சம்தர் சமஸ்தானம்

Warning: Value not specified for "common_name"
சம்தர் சமஸ்தானம்
सम्थार
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1760–1950

Coat of arms of

சின்னம்

தலைநகரம் சம்தர்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1760
 •  1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1950
Population
 •  1901 33,472 
தற்காலத்தில் அங்கம் ஜான்சி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா

சம்தர் சமஸ்தானம் (Samthar State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் சம்தர் நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், புந்தேல்கண்ட் பிரதேசத்தில் உள்ள ஜான்சி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சம்தர் சமஸ்தானம் 461 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 33,472 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு

[தொகு]

1760-ஆம் ஆண்டில் இரஞ்சித் சிங் என்பவரால் நிறுவப்பட்ட சம்தர் இராச்சியம், பின்னர் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சம்தர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தில், மத்திய இந்திய முகமையின் கீழிருந்த புந்தேல்கண்ட் முகமையில் செயல்பட்டது. சம்தர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் 1947 இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சம்தர் சமஸ்தானம் 1950-ஆம் ஆண்டில் ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று 1956 மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சம்தர் சமஸ்தானப் பகுதிகள் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஜான்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sir Roper Lethbridge (2005). The Golden Book of India: A Genealogical and Biographical Dictionary of the Ruling Princes, Chiefs, Nobles, and Other Personages, Titled Or Decorated of the Indian Empire. Aakar Books. pp. 475–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87879-54-1.

வெளி இணைப்புகள்

[தொகு]