சரவாக் கம்யூனிச கிளர்ச்சி

சரவாக் கம்யூனிச கிளர்ச்சி
Communist insurgency in Sarawak
Pemberontakan Komunis di Sarawak
மலேசிய ஒப்பந்தம், இந்தோனேசியா - மலேசியா மோதல், மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989) பனிப்போர்
பகுதி

கம்யூனிச கெரில்லாக்களுடனான ஒத்துழைப்பைத் தடுப்பது; இந்தோனேசிய ஊடுருவல்காரர்களிடம் இருந்து பாதுகாப்பது; சீனர் கிராமவாசிகளுக்கு ஆயுதம் ஏந்திய வீரர்களின் பாதுகாப்பு (1965)
நாள் டிசம்பர் 1962 – 3 நவம்பர் 1990[1][2]
இடம் சரவாக், மலேசியா
  • 1973 சிமாங்கோங் அமைதிப் பிரகடனம்[3][4]
  • வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி கலைப்பு (SCO/NKCP).[1]
பிரிவினர்
கம்யூனிச எதிர்ப்பு படைகள்:
 ஐக்கிய இராச்சியம்[5]

 மலேசியா[1]

ஆதரவு:
 ஆத்திரேலியா
 புரூணை
 நியூசிலாந்து
 ஐக்கிய அமெரிக்கா


 இந்தோனேசியா (1965-க்கு பின்னர்)[1]

கம்யூனிசப் படைகள்:
வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி[6]
  • சரவாக் மக்கள் கெரில்லா படை (SPGF)[7]
  • வடக்கு கலிமந்தான் மக்கள் இராணுவம் (NKPA)[7]

 இந்தோனேசியா (1962–65) (இராணுவ உதவி)[1]
வேறு ஆதரவு:
புரூணை மக்கள் கட்சி

  • வடக்கு கலிமந்தான் தேசிய இராணுவம் (NKNA)

மலாயா கம்யூனிஸ்டு கட்சி

ஆதரவு:
 சீனா[7]
 வட வியட்நாம் (1975 வரை)
 வட கொரியா[8][9]

தளபதிகள், தலைவர்கள்
வால்டர் வாக்கர் (1962–1965)
துங்கு அப்துல் ரகுமான்
அப்துல் ரசாக் உசேன்
உசேன் ஓன்
மகாதீர் பின் முகமது
இசுடீபன் காலோங் நிங்கான் (1963–1966)
தாவி சிலி (1966–1970)
அப்துல் இரகுமான் யாக்கோப்பு (1970–1981)
அப்துல் தாயிப்பு முகமது (1981–1990)
பிரிகேடியர் ஒசுமான் இபுராகிம்
பிரிகேடியர் உங்கு நசருதின்

சுகார்த்தோ (from 1965)
தளபதி வித்தோனோ

போங் கீ சோக்
யாங் சு சுங்
வென் மிங் சியுவான்
யாப் சூன் ஆவ்
லாம் வா குவாய்
அங் சு டிங்
வோங் லியெங் குய்
சியுங் ஆ வா

சுகர்ணோ (until 1965)
ஏ. எம். அசாரி
யாசின் அபாண்டி
சின் பெங்

பலம்
1,500+ ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் வீரர்கள்[10][11]

10,000 (1968)
3,000+ இந்தோனேசிய வீரர்கள்[12]

600–1,000+ guerilla fighters[10][13]

இந்தோனேசிய ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை தெரியவில்லை[7][10]

இழப்புகள்
99 பேர் கொல்லப்பட்டனர்
144 பேர் காயமடைந்தனர்

≈2,000 இந்தோனேசிய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்[7](கணிப்புகள்)

----

நூற்றுக்கணக்கான இந்தோனேசிய ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டனர்

≈19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்[10][14]
Statistics source:[15]

சரவாக் கம்யூனிச கிளர்ச்சி (ஆங்கிலம்: Communist Insurgency in Sarawak (MA63); மலாய்: Pemberontakan Komunis di Sarawak; சீனம்: 砂拉越共產黨叛亂) என்பது 1962--ஆம் ஆண்டில் இருந்து 1990-ஆம் ஆண்டு வரை மலேசியாவில் நடைபெற்ற ஒரு கிளர்ச்சி ஆகும். இந்தக் கிளர்ச்சி இந்தோனேசியா, வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சிக்கும் (North Kalimantan Communist Party) மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கும் (Malaysian Government) இடையே நடந்தது.

