் உட்பட); மற்றும் சொத்து உரிமை , பெண்களின் வாக்குரிமை உட்பட பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.[1][2] ஆர்வர்டு உளவியல் பேராசிரியர் ஸ்டீவன் பிங்கர், பெண்ணியம் ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையைக் குறைத்துள்ளது, என்றும் பெண்ணிய நடவடிக்கைகளால் ஒரு பெண் தங்களுக்குத் தெரிந்த நபர்களால் கொல்லப்படுவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.[3] எவ்வாறாயினும், நான்காவது அலைப் பெண்ணியம் ஆண் வன்முறைகளை அதிகரிக்கச் செய்வதாகவும், பெண்களின் உரிமைகளுக்கு எதிரான விதத்திலும் அமைந்ததால் இது பெண்ணிய நடவடிக்கைகளின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.[4]
1960 களில் இருந்து, பெண்கள் விடுதலை இயக்கம் பெண்களின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தது, ஆண்களுக்கு இணையான ஊதியம், சட்டத்தில் சம உரிமைகள் மற்றும் அவர்களது குடும்பங்களை திட்டமிடுவதற்கான சுதந்திரம் ஆகிய பல உரிமைகளுக்காகப் போராடியது.இதில் சில வெற்ற்களும் சில தோல்விகளையும் அடைந்து ஒரு கலவையான வெற்றியினையே கொடுத்தது.[5] பெண்களின் உரிமைகள் பற்றிய கருத்துக்களுடன் தொடர்புடைய பொதுவான சிக்கல்கள் என்பது, ஒருங்கமைவுக் கட்டுப்பாடு மற்றும் தன்னாட்சி உரிமை மட்டுமல்லாது; வாக்களிக்க (உலகளாவிய வாக்குரிமை); பொது அலுவலக உரிமையாளராக; பணி செய்ய; நியாயமான ஊதியம் அல்லது சம ஊதியம்; சொந்தமான சொத்து வைத்துக் கொள்ள; கல்விக்கு; இராணுவத்தில் பணியாற்ற; சட்ட ஒப்பந்தங்களில் நுழைய; மற்றும் திருமண உரிமை, பெற்றோர் மற்றும் மத உரிமைகள் ஆகிய பல உரிமைகளைப் பெறுவதினை உள்ளடக்கியது ஆகும்.[6] சிறுவர்களுடனான பாலியல் முறைகேட்டில் இருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாதுகாக்க பெண்ணியவாதிகள் பணியாற்றியுள்ளனர்,[7][8][9][10] சிறுமிகள் மிகவும் இளமையாக இருந்தபோது கூட பெண்கள் ஆண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற முந்தைய நம்பிக்கையினை இவர்கள் எதிர்த்துப் போராடினர்.[11]
இங்கிலாந்தில், சட்ட சமத்துவத்திற்கு ஆதரவாக ஒரு பொது கருத்து வேகம் பெற்றது, நவீன இயக்கத்தின் போது, இரு உலகப் போர்களிலும் ஆண்களைப் போலவே பெண்களும் தங்களது பங்களிப்புகளை வழங்கினர். 1960 களில், நாடாளுமன்ற உறுப்பினர் வில்லி ஆமில்டன் ஆவ்ர்களின் குழுவானது வேலைவாய்ப்பில் சம உரிமை, ஒரே வேலை ஒரே கூலி எனும் மசோதா, பாலியல் உறவில் பாரபட்சத்திற்கு எதிரான மசோதா, 1973 ஆம் ஆண்டின் பச்சை அறிக்கை ஆகிய மசோதாக்களை சட்ட ரீதியிலாக பெண்களுக்கு உரிமை பெற்றுத் தரும் விதத்தில் சமர்ப்பித்தது. அதற்கு முன்னதாக 1975 வரை முதல் பிரித்தானிய பாலின பாகுபாடு சட்டம், சம ஊதிய சட்டம் மற்றும் சம வாய்ப்புகள் ஆணையம் ஆகியன நடைமுறைக்கு வந்தது.[12][13] இங்கிலாந்து அரசாங்கத்தின் ஊக்கத்துடன், EEC இன் பிற நாடுகள் விரைவில் ஐரோப்பிய சமூகம் முழுவதும் பாகுபாடு காட்டும் சட்டங்கள் படிப்படியாக நீக்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்துடன் இதைப் பின்பற்றின.
அமெரிக்காவில், அனைத்து பெண்களுக்கும் சமத்துவத்தை ஏற்படுத்த 1966 ஆம் ஆண்டில் பெண்களுக்கான தேசிய அமைப்பு சம உரிமை திருத்தத்திற்கு ( ERA ) போராடிய ஒரு முக்கியமான குழுவாகும். இந்தச் சட்டத்தின் மூலம் பாலியல் உறவில் சம உரிமை பெண்களுக்கு வழங்கப்படுவதனை எந்த மாநிலமும் மற்க்கவோ அல்லது உரிமைகளைக் குறைக்கவோ கூடாது என்று கூறியுள்ளது.[14]