சரளாதேவி ସରଳା ଦେବୀ | |
---|---|
![]() | |
பிறப்பு | நரிலோ கிராமம், ஒரிசா, வங்காள மாகாணம் | 9 ஆகத்து 1904
இறப்பு | 4 அக்டோபர் 1986 | (அகவை 82)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கைத் துணை | பகவதி மொகபாத்ரா (தி. 1917) |
பிள்ளைகள் | 1 மகன் |
சரளாதேவி (Sarala Devi, 9 ஆகத்து 1904 – 4 அக்டோபர் 1986) இந்திய சுதந்திர இயக்க ஆர்வலர், பெண்ணிய சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1921ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றில் சேர்ந்த முதல் ஒடிசா பெண்மணி ஆவார். சுதந்திர இந்தியாவில் ஒடிசா சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண். ஒடிசா சட்டமன்றத்தி்ன் முதலாவது பெண் பேச்சாளராகவும் கட்டாக்கின் கூட்டுறவு வங்கியின் முதல் பெண் இயக்குநராகவும், உப்கால் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் செனட் உறுப்பினராகவும், இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஒடிசா பெண் பிரதிநிதியுமாகவும் இருந்தார்.
சரளாதேவி 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று பாலிக்குடாவுக்கு அருகே நாிலோ கிராமத்தில் பிறந்தார். அப்போது வங்காள மாகாணத்தின் ஒரிசா பிாிவு (இப்போது ஒடிசாவில் உள்ள ஜாக்சிங்ஷ்பூர் மாவட்டத்தில்) சமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பசுதேவ் கனுங்கோ மற்றும் அவரது தாயார் பத்மாவதி தேவி ஆவார்.[1][2][3][4][5][6] அவரது தந்தையின் மூத்த சகோதரரான பாலமுகுந்த கனுங்கோ, துணைக் கலெக்டரால் வளா்க்கப்பட்டார். சரளாதேவி தனது தொடக்கக்கல்வியை பங்கிவில் பெற்றார். அந்த நேரத்தில் உயா்கல்விக்கு பெண்களுக்கு எந்த அணுகலும் இல்லை. அதனால் அவளுடைய மாமா ஒரு ஆசிரியரை வீட்டுக்கு வரவழைத்து அவளுக்கு பயிற்றுவித்தார். சரளாதேவி வங்காளம், சமற்கிருதம், ஒடியா ஆகிய மொழிகளைப் பயின்றார். வங்கியில் பணியாற்றிய போது சரளாதேவி விடுதலை இயக்கத்தில் சேர பங்கி என்ற இடத்தின் ராணியாகிய சுகாதேவியின் கதைகளால் ஈர்க்கப்பட்டார்.[7]
1917ல் பகவதி மகாபத்ராவை மணந்தாா். 1918 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். மகாத்மா காந்தியின் ஒரிசா முதல் பயணத்தைத் தொடா்ந்து 1921ல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தார்.[8] 1943 முதல் 1946 வரை கட்டாக்கில் உள்ள உட்கால் சாஉறிதி சமாஜின் செயலாளராக பணியாற்றினார். சரளாதேவி 30 புத்தகங்களையும் 300 கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[9][10]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)