சரசுவதி சம்மான் விருது Saraswati Samman | |
---|---|
இதை வழங்குவோர் | கிருஷ்ண குமார் பிர்லா நிறுவனம்[1] |
தேதி | 1991 |
இடம் | தில்லி |
நாடு | இந்தியா |
வெகுமதி(கள்) | இந்திய ரூபாய்15,00,000 |
அண்மை விருதாளர் | சிவசங்கரி |
Highlights | |
மொத்த விருதாளர்கள் | 32 |
முதல் விருதாளர் | ஹரிவன்சராய் பச்சன் |
சரசுவதி சம்மான் விருது (Saraswati Samman) என்பது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் விருதாகும்.[1][2] 1991ஆம் ஆண்டு கே.கே. பிர்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. விருதாளருக்கு ரூபாய் பதினைந்து இலட்சம் இந்திய ரூபாயும்[3] மேற்கோளும் பட்டயம் ஒன்றும் விருதாக வழங்கப்படும்.[1][2][4]
இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படைப்பு இந்திய அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட ஆட்சி மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அமைந்திருக்க வேண்டும். விருது வழங்கப்படும் வருடத்திற்கு முந்தைய பத்தாண்டு காலகட்டத்தில் படைப்பாளி எழுதிய படைப்புகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அண்டு | படம் | விருதாளர் | பணி | மொழி | மேற். |
---|---|---|---|---|---|
1991 | ஹரிவன்சராய் பச்சன் | சுயசரிதை
(4 பாகங்கள்) |
இந்தி | [2][5] | |
1992 | இராமகாந்த் ரத் | "சிறீ இராதா" (கவிதை) |
ஒடியா | [2] | |
1993 | விஜய் தெண்டுல்கர் | "கன்யாதம்" (நாடகம்) |
மராத்தி | [2] | |
1994 | ஹர்பஜன் சிங் | "ருக் தே ரிஷி"
(கவிதை தொகுப்பு) |
பஞ்சாபி | [2] | |
1995 | பாலாமணியம்மா | "நிவேத்யம்"
(கவிதை தொகுப்பு) |
மலையாளம் | [2] | |
1996 | சம்சூர் இரகுமான் பரூக்கி | "ஷெர்-இ ஷோர்-அங்கேஸ்" | உருது | [2] | |
1997 | மனுபாய் பஞ்சோலி | "குருக்ஷேத்ரா" | குசராத்தி | [2] | |
1998 | சங்கர் கோசு | "கந்தர்ப கபிதா குச்சா"
(கவிதை தொகுப்பு) |
வங்காளம் | [2] | |
1999 | – | இந்திரா பார்த்தசாரதி | "ராமானுஜர்"
(விளையாடு) |
தமிழ் | [2] |
2000 | மனோஜ் தாஸ் | "அம்ருதா பலா"
(நாவல்) |
ஒடியா | [2][6] | |
2001 | தலிப் கவுர் திவானா | "கதா கஹோ ஊர்வசி"
(நாவல்) |
பஞ்சாபி | [2][7] | |
2002 | மகேசு எல்குஞ்ச்வார் | "யுகாந்த்"
(விளையாடு) |
மராத்தி | [2] | |
2003 | – | கோவிந்த் சந்திர பாண்டே | "பாகீரதி"
(கவிதை தொகுப்பு) |
சமசுகிருதம் | [2] |
2004 | சுனில் கங்கோபாத்யாயா | "பிரதம் ஆலோ"
(நாவல்) |
வங்காளம் | [2] | |
2005 | அய்யப்ப பணிக்கர் | "ஐயப்ப பணிகருடே கிருதிகள்"
(கவிதை தொகுப்பு) |
மலையாளம் | [2][8] | |
2006 | ஜெகன்னாத் பிரசாத் தாஸ் | "பரிக்கிரமா"
(கவிதை தொகுப்பு) |
ஒடியா | [9] | |
2007 | நாயர் மசூத் | "தாவோசு சமன் கி மைனா"
(சிறுகதைத் தொகுப்பு) |
உருது | [10][11] | |
2008 | இலட்சுமி நந்தன் போரா | "காயகல்பா"
(நாவல்) |
அசாம் | [12] | |
2009 | சுர்ஜித் பாதர் | "லஃப்சான் டி தர்கா" | பஞ்சாபி | [13] | |
2010 | எஸ். எல். பைரப்பா | "மந்த்ரா" | கன்னடம் | [4] | |
2011 | – | அ. அ. மணவாளன் | "இராம கதையும் இரமைகளும்" | தமிழ் | [14] |
2012 | சுகதகுமாரி | "மணஎழுத்து"
(கவிதை தொகுப்பு) |
மலையாளம் | [15] | |
2013 | கோவிந்த மிசுரா | "தூல் பௌதோ பர்"
(நாவல்) |
இந்தி | [16] | |
2014 | வீரப்ப மொய்லி | "ராமாயணம் மஹான்வேஷணம்"
(கவிதை) |
கன்னடம் | [17] | |
2015 | பத்மா சச்தேவ் | "சிட்-செட்டே"
(சுயசரிதை) |
துக்ரி | [சான்று தேவை] | |
2016 | மகாபலேசுவர் சாயில் | "ஹவ்தான்"
(நாவல்) |
கொங்கணி | [18] | |
2017 | சித்தான்சூ யாஷ்காசந்த்ரா | "வகார்"
(கவிதை தொகுப்பு) |
குசராத்தி | [19] | |
2018 | கே. சிவா ரெட்டி | "பக்காக்கி ஒட்டிகிலைட்"
(கவிதை) |
தெலுகு | [20] | |
2019 | வாசுதேவ் மோகி | "செக்புக்"
(சிறுகதைத் தொடர்) |
சிந்தி | [21] | |
2020 | சரண்குமார் லிம்பாலே | "சனாதன்" (நாவல்) | மராத்தி | [22] | |
2021 | இராம் தாராசு மிசுரா | "மெயின் டு யஹான் ஹுன்"
(கவிதை) |
இந்தி | [23] | |
2022 | | | சிவசங்கரி | "சூர்ய வம்சம்"
(நினைவுக் குறிப்பு) |
தமிழ் | [24] |