சரசாங்கி என்பது கருநாடக இசையில் 27வது மேளகர்த்தா இராகம் . அசம்பூர்ண மேள பத்ததியில் சௌரசேனா என்று பெயர்.[ 1]
சரசாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 3 வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2 ), அந்தர காந்தாரம்(க3 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், சுத்த தைவதம்(த1 ), காகலி நிஷாதம்(நி3 ) ஆகிய சுரங்கள் வருகிறன.
பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் களையை நன்றாகக் காட்டும்.
கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.
சர்வஸ்வர கமக வரிக இராகம்.
இதற்கு நேர் பிரதி மத்திம இராகம் லதாங்கி (63).
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம் . இதன் மத்திம, பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக தர்மவதி , சக்ரவாகம் ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.
சரசாங்கியின் ஜன்ய இராகங்கள் இவை.
திரையிசைப் பாடல்கள்[ தொகு ]
சரசாங்கி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
தானம்தன கும்மிகொட்டி :- அதிசயப் பிறவி
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய