தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சரண்யா சதராங்கனி | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 3 சூலை 1995 பெங்களூர், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை சுழல்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 17) | 12 ஆகஸ்ட் 2020 எ. ஆஸ்திரியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 3 ஜூலை 2022 எ. நமீபியா | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
2014 | எசெக்ஸ் மகளிர் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 18 நவம்பர் 2022 |
சரண்யா "சாரு" சதராங்கனி ( Sharanya "Sharu" Sadarangani; பிறப்பு: ஜூலை 3, 1995) ஓர் இந்திய வம்சாவளி துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். இவர் ஜெர்மனி பெண்கள் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக இலக்குக் கவனிப்பாளராகவும், சில சமயங்களில் பந்து வீச்சாளராகவும் விளையாடுகிறார். முன்னதாக, இவர் சர்வதேச அளவில் டென்மார்க்கிற்காகவும், இங்கிலாந்து கவுண்டி துடுப்பாட்டத்தில் எசெக்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். 2020 ஆம் ஆண்டில், இவர் ஐரோப்பியத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் முதல் பெண் துடுப்பாட்ட வீரர் ஆனார்.[1] [2] [3]
சதராங்கனி, தனது சொந்த ஊரான பெங்களூரில் சிறுவயதில் துடுப்பாட்டத்தை விளையாடத் தொடங்கினார்.[3] இவர் தொடக்கப் பள்ளியில் படிக்கும் போது, தேசிய சங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்று சிறுவர் அணியில் விளையாடினார்.[4] ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது கதைகளை எழுதுவதில் சிறந்து விளங்கினார். இவர் கர்நாடகா துடுப்பாட்ட பயிற்சி நிறுவனத்தில் (KIOC) பயிற்சியாளராக இருந்தார். மேலும் இந்திய மகளிர் அணி துட்டுப்பாட்ட வீரரான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தலைமையின் கீழ் சில போட்டிகள் உட்பட பல முறை கர்நாடகா பெண்கள் 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் துடுப்பாட்ட அணிகளுக்காக விளையாடினார்.[3]
பெங்களூரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய பட்டப்படிப்பை முடித்த பிறகு, சதராங்கனி லிபரல் கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பைப் படிக்க இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸுக்குச் சென்றார். அங்கு, இவர் எசெக்ஸ் மகளிர் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் மற்றொரு கல்விப் பட்டம் பெற ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்தார், [3] அங்கு ஆங்கிலம் கற்பிக்கவும் இளம் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் தொடங்கினார். [1] அண்டை நாடான டென்மார்க்கில் உள்ள சில அணிக்காகவும் விளையாடத் தொடங்கினார். [1]
ஜூன் 2017 இல், சதராங்கனி டென்மார்க் தேசிய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2017 இல், பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் நடந்த ஐரோப்பிய மகளிர் இருபது20 போட்டியில் இலக்குக் கவனிப்பாளராக டென்மார்க்கிற்காக விளையாடினார். [6]
ஆகஸ்ட் 12, 2020 அன்று வியன்னாவுக்கு அருகிலுள்ள சீபார்ன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையிலான இருதரப்பு தொடரின் முதல் போட்டியில், சதராங்கனி ஜெர்மனிக்காகவும், பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமானார். 13 ஆகஸ்ட் 2020 அன்று நடைபெற்ற அந்த தொடரின் மூன்றாவது போட்டியில், இவர் ஜெர்மனிக்காக அதிகபட்சமாக 25 * ஓட்டங்கள் எடுத்தார், மேலும் போட்டியில் முதல் முறையாக விக்கெட்டையும் கைப்பற்றினார். [7]
8 ஜூலை 2021 அன்று, கிரெஃபெல்டில் உள்ள பேயர் உர்டிங்கன் துடுப்பாட்ட மைதானத்தில் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான மற்றொரு இருதரப்பு தொடரின் முதல் போட்டியில், சதராங்கனி முதல் முறையாக பந்துவீசினார். 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். அந்தத் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில், ஜூலை 10, 2021 அன்று விளையாடி, இவர் ஒரு பந்துவீச்சாளராக 6 க்கு 2 என்ற எண்ணிக்கையுடன் வெற்றி பெற்றார்.[8]அடுத்த மாதம், 2021 பெண்கள் பன்னாட்டு இருபது20 ஐரோப்பா தகுதிச் சுற்றில் ஜெர்மனியின் நான்கு போட்டிகளிலும் விளையாடினார். [9]
ஜெர்மனியில் ஆங்கில ஆசிரியையாக மூன்று வருடங்கள் பணியாற்றிய சதராங்கனி, தற்போது தேசிய சங்கத்தில் மக்கள் தொடர்புப் பணிகளை செய்து வருகிறார். ஜெர்மனிக்கு சென்ற பிறகு இவர் பின் என்பவரைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஆம்பர்க்கின் புறநகர்ப் பகுதியான சாசெலில் வசிக்கின்றனர்.[10]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)