சரதோக் (P205) மலேசிய மக்களவைத் தொகுதி சரவாக் | |
---|---|
Saratok (P205) Federal Constituency in Sarawak | |
சரதோக் மக்களவைத் தொகுதி (P205 Saratok) | |
மாவட்டம் | பெத்தோங் மாவட்டம் காபோங் மாவட்டம் |
வட்டாரம் | பெத்தோங் பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 44,531 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | பெத்தோங் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பெத்தோங், சரவாக் |
பரப்பளவு | 1,398 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1968 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அலி பிஜு (Ali Biju) |
மக்கள் தொகை | 41,339 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
சரதோக் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Saratok; ஆங்கிலம்: Saratok Federal Constituency; சீனம்: 沙拉托联邦选区) என்பது மலேசியா, சரவாக், பெத்தோங் பிரிவு;பெத்தோங் மாவட்டம்; காபோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P205) ஆகும்.[5]
சரதோக் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து சரதோக் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
பெத்தோங் பிரிவு (Betong Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரவாக் மாநிலத்தில் உள்ள நிர்வாகப் பிரிவுகளில் மிகச் சிறியப் பிரிவு.
மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.
பெத்தோங் பிரிவில் பெத்தோங் மாவட்டம்; சரதோக்கு மாவட்டம் என இரு மாவட்டங்கள் உள்ளன. பெத்தோங் பிரிவு சரிபாஸ் (Saribas) பகுதியில் உள்ளது. சரிபாஸ் அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு (Longhouses) பிரபலமானது; மற்றும் இபான் கலாசாரத்தின் மையமாகவும் கருதப் படுகிறது. சரிபாஸ் பகுதியில் 222 நீளவீடுகள் உள்ளன.[7][8]
சரதோக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சரதோக் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10][11] | |||
3-ஆவது மக்களவை | P131 | 1971-1974 | எட்மண்ட் லாங்கு சாகா (Edmund Langgu Saga) |
சரவாக் தேசிய கட்சி (SNAP) |
4-ஆவது மக்களவை | P141 | 1974-1976 | ||
1976-1978 | பாரிசான் நேசனல் (சரவாக் தேசிய கட்சி) (SNAP) | |||
5-ஆவது மக்களவை | 1978-1982 | |||
6-ஆவது மக்களவை | 1982-1986 | சுயேச்சை | ||
7-ஆவது மக்களவை | P164 | 1986-1990 | பீட்டர் திங்கோம் காமாராவ் (Peter Tinggom Kamarau) |
பாரிசான் நேசனல் (சரவாக் தேசிய கட்சி) (SNAP) |
8-ஆவது மக்களவை | P166 | 1990-1995 | ||
9-ஆவது மக்களவை | P178 | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | P179 | 1999-2004 | ||
11-ஆவது மக்களவை | P205 | 2004-2008 | ஜெலாயிங் மெர்சாட் (Jelaing Mersat) |
பாரிசான் நேசனல் (சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி) (PDP) |
12-ஆவது மக்களவை | 2008-2013 | |||
13-ஆவது மக்களவை | 2013 | வில்லியம் மாவான் இக்கோம் (William Mawan Ikom) | ||
2013-2016 | தெராஸ் (TERAS) | |||
2016-2018 | பாரிசான் நேசனல் (PBB)}} [12] | |||
14-ஆவது மக்களவை | 2018-2020 | அலி பிஜு (Ali Biju) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) (PKR) | |
2020-2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி) (BERSATU) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
அலி பிஜு (Ali Biju) | பெரிக்காத்தான் (PN) | 19,223 | 62.33 | 62.33 | |
கியெண்டாம் ஜொனாதன் தையிட் (Giendam Jonathan Tait) | சரவாக் கூட்டணி (GPS) | 10,397 | 33.71 | 33.71 | |
இபில் ஜெயா (Ibil Jaya) | பாக்காத்தான் (PH) | 1,221 | 3.96 | 48.22 ▼ | |
மொத்தம் | 30,841 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 30,841 | 98.56 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 452 | 1.44 | |||
மொத்த வாக்குகள் | 31,293 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 44,531 | 69.26 | 6.38 ▼ | ||
Majority | 8,826 | 28.62 | 24.26 | ||
பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [13] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)