பனிப்போர் (Cold War) காலத்தில் முன்னாள் பிரித்தானிய மலேசியாவிற்குச் (British Colony of Malaysia) சவால் விடுத்த இரண்டு கம்யூனிச கிளர்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். ஏற்கனவே 1948–இல் இருந்து 1960 வரை மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency) போது ஒரு கம்யூனிச கிளர்ச்சி நடைபெற்று உள்ளது.

சரவாக்கின் கம்யூனிசக் கிளர்ச்சியில், பெரும்பாலும் சீனர்கள். சரவாக் கம்யூனிச கிளர்ச்சியாளர்களாகச் (Sarawak Communist Insurgents) செயல்பட்டனர். இவர்கள் சரவாக் மீதான பிரித்தானிய சரவாக் முடியாட்சியை எதிர்த்தனர்; பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட மலேசியா கூட்டமைப்புடன் சரவாக் மாநிலத்தை இணைப்பதையும் எதிர்த்தனர். அத்துடன் 18-அம்ச உடன்படிக்கையை முற்றாக நிராகரித்தனர்.[2]

பொது

[தொகு]

சரவாக் கம்யூனிச கிளர்ச்சியானது; 1962-ஆம் ஆண்டு புரூணை கிளர்ச்சியின் (1962 Brunei Revolt) மூலமாகத் தூண்டப்பட்டது. மலேசியா உருவாக்கத்திற்கு முன்மொழியப்பட்ட (Proposed Formation of Malaysia) பரிந்துரைகளைப் புரூணையின் இடதுசாரி புரூணை மக்கள் கட்சி (Brunei People's Party) எதிர்த்தது. அந்த எதிர்ப்பின் மூலமாக சரவாக் கம்யூனிச கிளர்ச்சி உருவகம் பெற்றது.[5]

1965-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியா அரசாங்கமும், சரவாக் கம்யூனிச கிளர்ச்சியாளர்களை ஆதரித்து வந்தது. இருப்பினும், மேற்கத்திய சார்பு கொண்ட அதிபர் சுகார்த்தோ (Pro-Western President), இந்தோனேசியாவின் அதிபர் அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் ‎மலேசியாவுடனான மோதலை (Indonesia–Malaysia Confrontation) ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.

வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி

[தொகு]

சரவாக்கின் கம்யூனிச கிளர்ச்சியின் போது, வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியில் இரண்டு முக்கிய இராணுவப் படைகள் உருவாக்கப்பட்டன:

‎இந்தோனேசியாவின் மலேசியா மீதான மோதலின் முடிவைத் தொடர்ந்து, இந்தோனேசிய இராணுவப் படைகள் மலேசிய இராணுவப் படைகளுடன் ஒத்துழைக்கத் தொடங்கின. அத்துடன் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளிலும் (Counter-Insurgency Operations) ஒத்துழைப்பை வழங்கின.[1][5]

கட்டுப்பாட்டுப் பகுதிகள் உருவாக்கம்

[தொகு]

சரவாக்கில் முன்பு சரவாக் விடுதலை இயக்கம் (Sarawak Liberation League) (SLL); சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (Sarawak Advanced Youths' Association) (SAYA) உட்பட பல கம்யூனிச மற்றும் இடதுசாரி குழுக்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. அதன் மூலம், 1970 மார்ச் மாதம் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி நிறுவப்பட்டது.[7]

கிளர்ச்சியை அமைதிப்படுத்தும் வகையில், 1965-ஆம் ஆண்டு, சரவாக் முதல் பிரிவு மற்றும் மூன்றாம் பிரிவுப் பகுதிகளில்; கூச்சிங் - செரியான் சாலையில் மலேசிய மத்திய அரசு பல கட்டுப்பாட்டுப் பகுதிகளை (Controlled Areas) உருவாக்கியது.

