சரசுவதி ஆறு (Saraswati River) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் பாயும் அலக்நந்தா ஆற்றின் துணை ஆறாகும். இது பத்ரிநாத் மணா கிராமத்திற்கு அருகிலுள்ள கேசவ் பிரயாகில் உள்ள அலக்நந்தா ஆற்றில் இணைகிறது. அலக்நந்தா ஆறு பாகீரதி ஆற்றுடன் உத்தரகண்டத்தில் உள்ள தேவப்பிரயாகையில் இணைகின்றது. இது கங்கை ஆற்றின் தொடக்கமாகிறது.[1][2] ஒரு இயற்கையான கல் பாலம், "பீம் புல்",[3] சரசுவதி ஆற்றின் குறுக்கே உள்ளது. இதனால் வசுதார அருவியும் சடோபந்த் தால் ஏரியும் தோன்றுகிறது. பீம் புல் என்பது மகாபாரதவீமனால் நிறுவப்பட்ட பாறை பாலம் என்றும் இது, திரெளபதியின் ஆற்றைக்கடக்க உதவியதாக உள்ளூர் வாசிகள் நம்புகின்றனர்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)