சம்பாஜே Sampaje | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 12°29′38″N 75°33′57″E / 12.493762°N 75.565822°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | குடகு |
வட்டம் (தாலுகா) | மடிக்கேரி |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 21.8 km2 (8.4 sq mi) |
ஏற்றம் | 156 m (512 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,956 |
• அடர்த்தி | 140/km2 (350/sq mi) |
மொழி | |
• அலுவல் | கன்னடம் |
• Regional | துளுவம், குடகு மொழி, அரே பாசே |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 574234 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | KA 12 |
Nearest city | மடிக்கேரி |
இணையதளம் | {{URL|example.com|optional display text}} |
சம்பாஜே (Sampaje) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு மலைக் கிராமம் ஆகும்.[1][2] இது கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இது தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள மங்களூர் நகரத்தைக் குடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரி நகரத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-275-ல் அமைந்துள்ளது. இது குடகு மற்றும் தெற்கு கன்னடா இடையே உள்ள ஒரு எல்லை கிராமம்.
2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சம்பாஜேயில் 5304 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 2639 பேர் ஆண்கள் 2665 பெண்கள் ஆவர்.[1]
ஜி. எம். பி. பள்ளி சம்பாஜே கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியை வழங்குகிறது. 'சம்பாஜே பதவி பூர்வா கல்லூரி' கலைப் பிரிவில் பல்கலை முன்பட்ட கல்வியை வழங்கும் முக்கிய நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. 1966 சம்பாஜே உயர்நிலைப் பள்ளியை நிறுவப்பட்ட இந்நிறுவனம் பின்னர் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
விவசாயம் மக்களின் முக்கியத் தொழிலாகும். இயற்கை மீள்மம், பாக்கு, தென்னை, முந்திரி தோட்டங்கள் முக்கிய உற்பத்தி ஆதாரமாக உள்ளன. தேனீ வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது.
சம்பாஜே இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. சம்பாஜே பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் நிறைந்த ஒரு அழகான இடம். குரங்குகள், மயில்கள், மரங்கொத்திகள் மற்றும் பலவகையான மரங்கள் இப்பகுதியின் உயிர் பன்முகத்தன்மையை உருவாக்குகின்றன.
கன்னடம், துளு, கொடவா மற்றும் அரே பாஷே ஆகியவை இங்குப் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.