சரவாக் முதல்வரின் அமைதிப் பேச்சுவார்த்தை

[தொகு]

அந்தக் கட்டத்தில் (1973 - 1974) சரவாக் முதல்வராக இருந்த அப்துல் ரகுமான் யாகூப் (Abdul Rahman Ya'kub); வடக்கு கலிமந்தன் கம்யூனிச கட்சி கிளர்ச்சியாளர்களைச் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடச் செய்தார். அந்த வகையில் கிளர்ச்சியாளர்கள் பலர் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

1989-இல் மலேசிய அரசாங்கத்திற்கும்; மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் (Malayan Communist Party) இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அதைத் தொடர்ந்து, எஞ்சியிருந்த வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி கிளர்ச்சியாளர்கள் 17 அக்டோபர் 1990-இல் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் சரவாக் கம்யூனிச கிளர்ச்சி முறைப்படி ஒரு முடிவுக்கு வந்தது.[7][2]

பின்னணி

[தொகு]
சரவாக் மக்கள் கெரில்லாப் படை (Sarawak People's Guerilla Force), வடக்கு கலிமந்தான் தேசிய இராணுவம் (North Kalimantan National Army) மற்றும் இந்தோனேசிய தேசிய ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் (Indonesian National Armed Forces) சேர்ந்து எடுத்துக் கொண்ட படம்

தீபகற்ப மலேசியாவில் 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மலேசிய கம்யூனிச கிளர்ச்சியை (Communist insurgency in Malaysia (1968–89) தவிர, போர்னியோ தீவில் உள்ள மலேசிய மாநிலமான சரவாக் மாநிலத்திலும் மற்றொரு கிளர்ச்சி உருவாக்கப்பட்டது.[16]

சரவாக்கில் உள்ள கம்யூனிச இயக்கங்கள், பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் (Japanese Occupation of British Borneo) போது ’சரவாக் எதிர்ப்பு பாசிச இயக்கம்’ (Sarawak Anti-Fascist League) என்ற ஒரு இயக்கத்தின் மூலமாக முதலில் செயல்பட்டு வந்தன. இந்த இயக்கம் ஒரு தளர்வான இயக்கம் (Loose Movement). 1942-ஆம் ஆண்டில் இருந்து இந்த இயக்கத்தின் வேர்களைக் கண்டறிய முடிகிறது.

சரவாக் விடுதலை இயக்கம்

[தொகு]

1949-இல் மக்கள் சீனக் குடியரசு (People's Republic of China) நிறுவப்பட்ட பிறகு, சரவாக் வெளிநாட்டுச் சீன சனநாயக இளைஞர் கழகம் (Sarawak Overseas Chinese Democratic Youth League) உருவாக்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டில், சரவாக் விடுதலை இயக்கம் (Sarawak Liberation League) (SLL) போன்ற பல சிறிய கம்யூனிச குழுக்களை உள்வாங்கி, சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (Sarawak Advanced Youths' Association) உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1971-இல் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி (North Kalimantan Communist Party) நிறுவப்பட்டது.[17]

சரவாக் கம்யூனிச இயக்கங்கள் பெரும்பாலும் சீன இனத்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. உள்நாட்டுப் பழங்குடி மக்களிடம் இருந்து அதிக ஆதரவைப் பெற இயலவில்லை. ஏறக்குறைய 10% தயாக்கு ஆதரவாளர்களை (Dayak People) சேர்த்துக் கொள்ள முடிந்தது.[18]

