சரத்பாபு | |
---|---|
பிறப்பு | சத்யம் பாபு டிக்சித்துலு 31 சூலை 1951 அமடலவலசை, சென்னை மாநிலம் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்), இந்தியா |
இறப்பு | மே 22, 2023 ஐதராபாது, தெலங்காணா | (அகவை 71)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1973–1923 |
வாழ்க்கைத் துணை | ரமா பிரபா (1974–1988 மணமுறிவு)[1] சினேகா நம்பியார் (1990–2011 மணமுறிவு) |
சரத்பாபு (Sarath Babu, 31 சூலை 1951 – 22 மே 2023) தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1973-இல் தெலுங்குத் திரைத்துறையில் நடிகனானார். அதன்பின்பு தமிழில் பட்டினப்பிரவேசம் என்ற கே. பாலசந்தரின் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இது வரை 200இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.
சத்தியம் பாபு தீக்சிதுலு என்ற இயற்பெயர் கொண்ட சரத் பாபு 31 சூலை 1951-இல் பிறந்தார்.[2][3]
ஏப்ரல் 2023 இல், சரத்பாபு கடுமையான நோயால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.[4] இந்நோய் காரணமாக இவர் மே 3 அன்று இறந்துவிட்டார் என்றும் பல வதந்திகள் வந்தன. இருப்பினும், இவர் உயிருடன் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் உறுதி செய்தன.[5][6] இவரது உறவினர்கள், பொதுமக்களிடம் சமூக ஊடக அறிக்கைகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்திருந்தனர்.[6]
சரத்பாபு கூறியதாகக் கூறப்படுகிறது;
என் அப்பா ஒரு உணவகத் தொழிலாளி, அவருடைய தொழிலை நான் கையாள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் நான் ஒரு காவல் அதிகாரியாக இருக்க விரும்பினேன். கல்லூரி நாட்களில், நான் குறுகிய நோக்கத்தை வளர்த்துக் கொண்டேன். தெளிவான நோக்கம் காவல்துறையில் சேர முன்நிபந்தனையாக இருந்ததால் என் கனவுகள் நொறுங்கின. என் அம்மாவிடம், மகன் அழகாக இருக்கிறான், அவன் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். என் கல்லூரி விரிவுரையாளர்களும் அதைத்தான் சொன்னார்கள். இதெல்லாம் என் மனதில் விளையாடியது. அதற்கு என் தந்தை எதிர்ப்பு தெரிவித்தாலும் அம்மா எனக்கு ஆதரவாக இருந்தார். நான் வியாபாரத்தில் ஈடுபடமாட்டேன் என்று என் மனதில் தெரிந்தது. நான் தோல்வியுற்றாலும் குடும்பத் தொழிலிலிருந்து பின்வாங்கலாம், நான் தொழிலுக்கு வரமாட்டேன் என்று என் மனதில் தெரிந்தாலும் அதைத்தான் நினைத்தேன். ஒரு திரைப்படத்திற்கான புதுமுகத் தேர்விற்கு செய்தித்தாளில் வந்த விளம்பரத்திற்கு நான் பதிலளித்தேன். நான் எதிர்பார்த்ததை விட மிக எளிதாக தேர்வில் தேர்ச்சி பெற்றேன். என்னுடைய முதல் நடிப்பு கே.பாலச்சந்தர் இயக்கிய தமிழ்ப் படத்தில்தான். இத்திரைப்படம் தெலுங்கில் இதி கத காடு என்று என்னுடன், கமல்ஹாசன், சிரஞ்சீவி ஆகியோரை வைத்து மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.[7]
உடல் நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரத்பாபு 2023 மே 22 அன்று தனது 71-ஆவது அகவையில் இறந்தார்.[8][9]
தமிழ் திரைப்படங்கள்
தெலுங்கு திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | நடிகர் | குறிப்புகள் |
---|---|---|---|
1981 | நண்டு | சுரேஷ் |
{{cite web}}
: Check date values in: |access-date=
and |date=
(help)
{{cite web}}
: CS1 maint: url-status (link)