மலாய்க்காரர்கள் ஆதரிக்கவில்லை

[தொகு]

மலாய்க்காரர்கள் மற்றும் பிற பூர்வீக சரவாக் இனத்தவர்களிடம் இருந்து சிறிய அளவிலான ஆதரவை மட்டுமே பெற முடிந்தது. இருப்பினும் தயாக்கு மக்களைச் சேர்த்துக் கொள்ள வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.[19][17][19]

1964-ஆம் ஆண்டில், வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியில், நன்கு பயிற்சி பெற்ற கம்யூனிச பங்கேற்பாளர்கள் 800 - 1,000 பேர் இருந்ததாக அரசாங்க சான்றுகள் மதிப்பிட்டுள்ளன. தவிர சரவாக் கம்யூனிச இயக்கங்களில் ஒட்டு மொத்தமாக 24,000 பங்கேற்பாளர்கள் இருந்தனர்.[20]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Francis Chan; Phyllis Wong (16 September 2011). "Saga of communist insurgency in Sarawak". The Borneo Post. http://www.theborneopost.com/2011/09/16/saga-of-communist-insurgency-in-sarawak/. 
  2. 2.0 2.1 2.2 Cheah Boon Kheng pp. 132–52
  3. Wilfred Pilo (3 November 2013). "The day the insurgency ended". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 5 September 2015.
  4. Wilfred Pilo (5 August 2014). "Former enemies meet as friends 40 years later". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.
  5. 5.0 5.1 5.2 Fowler, Will (2006). Britain's Secret War: The Indonesian Confrontation 1962–66. London: Osprey Publishing. pp. 11, 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84603-048-2.
  6. Cheah Boon Kheng, p.149
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 Hara, Fujiol (December 2005). "The North Kalimantan Communist Party and the People's Republic of China". The Developing Economies XLIII (1): 489–513. doi:10.1111/j.1746-1049.2005.tb00956.x. 
  8. Geoffrey Jukes (1 January 1973). The Soviet Union in Asia. University of California Press. pp. 173–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-02393-2.
  9. Kurt London (1974). The Soviet Impact on World Politics. Ardent Media. pp. 153–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8015-6978-4.
  10. 10.0 10.1 10.2 10.3 "Communist Guerrillas Push Government Into Campaign in Borneo's Town, Jungles". Spartanburg Herald-Journal. Herald-Journal. 2 September 1971. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
  11. Doreena Naeg (10 October 2010). "The forgotten warriors". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
  12. Hugh Mabbett (18 March 1971). "Quit homes, 17,000 told". The Age. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
  13. Michael Richardson (28 March 1972). "Sarawak Reds kill 13 soldiers". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
  14. Conny Banji (21 February 2012). "The night communists killed hero of Ulu Oya". The Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
  15. Peter O'loughlin (20 February 1974). "Malaya rebels on move again". The Age. Associated Press. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
  16. National Intelligence Estimate 54–1–76: The Outlook for Malaysia (Report). Central Intelligence Agency. 1 April 1976.
  17. 17.0 17.1 Justus, M; Kroef, VD (February 1964). "Communism and the Guerrilla War in Sarawak". Royal Institute of International Affairs 20 (2): 50-60. https://www.jstor.org/stable/40393581. பார்த்த நாள்: 17 December 2022. 
  18. Robin Corbett, 124
  19. 19.0 19.1 Howe Yong, Kee (2013). "3: The Sri Aman Treaty". The Hakkas of Sarawak - Sacrificial Gifts in Cold War Era Malaysia. University of Toronto Press. pp. 70, 71, 75. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3138/9781442667976-005. பார்க்கப்பட்ட நாள் 18 September 2022.
  20. Robin Corbett, 124

மேலும் காண்க

[தொகு]

முதன்மைச் சான்றுகள்

[தொகு]

நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]